Monday, August 31, 2009

இந்நாள் சுதந்திரச் சிந்தனைக்காக.. அறிஞர் அண்ணா உரை விருந்தாக..

நமது நேசத்திற்குரிய நன்நாடாம் மலேசியத் திருநாட்டின் 52ஆம் சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடி மகிழும் மலேசியர்கள் அனைவருக்கும் திருத்தமிழ் வழி எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்நாளில் நமது அனைவருடைய சிந்தனைக்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையினை இங்கே பதிவிடுகின்றேன்.

1965இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் இங்கு வந்தார். அப்பொழுது, மலேசியத் தமிழ் மக்களுக்காக சொன்ன சிந்தனைகளை இன்றைய தலைமுறைகளும் அறிந்துகொள்வதற்கு இது உதவும். அதோடு, பேரறிஞர் அண்ணாவின் கூற்று இன்றும் நமக்குத் தேவையான சிந்தனை ஊற்றாகவும் இருக்கிறது.

இந்த அறிமுகத்தோடு, இன்றைய விடுதலைக் கொண்டாட்ட நாளில், பேரறிஞர் அண்ணாவின் அன்றைய உரையைக் கேட்போம்; உளமாற சிந்திப்போம். உண்மை மலேசியராய் ஒன்றுபட்டு வாழ்வோம்.



பேரறிஞர் அண்ணா மலேசியாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்க மலேசியத் தமிழர்கள் கடலலையென திரண்டனர். மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்த 15,000க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் முன்னிலையில் "உலகமெங்கிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள்" என்று அண்ணா பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

அண்ணா மலேசியாவுக்கு வந்ததன் நினைவாகப் பேரா மாநிலத்தில் பாரி நதி (Sungai Pari) எனுமிடத்தில் ஒரு பாலத்திற்கு அவருடைய திருப்பெயர் (*Jambatan C.N.Annadurai) சூட்டப்பட்டுள்ளது குறிக்கத்தக்க வரலாறு.
*Jambatan (மலாய்மொழி) = பாலம்

3 comments:

அ. நம்பி said...

//மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்த 15,000க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் முன்னிலையில்...//

மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்தவர்களுள் நானும் ஒருவன்.

விடுதலை நாள் வாழ்த்துகள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் அ.நம்பி ஐயா,

//மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்தவர்களுள் நானும் ஒருவன்.//

மிக்க மகிழ்ச்சி. அன்றைய தமிழர்கள் உணர்வு இன்று இருக்கிறதா?

இந்த இனத்தின் தேய்மானங்களைச் சரியாகச் சொல்லக்கூடியவர்களுள் உங்களையும் ஒருவராக மதிக்கிறேன்.

அ. நம்பி said...

//அன்றைய தமிழர்கள் உணர்வு இன்று இருக்கிறதா?//

இல்லை.

அன்றும் `நோய்கள்' இருந்தன; ஆனால் உயிரைக் குடிக்கும் நோய்களின் எண்ணிக்கை இன்றுபோல் அல்லாமல் குறைவாகவே இருந்தன.

//இந்த இனத்தின் தேய்மானங்களைச்...//

உண்மை.

வளர்ச்சி உண்டு; ஆனால் குறைவு; தேய்மானங்களே மிகுதி.

Blog Widget by LinkWithin