Thursday, October 30, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)


(மலேசியாவில் நல்லதமிழை முன்னெடுக்கும் ஏடாகிய 'உங்கள் குரல்' திங்களிதழில் அதன் ஆசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய கட்டுரை)


தமிழ் சோறு போடுமா? இப்போதெல்லாம் இப்படி வினவுவது தமிழரில் பலருக்குப் புது மரபாகி(Trend) விட்டது.

தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற சிலர், தங்களின் 'முன்போக்கை' வெளிப்படுத்தும் முயற்சியில், வாயினிக்க எழுப்பும் வழக்கமான வினா இது. இவர்கள் சோறு உண்பது மட்டுமே வாழ்க்கை என்றும், எது சோறு போடுமென்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வதுதான் வெற்றிக்கு வழி என்றும் கருதுபவர்கள்.

இன்னும் கொஞ்சம் நாளில் இவர்கள், சமயம் சோறு போடுமா? பண்பாடு சோறு போடுமா? உண்மை சோறு போடுமா? ஒழுக்கம் சோறு போடுமா? என்று வரிசையாக வினாக்களை எழுப்பி இவற்றுள் எதுவுமே சோறு போடாது என்றும், எனவே இவையெல்லாம் தேவையில்லை என்றும் கூறத் தொடங்கினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்தச் சோற்றுப் பட்டாளத்தை நோக்கி நாமும் சில வினாக்களை எழுப்பலாம்.

1.தமிழ் என்பது மொழி. மொழியின் முதற்பயன் நம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தவும் பிறர் கருத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவும் கருவியாக இருப்பது. இந்தப் பணியைச் சரியாகவும் திறம்படவும் செய்வதில் வேறு எந்த மொழியையும் விடத் தமிழ் தாழ்ந்ததன்று.

2.இன்று அனைத்துலக மொழியாக முதனிலை பெற்றுள்ள ஆங்கிலத்தையும் மிஞ்சிய கருத்துக் தெளிவு கொண்டது தமிழ். எடுத்துக் காட்டுகள் எத்தனையோ உள. ஆங்கில வாக்கியத்தில் "யூ" (You) என்னும் சொல் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆங்கிலத்தில் ஒருவருக்கும் பலருக்கும் அந்த ஒரே சொல்தான் பயனீட்டில் உண்டு. தமிழில் நீ என்றும் நீங்கள் என்றும் தனித்தனி சொல் உண்டு. அ•றிணையான 'அவை'க்கும் உயர்திணையான 'அவர்'களுக்கும் ஆங்கிலத்தில் 'தேய்' (They) என்னும் ஒரே சொல்தான். மாமாவும் 'அங்கிள்'தான் சிற்றப்பாவும் 'அங்கிள்'தான். அத்தையும் 'ஆண்டி'தான். சிற்றன்னையும் 'ஆண்டி'தான்.

3.மலேசியாவில் நடந்த முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மறைந்த பேராசிரியர் தனிநாயக அடிகள் ஒரு வினா எழுப்பினார். "நீ உன் தந்தைக்கு எத்தனையாவது பிள்ளை?" என்றும் வினாவை ஆங்கிலத்தில் ஒரே வாக்கியத்தில் கூற இயலுமா என்றார். இன்று வரை முடியும் என்று யாரும் முன்வந்து விளக்கக் காணோம்.

4.இன்றைய அறிவியலுக்குத் தேவையான பல சொற்கள் தமிழில் இல்லையே என அலுத்துக் கொள்கிறார்கள் சிலர். அன்றைய அறிவியல் ஆக்கங்களுக்கான சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் முன்னரே இருந்தனவா என்ன? ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் ஆங்கிலத்திலேயே செய்யப்படுவதால் அவற்றுக்கான புதிய சொற்களும் அதிலேயே உருவாக்கப்படுகின்றன.

5.பாதிக்குமேல் பிறமொழிச் சொற்களை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலத்தில் புதிய சொற்களை உருவாக்க முடியும்போது தன்காலிலேயே நிற்கவல்ல தமிழில் அதைச் செய்ய முடியும். அப்படிச் செய்யாமலிருப்பது தமிழரின் குறையே அன்றித் தமிழின் குறையன்று.

1.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)

10 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

வணக்கம் ஐயா,

ஏற்கனவே இந்தக் கட்டுரை மலேசிய நண்பனில் தமிழ் சோறு போடும் எனும் தலைப்பில் வந்ததாக ஞாபகம். ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இன்று நமது இந்தியர்கள் சிலர் வீட்டில் தமிழ் படித்து என்ன இருக்கு, பேச தேறிந்தால் போதும் எனும் நோக்கில் பிள்ளைகளை சீன பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

அதே போல சிலர் நான் தமிழ் படிக்காமல் போய்விட்டேன் என வருந்துகிறார்கள். ஆனால் படிப்பிற்கு வயது வரம்பில்லை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம் என தெரியாமலா இருக்கும். படிகாமல் போய்விட்டேன் என தன்னை ஆறுதல் படித்திக் கொள்ளச் சொல்வதாகவே இப்போதெல்லாம் கருதத் தோன்றுகிறது. தமிழ் படிக்கமால் போனது வருத்தமாக உள்ளது என சொல்லி அனுதாபம் தேடுபவரை கண்டால் எரிச்சல் தான் வருகிறது.

VIKNESHWARAN ADAKKALAM said...

அடுத்த பகுதியை எதிர்பார்கிறேன்...

Anonymous said...

ஐயா,
இலக்கிய செறிவு கொண்ட நம்ப மொழி மனதைச் செம்மைப் படுத்தும்.உணர்ந்தவோர் அறிவர்.கழக இலக்கியங்களில் மனித நேயத்தை உணரலாம்.

பாரதி கண்ட கனவைப் போல் நடப்பு அறிவியல் தொழில்நுட்ப அய்வுகளைத் தமிழில் மொழிப்பெயர்த்தால் சோறும் போடும்.

sinna sayabu said...

aandaandu kaalamaai anniyaruku adimaigalai irunthavargal naam. naatadimai,moliadimai,inadimai, samyaadimai ippadityaaga,,, sendra noottraandil than Periyaar,Paavanar,Paaventhar,Anna, KoSa pondra sandrorgal nammai meettedut thaargal.Annavin tidir maraivu namminattitku perilappu,,,,,,

sinna sayabu said...

eelathil poralivu-tamil nyaalatil seeralivu kolathil vaaltidinum-undran kolatil peralivo tannina patrum vittaai-uyar thaaimoli anbum attrai unnai nee aalvatharke-indru oolkettu poyinayo sontham maranthuvittu-entha sokku podil pattu vanthavar kaaladikke-endrum vaalthu malar kuvittaai innum ettanai kaalamada-pirar echil ilai eduppai pittam telinthuvidu-indrel settu tolainthu vidu ippadi vaalvethendral-tamilan engindra peraividu mudinthaal virainthu mulumanam tirunthu padintha karaiellam paarthullam varunthu tamilmana palipil taalndhu amilumun adangi arivu kol muyandru!!! NANDRI-unggalkural

Sathis Kumar said...

தமிழராய் இருந்தும் தமிழைக் கற்க ஆயிரத்தெட்டு காரணங்களை உரைப்பவர்களை சோம்பேறிகள் என்று கூறுவதைவிட வேறென்ன கூறமுடியும்..

விருப்பமில்லாதவர்களை விட்டுத் தொலைப்போம். விரும்பி தமிழ் கற்க வருபவர்களுக்கு சொல்லிக் கொடுப்போம்..

Anonymous said...

தமிழைப்பற்றி தங்களுடைய கருத்த்தைப் படித்தேன். எங்கோ படித்த ஞாபகம்...இருந்தாலும் பரவாயில்லை காலத்திற்கேற்றது..தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு..யாராவது முடிந்ததால் வானவில் மற்றும் THR ராகா'வில் ஏற்படும் தமிழ் கொலையை தடுத்து நிறுத்த பாருங்களேன்...இங்கே என்னை காலத்துடன் ஒத்து போகாதவன் என்கின்றார்கள்...என்ன செய்ய?????

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர்கள் விக்கினேசு, சதீசு இருவரின் மறுமொழியில் காணும் குமுகாய நோக்கு நன்று..!


*****

திருத்தமிழ் அன்பர் பகுத்தறிவன், சின்ன சயாபு இருவரின் முதல் வருகையை மகிழ்வோடு வரவேற்கிறேன்.

//செத்து தொலைந்துவிடு
இப்படி வாழ்வதென்றால் - தமிழன் என்கின்ற பெயரைவிடு// என்ற சின்ன சயாபுவின் வரிகள் மிக நன்று! தங்களுக்கு நன்றாக கவிதை வருகிறது. தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் மறுமொழிகளைக் கவிமொழியில் தாருங்கள்..!

*****

திருத்தமிழ் அன்பர் திருமூர்த்தி சுப்பிரமணியம்,

உங்களை வரவேற்று மகிழ்கிறேன். உங்கள் மறுமொழிக்கு நன்றி.

உங்கள் 'தேடுபவன்' வலைப்பதிவு கண்டேன். வலை உலகில் நீங்கள் தனி முத்திரை பதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

நல்ல படைப்புகளை நயமாகக் கொடுத்து.. மலேசிய வலைப்பதிவு சோலையைச் செழிக்கச் செய்யுங்கள்!

உங்கள் வலைப்பதிவை 'திருமன்றில்' நூலகத்தில் விரைவில் இணைப்பேன்.

Anonymous said...

உங்களின் அன்பான அரவணைப்புக்கு நன்றி. தொடரட்டும் நம் நட்பு..கற்போம்......கற்பிப்போம்.....புரட்சி செய்வோம்

நாகு (Nagu) said...

எனக்கு தமிழ் சோறு போட்டிருக்கிறது. அமெரிக்காவில் வந்த ஊரில் நோய்வாய்ப்படும்போதும், குழந்தைகள் பிறந்தபோது ஊரிலிருந்து யாரும் உதவிக்கு வரமுடியாத நிலையில், தமிழ்தான் சோறு போட்டது :-)

Blog Widget by LinkWithin