Wednesday, July 28, 2010

தமிழுக்குப் பொருளியல் மதிப்பு உண்டு

நாளது 14.07.2010இல் பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை நாளிதழில் செய்தியாக வந்தது. அதனை இங்குப் பதிவிடுகிறேன். - சுப.ந

பாரிட் புந்தார் ஜூலை 15,

உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாகிய பில் கேட்சின் மைக்ரோ சொப்ட் உள்ளிட்ட கணினி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தமிழுக்குப் பொருளியல் மதிப்பு உண்டு என்பதை உணர்ந்துள்ள காரணத்தால் அவை மிக வெற்றிகரமாக தமிழைச் சந்தைப்படுத்தி வெற்றிப்பெற்றுள்ளன என்று செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடைபெற்ற உலகக் கணினி மாநாட்டில் கட்டுரை படைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சுப.சற்குணன் தெரிவித்தார்.


உலகின் மிகப் ¦ÀâÂô பணக்கார நிறுவனமாகிய பில் கேட்சின் மைக்§Ã¡ ¦º¡ப்ட், கூகிள், யாகூ மெக்கிந்§¾¡Š, லினிக்Š,§¿¡க்கியா முதலான கணினிò ¦¾¡ழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இன்று தமிழைச் சந்தைப்படுத்தி ¦À¡ÕÇ¢Âø ¿¢¨Ä¢ø ¦ÅüÈ¢ô¦ÀüÚûÇÉ.இதன் மூலம் §¸¡டிக்கணக்கில் பணத்தை ஈட்டி வருகின்றனர்.உலக அளவில் ¦À¡ருளாதார மதிப்பு இருப்பதால்தான் விண்§¼¡Š §À¡ன்ற கணினி மென்¦À¡ருள்களில் ¬ங்கிலத்§¾¡டு சேர்ந்து தமிழும் இடம்பெற்றுள்ளது.


இதே ¦À¡ருளியல் மதிப்பை உணர்ந்துள்ளதால் §¿¡க்கியா §À¡ன்ற கைப்பேசிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளன. இன்று ஆங்கிலத்திற்கு இணையாக தமிழ்¦Á¡ழி இணையத்தில் §¸¡§Ä¡ச்சி வருகின்றது எýபது உண்மை ±ýÚ þíÌ À¡Ã¢ð Òó¾¡÷ ¾Á¢Æ¢Âø ¿ÎÅò¾¢ø ¾Á¢Æ¢Âø ¬ö×ì ¸Çõ,¾Á¢ú Å¡úÅ¢Âø þÂì¸í¸Ç¢ø ²üÀ¡ðÊø ¿¨¼¦ÀüÈ Á¡¿¡ðÎô ÀÂý¸¨Çô À¸¢÷óÐ ¦¸¡ñ¼ì Üð¼ò¾¢ø ÍÀ.ºü̽ý §Áü¸ñ¼Å¡Ú ¦¾Ã¢Å¢ò¾¡÷.


அண்மையில் §¸¡வையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்¦Á¡ழியில் புதிய புதிய ¦¾¡ழில் நுட்பங்களை காண முடிந்தது. புதுப்புது மென்¦À¡ருள்கள், கணினி நிரலிகள் உருவாகி உள்ளன. முதன்முறையாக ¦¾¡டுதிரை கணினியை அந்த மாநாட்டில் காண முடிந்தது. பலரும் மிக வியப்புடன் அதனைப் பயன்படுத்தினர்.

கற்றல் கற்பித்தல் ¦¾¡டர்பாக பல ஆக்கங்கள் இன½யத்தில் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் தமிழுக்குப் ¦À¡ருளாதார மதிப்பு இருப்பதைப் பறைசாற்றுகின்றன. இன்று உலக அளவில் தமிழ்¦Á¡ழி வணிக ¦Á¡ழியாக வளர்ந்துள்ளது என்பதற்கு கணினி, இணையம் சார்ந்த வளர்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் நல்ல சான்றாக உள்ளன.


தமிழைப் ¦À¡ருளியல் மதிப்புள்ள ¦Á¡ழியாக வளர்த்தெடுக்க மலேசியத் தமிழர்களும் பாடாற்றியுள்ளனர். குறிப்பாக முத்து நெடுமாறன் முரசு தமிழ் மென்¦À¡ருளை வெளியிட்டு உலகச் சந்தையில் வணிகப்படுத்தி இருக்கிறார். மலேசியாகினி இன½யத்தளம் §Á¡பைல்கினி என்ற கைப்பேசி குறுஞ்செய்தி சேவையைத் தமிழில் ஏற்படுத்தி தமிழ்¦Á¡ழியைப் ¦À¡ருளியல் மதிப்புள்ள ¦Á¡ழியாக உருவாக்கியுள்ளது.


தமிழ் §º¡று §À¡டுமா? என்றும் தமிழுக்குப் ¦À¡ருளாதார மதிப்பு உண்டா?’ என்றும் இன்று தமிழர்களே கேட்க ¦¾¡டங்கிவிட்டனர்.ஆங்கிலம் உலக ¦Á¡ழி. அதை கற்றால்தான் முன்னேற்றலாம் என்று நம்புகின்றனர். அதனால் தமிழைப் புறக்கணிக்கின்றனர்.


எந்த ¦Á¡ழியும் தானாக வலிமை பெறுவது இல்லை, ¦À¡ருளாதார மதிப்பு பெறுவது இல்லை. ஆங்கிலம் உலக¦Á¡ழி ஆனது ஆங்கிலேயனால் தானே தவிர, அந்த ¦Á¡ழியினால் அல்ல. சீனம் வணிக ¦Á¡ழியாக இந்த நாட்டில் இருக்கிறது என்றால் சீனர்களின் முனைப்பினால்தா§É தவிர, சீன ¦Á¡ழி தானாக அப்படி ஆகவில்லை.



இதேபோல், தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும், பொருளியல் மதிப்பு பெற வேண்டுமானால் தமிழர்கள் அதை நோக்கி சிந்தித்து செயல்பட வேண்டும்.அதைவிடுத்து, தமிழுக்கு ஒன்றுமே செய்யாமல் அல்லது தமிழில் எதையும் செய்யாமல், எல்லாச் சூழலிலும் தமிழை முன்படுத்தாமல் வாளாவிருந்துவிட்டு தமிழ் வளரவில்லை என்று குறை சொல்லுவது சரியல்ல என சுப.சற்குணன் குறிப்பிட்டார்.

  • நன்றி:மக்கள் ஓசை (22.07.2010)


Monday, July 26, 2010

செம்மொழி மாநாட்டு உரை:- மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்


மலேசியாவிலிருந்து செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு, கட்டுரை படைத்தவர்களுள் தமிழ் ஆய்வியல் அறிஞர் இர.திருச்செல்வம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர். இவர் படைத்த கட்டுரையும் அருமையானது மட்டுமல்ல; இதுவரை எவரும் ஆய்வாக வெளியிடாத அரியதும் கூட. அவருடைய உரையின் நிகழ்ப்படத்தைக் காணும் முன்னர், அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.
ஐயா இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்தம் வழித்தடத்தில், பன்மொழிப் புலவர் இரா.மதிவாணருக்கும் சொல்லாய்வறிஞர் ப.அருளியார், கு.அரசேந்திரன் போன்றோருக்கு அடுத்து - தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.

தமிழ் இலக்கண இலக்கியத்தில் பரந்துபட்ட புலமையும், மொழி ஆய்வுக்குரிய உலக மாந்த ஒப்பாய்வு ஆழமும் பெற்றவர். தமிழ், சமற்கிருதம், மலாய், ஆங்கிலமொழி ஆற்றலும்; ஆங்கிலத்தைச் சார்ந்து இலத்தீன், கிரேக்கம், செருமானியம், இசுபானியம் முதலான மேலைநாட்டு மொழிகளில் தொடர்ந்த பயில்வும்; இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான திரவிட மொழிகளை நூல்வழி கற்றுணர்ந்த திறமும்; இவற்றோடு உருது, அரபு, சீனம், சப்பானியம் முதலிய இன்னுஞ்சில மொழிகளில் புது முயல்வும் கொண்டவராக விளங்கும் அரும்பெறல் ஆற்றலாளர்.

மாநாட்டில் இவர் வாசித்தளித்த கட்டுரை 'மலாய்மொழிச் சொற்களில் காணும் தமிழ்மொழி வேர்கள்' பற்றினதாகும். இதுவரையிலும் மேலோட்டமாக மலாயில் காணும் முழு தமிழ்ச் சொற்களை மட்டுமே பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், மலாய் அறிஞர்களும் வியந்து நோக்கும் வகையில் வேர்ச்சொல் நிலையில் தமிழுக்கும் மலாய்க்கும் உறவு மூலம் இருப்பதை இந்தக் கட்டுரை நிறுவுகிறது. மறைந்துபோன சில தமிழ்ச்சொல் வடிவங்களை மலாய்மொழி வெளிப்படுத்துகிறது. முன்னைத் தமிழரும் மலாய்மாந்தரும் ஒவ்வொரு மூலக்கருத்தின் இழையறாமல் சொற்புனைந்து அளித்துள்ள அறிவுநுடபம் அதிநுட்பமாக உள்ளதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

ஐயா இர.திருச்செல்வம் அவர்களின் உரை அடங்கிய நிகழ்படம் இதோ:-

பகுதி 1:- (5.52 நிமயத்தில் உரை தொடங்குகிறது)

பகுதி 2:-

பகுதி 3:-


பி.கு:-மலேசியத் தமிழர்கள் செம்மொழி மாநாட்டில் படைத்த கட்டுரைகளின் நிகழ்படங்கள் தொடர்ந்து திருத்தமிழில் வெளிவரும்.

Wednesday, July 21, 2010

தமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து

கோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ‘தமிழர் அல்லாத’ அறிஞர்கள்தான். அவர்கள் கட்டுரை வாசித்தார்கள் கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி அழகாகத் தமிழ் பேசினார்கள். ‘வணக்கம்’ நலமாக இருக்கிறீர்களா?’ என்று கரம் குவிக்கிறார்கள்.


எப்போதுமே நாம் அடுத்தவர் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். “தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?” என்று அவர்களிடம் கேட்டோம்.




உல்ரிச் நிக்கோலஸ் (ஜெர்மனி) :-
“நிலாச்சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம், என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால் அவர்களும் வளர்வார்கள், தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன? தமிழை அழித்தததைத் தவிர!”


சைமன் (நெதர்லாந்து)
ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே, இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!”


டிமிடா (ஜெர்மனி)
தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல் மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே. அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப் போகும்.


தாம்ஸ் லேமன் (ஜெர்மனி)
ஆந்கிலத்தில் பேசினால்தான் கவுரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மத்தில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம். தமிழனாய் வாழ்வோம்.


கலையரசி (சீனா)
இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம் கொள்கிறீர்கள். பிறகு மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன். என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்? நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும். தமிழகத்திலிருந்து ஒளி பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனிதில் பதியும்? ஆகவே ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்!


பிருந்தா பெர் (கனடா)
சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணையில்லாத வலிமை, கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும். அது சுவையுடன் இருத்தல் அவசியம்.



அஸ்கோ பர்போலா (பின்லாந்து)
பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு ‘உலகமயமாக்கல்’ என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்குத் தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’ என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா? எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்.


அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா)
உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்… பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது. அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.


கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்)
இது போன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்புணர்பை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்!”


ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா)
நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழிச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!”


  • நன்றி:- விடுதலைமலேசியாஇன்று

Monday, July 19, 2010

செம்மொழி மாநாடு:- மலேசியக் கவிஞர் சீனி நைனா முகம்மது பேச்சு



செம்மொழி மாநாட்டில் மலேசியாவிலிருந்து கலந்துகொண்டவர்களில் உங்கள் குரல் இதழாசிரியரும் பாவலருமாகிய கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.


"தமிழ்ச் சொற்புணர்ச்சிக் கோட்பாடுகளும் புதிய விதிகளும்" எனும் தலைப்பில் கவிஞர் ஐயா மாநாட்டில் தம்முடைய கட்டுரையைப் படைத்தார். அதன் நிகழ்படம் (Video) கீழே தரப்பட்டுள்ளது. கண்டு மகிழ்க!


பகுதி 1:- (3.38ஆவது நிமயத்தில் கவிஞரின் உரை தொடங்குகிறது)

பகுதி 2:-

பகுதி 3:-


பகுதி 4:-




செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, 06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிஞர் சீனி நைனா முகமது, பிரான்சு பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா ஐ.இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.


கவிஞர் சீனி ஐயா, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.


தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில் cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.


முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில் 'ல்' என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.


செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். ‘அசத்தப் போவது யாரு?’ என்ற தலைப்பினை விமர்சித்த அவர், அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே எனக் கேட்டார்.


தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில் தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.
  • நன்றி:- ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செய்தி [வல்லமை மின்னிதழ்]

Wednesday, July 14, 2010

செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்கள்

சூன் 23 – 27 கோவையில் பெருமாண்டமாக நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தமிழகப் பேராளர்களுக்கு அடுத்த நிலையில் மலேசியாவிலிருந்துதான் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் தமிழ்க் கல்வி அதிகாரிகள், தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம், தமிழ் நெறிக் கழகம், அரசியல் தலைவர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் என 350க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் மலேசியத் தமிழர்களின் கட்டுரைகளும் அரங்கேறின. செம்மொழி மாநாட்டில் மலேசியாவிலிருந்து 23 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. உடன் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்க் கணினி, இணையம் தொடர்பில் 7 கட்டுரைகள் இடம்பெற்றன.

[மலேசியத் தமிழர்களின் மாநாட்டுப் படைப்புகள் நிகழ்ப்படங்களாக (video) திருத்தமிழ் வலைப்பதிவில் விரைவில் வெளியிடப்பெறும். தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற்ற என்னுடைய படைப்பை பதிவேற்றியுள்ளேன். காண்க.]

ஏற்கனவே, 1966இல் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி உலக அரங்கில் தமிழுக்கு மகுடம் சூட்டியவர்கள் மலேசியத் தமிழர்கள் என்பது வரலாறு. இப்போது புதிய நூற்றாண்டில் தமிழுக்குப் புத்தெழுச்சி ஊட்டியுள்ள செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பும் பெருமளவில் இருக்கிறது என்பது புதிய வரலாறு.

வரலாறு காணாத அளவில் வெகு சிறப்பாக நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டோம் என்ற பெருமையோடு நின்றுவிடாமல், மலேசியப் பேராளர்கள் அனைவரும் நாட்டில் தமிழ் உணர்வு பெருகவும் தமிழ் எழுச்சி பெறவும் தங்களால் ஆன சீரிய பணிகளை ஆங்காங்கே முன்னெடுக்க வேண்டும். இளையோரிடத்தில் தமிழ்ப் பற்றைச் செழிக்கச் செய்யும் செயற்பாடுகளை நிகழ்த்திட வேண்டும். புதிய சிந்தனையோடு தமிழின் வளர்ச்சிக்கு வித்திடும் வழிவகைகளைக் காண வேண்டும். இவ்வாறு செய்வது ஒன்றே தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டதற்கு பொருளுடையதாக அமையும்.

மாநாட்டில் கலந்துகொண்ட மலேசிய அன்பர்களின் படத்தொகுப்பை கீழே வழங்குகிறேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர்
பாப்பா பாவலர் ஐயா முரசு.நெடுமாறன், சுப.நற்குணன்
கணித்தமிழ் அறிஞர்களுடன் தமிழறிஞர் ஐயா.சீனி நைனா முகம்மது
தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் முரளியும் மன்ற மணிகளும்
மைக்ரோசாப்டு நிறுவன ஊழியர்கள் மைக்கேல், திங் சியு பே ஆகியோருடன் சுப..நற்குணன், விரிவுரைஞர் மன்னர் மன்னன், சி.ம.இளந்தமிழ்
மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் அருள்முனைவர், மாரியப்பனார்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை எனக் கருத்துரை வழங்கி பலத்த கைதட்டல் பெற்ற திருமதி நாகேசுவரி
எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், இளம் எழுத்தாளர்கள்

மாண்புமிகு கனிமொழி அவர்களுடன் கல்வி அதிகாரி புஷ்பராணி
சுப.நற்குணன், திருமதி.நாகேசுவரி, மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம், முகமை அமைப்பாளர் சு.பாஸ்கரன், ஆசிரியர் முத்தரசன், விரிவுரைஞர் அருட்செல்வன், கோவி.மதிவரன்

மலேசியக் கல்வி அதிகாரிகள்


Monday, July 12, 2010

செம்மொழி மாநாட்டு மணி(money)ச் செய்திகள்


1.மாநாடு நடைபெற்ற நாட்கள்:- 5
2.தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்:- 200,000
3.இனியவை நாற்பது ஊர்வலத்தைக் கண்டு களித்தவர்கள்:- 500,000
4.கருத்தரங்கம், கவியயரங்கத்தைப் பார்த்தோர் (நிரலாக):- 150,000
5.கண்காட்சி அரங்கத்திற்கு வந்து பார்வயிட்டோர்:- 170,000
6.மாநாட்டு சிறப்பு மலர் கட்டுரைகள்:- 129


7.மாநாட்டு மலரில் இடம்பெற்ற கவிதைகள்:- 34
8.கட்டுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட மாநாட்டு மலர்கள்:- 3200
9.விற்பனையாகிய மாநாட்டு மலர்கள்:- 2300
10.இணைய மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரைகள்:- 110
11.இணைய மாநாட்டு மலரில் இடம்பெற்ற கட்டுரைகள்:- 130
12.கலந்துகொண்ட ஆய்வறிஞர்கள் எண்ணிக்கை:- 300


13.ஆய்வரங்கத்தின் மொத்த அமர்வுகள்:- 239
14.செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்:- 913
15.செம்மொழி மாநாட்டின் மொத்தப் பொருண்மைகள்:- 55
16.மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டினர்:- 840
17.கலந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கை:- 50

18.மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள்:- 400,000
19.பேராளர்கள் தங்கியிருந்த விடுதிகள்:- 92
20.பேராளர்கள் தங்கிய அறைகளின் எண்ணிக்கை:- 1642
21.மாநாட்டுக்கு வந்த விருந்தினர்கள் எண்ணிக்கை:- 2065
22.மாநாட்டுக்குச் செலவான மொத்த தொகை:- ரூ68 கோடியே 52இலட்சம்
23.மாநாட்டுக்காக கோவையில் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை:- ரூ243 கோடி

  • நன்றி:-தினகரன், 29.6.2010

Saturday, July 10, 2010

தமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் பேச்சு (காணொளி)



கடந்த சூன் 23 - 27 வரையில், தமிழ்நாடு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு பெருமாண்டமாக நடந்தேறியது. அதனுடன் சேர்ந்து, தமிழ் இணைய மாநாடும் நடைபெற்றது.


அதில், 24-6-2010ஆம் நாள் மாலையில் 'சிங்கை நா.கோவிந்தசாமி' ஆய்வரங்கில் என்னுடைய கட்டுரையினைப் படைத்தளித்தேன். அந்த அரங்கத்திற்கு ஐயா.நா.கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். அவ்வரங்கில் எனக்கு முன்னதாக ஐயா. காசி ஆறுமுகம் அவர்களும், முனைவர் ஐயா.துரை.மணிகண்டன் அவர்களும் கட்டுரை படைத்தனர்.


நான் படைத்தளித்த கட்டுரையின் தலைப்பு, 'வளர்ந்துவரும் மலேசியத் தமிழ் இணைய ஊடகம்' என்பதாகும். திருத்தமிழ் அன்பர்களின் பார்வைக்காக அதன் காணொளியை இங்கு பதிவிடுகிறேன். கண்டு மகிழ்க!


பகுதி 1:-


பகுதி 2:-


பகுதி 3:-


பகுதி 4:-

பி.கு:-இதே காணொளிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இணையத் தளத்திலும் காணலாம். அதற்குக் கீழே உள்ள தொடுப்புகளைச் சொடுக்கவும்.

1.http://www.wctc2010.org/videos.php?page=34&p=0 கோவிந்தசாமி அரங்கம் 8, 9, 10

2.http://www.wctc2010.org/videos.php?page=35&p=0 கோவிந்தசாமி அரங்கம் 11

Blog Widget by LinkWithin