Tuesday, July 21, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியம், பத்தி இலக்கியம், உரைநடை இலக்கியம் என்று காலந்தோறும் தமிழ் இலக்கியம் மாற்றங்கண்டு வந்துள்ளது. இன்றைய நிலையில் நவினம் (Modernism) என்பதையும் கடந்து பின்நவினம் (Post-Modernism) என்பது மிகப் பரவலாகப் பேசப்படுகிறது.

“தன் மொழி - தன் இனம் - தன் பண்பாடு - தன் வரலாறு - தன் முன்னோர் - தன் இலக்கியம் - தன் மெய்யியல் முதலான அனைத்திலும் பற்றுதலும் நம்பிக்கையும் இன்றையத் தமிழர்களுக்கு இல்லை. இந்தக் கீழ்த்தரமான மனச்சிதைவின் பயனாகப் பிறருடைய - அன்னியருடைய - ஏன் பகைவனுக்குச் சொந்தமானதை எல்லாம் கொண்டுவந்து தமிழுக்குள் புகுத்தியும் திணித்தும் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்ப் பண்பாட்டையும் குமுகாயத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.


“மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்ற தொல்காப்பியரின் எச்சரிக்கையை இவர்கள் நினைவில் கொள்ளுவது நல்லது. பன்முகத் தன்மைக்கு முதன்மை வழங்கும் ‘பின்நவினம்’ முதலான வடிவங்கள், மரபு நடைமுறைகளில் திரிபுகளையும் பிறழ்வுகளையும் உண்டாக்குவதால் சமுதாயத்தில் கேடுகளே விளையும்.

இது எப்படி என்கிறீர்களா?

பொதுவாகவே, தமிழர்கள் மட்டுமல்லாது கிழக்கத்திய மக்களிடம் ‘பாலுணர்வு’ தொடர்பாக வெளிப்படையான போக்குகளைக் காணமுடியாது. இதனைக் கிழக்கத்திய மக்களின் உளக்குறைபாடாகவும் ‘காமத்தை எதிர்கொள்ள வலிமையில்லை’ என்றும் பறைசாற்றுவது குற்றமாகும். காரணம், இவர்கள் வெளிப்படையான ‘பாலுணர்வு’ கருத்தாடல்களுக்கும் அணுகுமுறைகளுக்கும் இன்னமும் அணியமாகி (தயாராகி) இருக்கவில்லை என்பதுதான் நடப்பியல்(நிதர்சனம்).

நிலைமை இப்படியிருக்க, மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம் ‘பின்நவினம்’, ‘பாலியல்’ என கொண்டுவந்து மண்டைக்குள் திணிப்பதும் புலன்களுக்குள் பூட்டுவதும் சரியான அணுமுறைதானா என்பது சிந்திக்கத்தக்கது.

இவ்வாறு திணித்தல் முயற்சியானது மக்களுக்கு அலற்சியை - ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது மிகமிக எளிமையான அறிவியல் உண்மைதானே. இப்படிப்பட்ட ஒவ்வாமைக்கு உள்ளாகும் மக்கள்நலம் பாழ்படும்.. இயல்பாக இவர்களுக்கே உரிய மரபை வலுக்கட்டாயமாக முறித்துப்போடுவதால் மனநலம் முடமாகும் என்பதை ‘பின்நவினக்கூட்டம்’ ஒத்துக்கொள்ள மறுப்பதேன்? உண்மைநிலவரத்தை மறைப்பதேன்?

இந்த நிலமைகளை முன்னுணர்ந்து “மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்று சொன்ன நமது தொல்காப்பியத் தாத்தா நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார் அல்லவா?

இந்தத் தமிழ் மரபியல் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொரு அன்னிய ஊடுருவல்களைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பார்வையில் அறியியல் நோக்கு இல்லை! உளவியல் அணுகுமுறை இல்லை! என்று மறுத்துவிடல் முறையாகுமா?

ஆகவேதான், புதியவரவாகிய எதுவானாலும் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஒதுக்கித்தள்ளாமல், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் மரபுகளோடு ஒத்துப்பார்த்து வேண்டியதை கொள்ளவும் ஆகாததைத் தள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்; அதற்குக் கொஞ்சம் மரபியல் சார்ந்த அறிவும் வேண்டும்.

மேலும், புத்திலக்கியவாணர்கள் தமிழியலை முன்படுத்தி அன்னிய வடிவங்களைக் கையாள வேண்டுமே - சிந்திக்க வேண்டுமே தவிர, அன்னிய வடிவங்களுக்காக ஏற்றமிகு தமிழ் மரபியலை வெட்டிக் குத்திக் குதறிப்போடும் குரோதங்களைக் கொஞ்சம் கைவிட வேண்டும்.

மரபியல் நமக்குச் சொல்வது என்ன?

கலை என்பது என்ன? “அஃது ஓர் உள்ளார்ந்த உணர்வை வெளிப்படுத்துவதிலும் தொடர்புப்படுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்பட்டுத் தோன்றும் முறைமையாகும்” என்கிறார் ஓனிக்மன் (Honigmon).

“மனிதன் தன்னைச் சுற்றி நிகழும் நடப்புகளில் உய்த்துணரும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தம்முள்ளேயே மீண்டும் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமான வடிவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது” என்கிறார் உருசிய அறிஞர் பிளாக்கனோவ் (Plekhanov).

இயற்கையின் அழகை ஒழுங்குப்படுத்தி மனிதப் புலன்களை நுண்ணுணர்வுத் திறத்தில் மேம்பட வைப்பதே கலையாகும். மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடான அந்தக் கலையானது எழுத்து, இசை, நாடகம் என எதுவாகவும் இருக்கலாம். அந்தவகையில், எழுத்துக்கலைக்குரிய மரபை தொல்காப்பியம் இப்படி கூறுகிறது:-

சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல்; மாறுகொளக் கூறல்;
குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;
பொருளில கூறல்; மயங்கக் கூறல்;
கேட்போர்க் கின்னா யாப்பில் ஆதல்;
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்;
தன்னா னொருபொருள் கருதிக் கூறல்;
என்ன வகையினும் மனங்கோ ளின்மை;
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்.
(தொல்.110)

சிதைவுகள்(எழுத்துப் படைப்பில்) என்று கூறப்படுபவை யாவையென்று குறையில்லாமல் ஆராய்ந்து பார்த்தால், 1.சொன்னதைச் சொல்லல், 2.முன் சொன்னதற்கு மாறுபாடாகச் சொல்லுதல், 3.குறைவாகச் சொல்லுதல், 4.மிகுதியாகச் சொல்லுதல், 5.பொருளற்றவைகளைச் சொல்லுதல், 6.மயக்க உணர்வு ஏற்படும்படியாகக் கூறுதல், 7.கேட்பவருக்குத் துன்பம் தரும்படியாக அமைதல், 8.பழிக்கப்பட்ட சொற்களோடு தாழ்வுண்டாகுமாறு கூறுதல், 9.தனக்குத் தானே ஒரு பொருளை எண்ணிகொண்டு கூறுதல், 10.எவ்வகைப் பொருளையும் உறுதியாகப் பற்றாமல் உணர்த்துதல் ஆகிய இவைகளும், இந்தத் தன்மைகளைக் கொண்ட பிறவுமாகும்.

தொல்காப்பியர் கூறும் இந்த அளவுகோள் இன்றும் பொருந்தும் என்பதை நேரிய உள்ளமும் கூரிய அறிவும் கொண்ட எவரும் ஒப்புவர்.

இப்படிப்பட்ட வரையரைகள் அன்னியப் பின்நவினத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். பின்நவினம் என்பதற்கு இன்னும் இலக்கணமே வரையரை செய்ய முடியாமல் தவிக்கிறது மேற்குலகம். “அனைவராலும் மதித்து ஏற்கப்பட்ட ‘புனிதங்களை’ மறுத்துரைப்பது; விதண்டாவாதம் பண்ணுவது” என்றுதான் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, இந்த அளவுகோளைக்கொண்டு சிலர் எழுதித் தள்ளும் படைப்புகளை - நவின இலக்கியங்களை - பின்நவினங்களை அளவெடுத்துப் பார்த்து அவற்றில் இழையோடும் குற்றங்களைக் குத்திக்காட்ட வேண்டாம்; பண்போடு சுட்டிக்காட்டவும் வேண்டாம்.
காரணம், எது சரி.. எது தவறு என்று தீர்மானிப்பது அவரவர் உரிமையாகும்!

(மரபியல் இன்னும் மலரும்..)
தொடர்பான இடுகைகள்:-

19 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

http://bala-balamurugan.blogspot.com/2009/07/blog-post_20.html

மேற்கண்ட இணைப்பில் எழுதப்பட்ட இடுகைக்கு நான் அளித்த மறுமொழி 'அமுக்கிப்போடப் பட்டதால்' இங்கே வெளியிட வேண்டிய நிலையில் இங்கே மறு-மறுமொழியிடுகிறேன்.

*****
நேரடியாக என்னிடம் இரு வினாக்களைத் தொடுத்துள்ளீர்கள்.

1.//சுப.நற்குணன், தமிழ் மரபு ஒழுக்கம் என்று பேசும் நீங்கள் சொல்லுங்களேன், இதுதான் தமிழ் மரபின் ஒழுக்கம் கற்பிக்கும் நாகரீகமா? தமிழுக்கு இழிவு என்றால் இழிவு தமிழைப் பாவிக்கலாமோ?//

இதற்கு எனக்கான பதிலை என் புறநானூற்றுப் பாட்டன் இப்படிச் சொல்கிறான்:-

"மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே
எம்மால் வியக்கப் படூஉ மோரே
இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்பல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்ன ராயினும் எவ்வயின்
பாடறிந் தொழுகும் பண்பி னாரே
மிகப்பே ரெவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே" (புறம்:197)

2.//தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் படித்த எத்தனை மாணவர்கள் இன்று படைப்புலகத்தில் இருக்கிறார்கள்? சுபநற்குனன் நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் உணர்ந்ததுண்டா? காட்டுங்கள், எத்தனை பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த மாணவர்கள் இன்று படைப்புலகத்தில் இருக்கிறார்கள்?//

தமிழ் இலக்கியப் பாடம் படித்தவர்கள் இலக்கியவாணர்களாக - படைப்பாளியாக ஆக வேண்டும் என்பது கட்டாயமா என்ன?

அட.. பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் நமது பேராசிரியர் பெருமக்களுக்கே தமிழும் இலக்கண இலக்கியமும் தகிடத்தோம் போடுகிறது.

இந்த நிலைமையில், அவர்களிடம் படிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேட்பது அப்பாவித்தனமாக இருக்கிறது.

//மேலும், தேவையில்லாமல், வெறுமனே கலாச்சார அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற செயற்கை கட்டுமானங்களுக்காக தமிழில் கொச்சை வார்த்தையை, பிறரைத் திட்டுவதற்காகவோ அல்லது எழுத்தில் பயன்படுத்துவதோ, தவறுதான். அதை ஒப்புக் கொள்கிறேன்.//-கே.பாலமுருகன்

தவறை ஒப்புக்கொண்டதற்காக உங்களைப் பாராட்டலாம்.
*****

Anonymous said...

//சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல்; மாறுகொளக் கூறல்;
குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;
பொருளில கூறல்; மயங்கக் கூறல்;
கேட்போர்க் கின்னா யாப்பில் ஆதல்;
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்;
தன்னா னொருபொருள் கருதிக் கூறல்;
என்ன வகையினும் மனங்கோ ளின்மை;
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்.//

வணக்கம் ஐயா. ஏரணமாக(logic)கருத்துக்களைத் தொல்காப்பியத்தோடு ஒப்பீடு செய்திருப்பது உண்மையை அறியச்செய்திருக்கிறது. கே.பாலமுருகன் போன்ற கொச்சை எழுத்தாளர்கள் தொல்காப்பியரின் இக்கருத்தை மனதில் நிறுத்தி எழுத் முயல வேண்டும்.

//எது சரி.. எது தவறு என்று தீர்மானிப்பது அவரவர் உரிமையாகும்!//

எனும் கே.பாலமுருகரின் கருத்து அவர் இன்னும் காட்டுவாசி சிந்தனையுடையவர் என்றே காட்டுகிறது. நாளையே அவர் பாலியல் குற்றத்தைப் புரிந்து விட்டு "இது எனக்கு சரி, இது என் உரிமை" என்று வாதிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றும் இல்லை.

தமிழ்வானன்.
மலேசியா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>தமிழ்வாணன்,

//எனும் கே.பாலமுருகரின் கருத்து அவர் இன்னும் காட்டுவாசி சிந்தனையுடையவர் என்றே காட்டுகிறது. //

சிந்தனைகள் அவரவருக்கு மாறுபடும் என்பதை மறுதளிக்கும் மனப்போக்கு நமக்குக் கிடையாது.

சிந்தனைக் காட்டாற்று வெள்ளம் போல் பெருகெடுத்துப் பாயும்போது, அதனைக் கவனமுடன் கட்டிக்காத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் குவிக்கும் இரு கரைபோல மரபியல் இருக்க வேண்டும்.

அறிவாண்மையான மரபியலை மதிக்காத நவினமும், அறிவியல் நவினங்களை மதிக்காத மரபியலும் நீடுநிலவாது.

தமிழ் மரபியல் = அறிவாண்மை மரபியல்.

அது, புராணம் - புராதனம் - இதிகாசம் - மதம் - நாடு கடந்து நிற்பது.

தங்கள் வருகைக்கு நன்றி!

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க

மிகச் சிறப்பான முற்றையிலும் ஏரணமாகவும் பதிலளித்துள்ளீர்கள்.
இவற்றையெல்லாம் படித்துப் புரிந்துக் கொண்டு செயல்பட்டால் நன்மை விளையும் . விதண்டாவாதம் செய்தால் தீமைதான்.

Anonymous said...

வணக்கம்

சரியான முறையில் கருத்துகளை கூறும் தங்களுக்குப் பாராட்டுகள்.
என்ன செய்வது இவர்கள் தானும் முறையாய்ப் படிப்பதில்லை. தகுந்தவர் சொன்னாலும் கேட்பதில்லை.


அன்புடன்
பாலசந்திரன்
கெடா

சுப.நற்குணன்,மலேசியா. said...

>கோவி.மதிவரன்,

தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

உங்களிடமிருந்து இன்னும் விரிவான மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.


>பாலசந்திரன்,

முதன்முறையாக உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி.

//என்ன செய்வது இவர்கள் தானும் முறையாய்ப் படிப்பதில்லை. தகுந்தவர் சொன்னாலும் கேட்பதில்லை.//

யாரும் நமக்குச் செவிசாய்க்க வேண்டும் என்பதல்ல நமது நோக்கம்.

செவிசாய்க்க விரும்புபவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெளிவு கிடைப்பதே நமக்கு முக்கியம்.

அடியாத மாடு படியாது என்பது தமிழ் மரபியல் கூற்று. அதற்காக, படியாத மாட்டை அடிக்கவா முடியும்?

யானை கொழுத்தால் மண்ணைவாரி போட்டுக்கொள்ளுமாம். அதனை நீங்களும் நானுமா தடுக்க முடியும்? அல்லது தடுக்கத்தான் தேவையா?

ஐம்பதில் ஆட்டமாய் ஆடுவதற்குக் காரணம் ஐந்திலே வளையாது காரணம். அல்லது வளைக்க வேண்டியவர்கள் வளைக்காமல் விட்டது காரணம்.

எது சரி.. எது தவறு.. என்று தீர்மானிப்பது அவரவர் உரிமை என்பதில் மிகத் தெளிவாக இருங்கள்.

Anonymous said...

//தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் படித்த எத்தனை மாணவர்கள் இன்று படைப்புலகத்தில் இருக்கிறார்கள்? சுப.நற்குனன் நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் உணர்ந்ததுண்டா? காட்டுங்கள், எத்தனை பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த மாணவர்கள் இன்று படைப்புலகத்தில் இருக்கிறார்கள்?//

என்று வினவிற்கும் கே.பாலமுருகன் அவர்க்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அறிவியல், கணிதம், வரலாறு, நிலவியல், வேதியியல் எனும் பாடங்களைக் கற்ற மாணவர்கள் எல்லாம் என்ன அறிவியலாளராகவோ, வரலாற்று ஆசிரியராக, நிலவியல் நிபுணராக என இருக்கிறார்களா?அவர்கள் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? பழமை சிந்தனை கே.பாலமுருகன் அவர்களே!இதற்குப் பெயர்த்தான் கருத்துத் திணிப்பு என்பது.

எது வேண்டும்.. எது வேண்டாம் என்று தீர்மானிப்பது அவரவர் உரிமையாகும்!

\\பெற்றோர்களுடன் பேசுவதற்கு தயங்கும் பிள்ளைகள், மாதவிடாய் பற்றியோ, மார்பக வளர்ச்சிகள் குறித்தோ வெளிப்படையாக சொல்வதற்குக்கூட தயங்கி தயங்கி அல்லல்படுகிறார்கள். ஏன் இப்படியொரு இறுக்கமானதொரு குடும்ப சூழல் கலாச்சார சூழல்?\\

இப்படியொரு புகாரை அதுவும் பாலமுருகனிடமே யார் கொடுத்தது என்பதே தெரியவில்லை. நீங்களே கூறுங்கள் ஐயா??

////மேலும், தேவையில்லாமல், வெறுமனே கலாச்சார அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற செயற்கை கட்டுமானங்களுக்காக தமிழில் கொச்சை வார்த்தையை, பிறரைத் திட்டுவதற்காகவோ அல்லது எழுத்தில் பயன்படுத்துவதோ, தவறுதான். அதை ஒப்புக் கொள்கிறேன். கே.பாலமுருகன்.//
என்ன வெறுமனே கலாச்சார அதிர்வா?

மு.மதிவாணன்
கூலிம்.

Unknown said...

தமி்ழ்வாணன்

** உலக மக்கள் யாவரும் பேசிட , படித்திட , கருத்திட என்றும் நவீனமாய் எளிமையாய் தமி்ழ் மலரட்டும் உலாவட்டும்.
கீழே படியும் ஐயா !!!!

நீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு

ஒருதுர்கனவின் உச்சத்தில்
அல்லது நீண்ட நேர சோம்பலின் அலுப்பில்
வீட்டின் தரையைக் கட்டுப்பாட்டிற்குள்
வைத்துக் கொள்ள தவறியிருந்தேன்.
தரை தளர்ந்துகொடுத்த சிறுசந்தர்ப்பத்தில்
நீர் பெருகியிருந்தது.
அப்பா தரையிலிருந்து நழுவியிருந்தார்.
அம்மாவின் தலை மேற்பரப்பில் மிதந்துகொண்டிருந்தது.
எல்லோரும் நீருக்குள் மூழ்கியிருந்தார்கள்.
வீட்டின் தரையில் இப்பொழுது கடல்மீன்கள்.
- என்ன புரிகிறது தமிழ்வாணன்?
- எதைப் பற்றி கதைக்கிறார் இந்த பாலமுருகன்?


மேலும் ஒன்று,

நிர்வாணப் பித்தனின் இரவு பாடல்
புணரப்பட்டு
தூக்கியெறிந்தார்கள்
எனது இரவை
ஆண் குறியைப் போல
தளர்ந்திருந்தும்
எனது கனவுகள்
இரவுகளில்
பாதுகாக்கப்படுகின்றனவோ?
- இப்படிப்பட்ட உவமானம் தேவையா?
- இது வலிந்து புகுத்திய செக்ஸ் இல்லையா?
- இதன் பெயர்தான் நவீனமா?


ந.பச்சைபாலன், ம.நவீன், பா.அ.சிவம் போன்ற இளைய நல்ல எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் மலேசியத்திற்கு எத்தனை நல்ல படைப்புக்கள் வழங்கியுள்ளனர். சமூக அக்கறையில் அவர்கள் படைத்தது நல்ல விளைவுகள் தந்தன என்பது மிகையாகுமா? அதில் ஒன்றாவது இப்படி கீழ்த்தரமாக ஆகுமா? அவர்களை இந்த பாலமுருகன் பின்பற்றினாலே பெரிய விடயம் அல்லவா?

நான் ஒன்றும் பாலமுருகன் என்ற தனிமனிதனைச் சாட வரவில்லை. எனக்கு அது அவசியமும் இல்லை. அதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். அவரின் கொச்சையான படைப்புக்கள் நம் சமுகத்திற்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்றே அஞ்சுகிறேன்.

மேலும் பாலமுருகனின் கொச்சைத்தனமான படைப்புகள், ஒட்டுமொத்த மலேசிய எழுத்தாளர்களையே அசிங்கப்படுத்துகிறது. இதை மலேசிய எழுத்தாளர் சங்கம் கண்டிக்க வேண்டும். அவரைச் சில தரப்பினர் மெச்சலாம். ஆனால் அது சிலர் மட்டுமே என்று அவர் உண்ர வேண்டும். பெரும்பான்மையோருக்கு அது அருவருப்பை ஊட்டும் கொச்சை மொழி. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட மலேசிய எழுத்துலகம் பாலமுருகன் போன்ற புல்லுருவிகளைக் களைய வேண்டும்.
உடல் இச்சையின் வெளிபாடாக உருவாகும் அவரின் படைப்புகள் , அது எந்த வடிவமாக இருந்தாலும் தடுக்கப்படவேண்டும்.

Tamilvanan said...

அனானிமொஸ் " தமி்ழ்வானன் மலேசியா" அவர்களே புனைபெயரில் எழுதுங்கள் ஆனால் பொய் பெயரில் எழுதாதீர்கள்.

//எனும் கே.பாலமுருகரின் கருத்து அவர் இன்னும் காட்டுவாசி சிந்தனையுடையவர் என்றே காட்டுகிறது//

மற்றவர்களை தரக் குறைவாக விமர்சித்து பின்னோட்டம் போடுவதற்கு முன் இலக்கன பிழையின்றி பெயர் எழுத கற்றுக் கொள்ளுங்கள். பெயரைக் கெடுக்காதீர்கள்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>தமிழ்வானன் என்று வந்தவரே,

//அனானிமொஸ் " தமி்ழ்வானன் மலேசியா" அவர்களே புனைபெயரில் எழுதுங்கள் ஆனால் பொய் பெயரில் எழுதாதீர்கள்.//

இது உண்மையென்றால் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒருவேளை, அது உங்களின் புனைப்பெயர் எனில் உடனே தெரிவிக்கவும்.

இதனை அறியச்செய்த மற்றொரு தமிழ்வாணனுக்கு நன்றி.

Unknown said...

"அங்கே" வெளிவராது என்பதால், ஐயா தயவுடன் இங்கே...!

தமிழ்வாணன், பெயரை மாற்றி வைத்து கொள்ளுங்கள். இங்லிஷ்வாணன் என்றால் பொருந்தும்.

ஏனய்யா? தெரியாமத்தான் கேட்கிறேன்

//வணக்கம் சார்...
வாழும் தமி்ழில்

வணக்கம் ஆசிரியர் ஐயா...
மரபுத் தமி்ழில்//

( சார் என்பது தமிழா? )

தமிழ் என்றும் ஒன்றுதான், அதை நவீனத் தமிழ் என்று விளாங்காத் தரப்பு ஒன்றுதான் விடைக்கிறது.

அட உங்களுக்கு இங்கீசும் தரிகிடதோம் என்று இப்பதான் புரியுது. சார் என்பது English.

உலகில் எந்த இனத்தானும் தனக்கு தனித்துவம் வேண்டி அல்லாடுகிறான். தமிழ்ன் மட்டும் தன்க்கு இருந்தும் தள்ளாடுகிறான்.
ஐயோ,ஐயோ!

Tamilvanan said...

சுரேஸ் குமார்
//என்ன புரிகிறது தமிழ்வாணன்?
- எதைப் பற்றி கதைக்கிறார் இந்த பாலமுருகன்?//

ஒரு விடயம் நமக்கு புரியவில்லை தெரியவில்லை என்பதனால் அது தவறு என்பதே மாபெரும் தவறு.

//- இப்படிப்பட்ட உவமானம் தேவையா?
- இது வலிந்து புகுத்திய செக்ஸ் இல்லையா?
- இதன் பெயர்தான் நவீனமா?//

ஒரு சின்ன உதாரணம் - 2 செய்திகள்
1) அவன் ஆண்குறியை மருத்தவரிடம் காட்டினான்.
2) அவன் ஆண்குறியை பெண்களிடம் காட்டினான்.

முதலில் சொல்லப்பட்ட செய்தியை யாரும் தவறு அல்லது தப்பு என்று சொல்ல மாட்டார்கள்.
அதுவே இரண்டாவது செய்தியில், அங்கு குறிப்பிடப்பட்ட செய்கையை தவறு அல்லது தப்பு என்று கூறுவார்களே ஒழிய, பதிக்கப்பட்ட செய்தியை யாரும் தவறு அல்லது தப்பு என்று சொல்ல மாட்டார்கள்.

இங்கு ''ஆண்குறி' என்று கூறப்பட்டதை வலிந்து புகுத்திய செக்ஸ் என்று சொல்வீர்களனால் உடனடியாக பாலியல் மனோதத்துவரை சென்று காணவும். உங்கள் நன்மைக்காக.

//நான் ஒன்றும் பாலமுருகன் என்ற தனிமனிதனைச் சாட வரவில்லை.//
//அவரின் கொச்சையான படைப்புக்கள் நம் சமுகத்திற்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்றே அஞ்சுகிறேன்.//

பாலமுருகனின் பதிவுகளை வாசித்த வாசகன் மட்டுமே நான்.இதுதான் எனக்கும் அவருக்கும் உள்ள உறவு. அவருக்காக வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.

தமி்ழ் - இயல்,இசை, நாடகம் . அதன் வளர்ச்சியின் ஒரு பகுதி சினிமா.

இன்று இந்த சினிமாவில் வரும் பாலியல் வன்முறை காட்சிகளை காசு கொடுத்து பார்க்கும் சமூகத்திற்கு, பாலமுருகனின் நவீன இலக்கிய படைப்புகள் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்றால் இதனை விசாரிக்க ஒரு அரச விசாரணை கமி்சன் ஏற்படுத்த பரிந்துரைப்போம் வாருங்கள். எப்படி வசதி?

Tamilvanan said...

சுப.நற்குணன்,

உங்கள் தமி்ழ்ப் புலமையும் மொழியினை கையாளும் விதமும் பாரட்டதக்கது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்கள் தமி்ழ் ஆளுமையை மதிக்கிறேன் ரசிக்கிறேன்.

உங்கள் தளத்திலே
//நவின எழுத்தாளர்கள் 'பாலியல்' விடயங்களையே அதிகம் எழுதுவது எதனால்?// என்ற கேள்வியை முன்வைத்து
//மனப்பாதிப்பால்..காம இச்சையால்..அறியாமையால்..தலை கணத்தால்..//

என்ற ஒரு பக்க வாதங்களை மட்டும் பதிலாய் வைத்து ஓட்டளிக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம். நீதியின் தராசிலே களங்கம் உருவாக நீங்கள் காரணமாய் இருக்கலாமா?

குறைந்த பட்சம் 'படிப்போர் பாலியல் தெளிவு பெற' என்ற வாதத்தையாவது ஓட்டளிக்க விட்டுருக்கலாம்.

அது இருக்கட்டும்
உங்களிடம் இருந்து சில விளக்கங்கள் வேண்டும்.

பாலியல், காமம்,காதல், இன்பத்துப்பால்,செக்ஸ்,உடல் உறவு இவற்றின் பால் உங்களின் பார்வை என்ன? தமி்ழ் மரபாளர்கள் அல்லது தமி்ழர்கள் எவ்வாறு பார்த்திட வேண்டும்?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>சுரேசு குமார்,

//உலகில் எந்த இனத்தானும் தனக்கு தனித்துவம் வேண்டி அல்லாடுகிறான். தமிழ்ன் மட்டும் தன்க்கு இருந்தும் தள்ளாடுகிறான்.
ஐயோ,ஐயோ!//

முத்தான கருத்தை சத்தாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

மேற்கிலிருந்து வருவதை எல்லாம் அப்படியே ஏற்பதும் தவறு அடியோடு தள்ளுவது தவறு.

தமிழ்ச் சமூகத்துக்கு நல்லதை கொள்ளுவோம்.. அல்லதைத் தள்ளுவோம் என்ற இனநலப் பார்வை தவறாகுமா?

தொடர்ந்து வருக! தங்களின் முதிர்ச்சிநிறைந்த கருத்துகளைத் தருக!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>தமிழ்வாணன்,

தொடர்ந்து வருகிறீர்கள், கருத்தாடலில் பங்கேற்கிறீர்கள். நன்றி.

//ஒரு பக்க வாதங்களை மட்டும் பதிலாய் வைத்து ஓட்டளிக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம். நீதியின் தராசிலே களங்கம் உருவாக நீங்கள் காரணமாய் இருக்கலாமா?//

நானும் சிந்தித்துதான். இருந்தாலும், அதற்கொரு தேவை இருக்கிறது. அடுத்த கருத்துக் கணிப்பில் கவனமாக இருக்கிறேன்.

//பாலியல், காமம்,காதல், இன்பத்துப்பால்,செக்ஸ்,உடல் உறவு இவற்றின் பால் உங்களின் பார்வை என்ன? தமி்ழ் மரபாளர்கள் அல்லது தமி்ழர்கள் எவ்வாறு பார்த்திட வேண்டும்?//

காதலும் காமமும் தமிழ் இலக்கியத்தில் புதிதல்லவே!

'மலரினும் மெல்லிது காமம்' என்ற உயரிய பண்பாட்டை நோக்கி மாந்த மனங்களை உயர்த்த நினைப்பதும் அதனை நோக்கி இலக்கியம் படைப்பதும் முடியாதா? தேவையற்றதா?

பாலியல் ஒழுக்கக்கேடுகளைச் கதைகளில் சித்தரிப்பதால் 'பாலியல் அறிவு' வளர்ந்துவிடுமா?

அறிவு நோக்கோடு அணுகினால் 'பாலியல்' கல்வியாக படியும். கதை, கவிதை என்று உணர்வுகளோடு அணுகினால் 'பாலியல்' வன்கொடுமையில் போய் முடியும் என்பது என் கருத்து.

திரைப்படம் மனங்களைச் சீரழிக்கிறது என்ற தெளிவு இருக்கின்றவர்கள், அதே சீரழிப்பு வேலையை கதையாடல் தளத்தில் செய்யலாமா?

தீப்பந்தத்தில் சுட்டாலும் தீக்குச்சியில் சுட்டாலும் நெருப்பு சுடுமல்லவா?

தீப்பந்தம் ரொம்ப சுடும்! தீக்குச்சி கொஞ்சம் சுடும்! என்ற தருக்கம் அறிவண்மையாகுமா?

Anonymous said...

//தொடர்ந்து வருக! தங்களின் முதிர்ச்சிநிறைந்த கருத்துகளைத் தருக!//

அறிவாண்மை தமிழில் அதாவது தூயத்தமிழில் ஆண்குறி யோனி என்பதற்கு சரியான அர்த்தம் இருக்கிறது. தூயத்தமிழை எங்குமே பயன்படுத்தக்கூடாது என்கிற சட்டத்தை எப்பொழுது கொண்டு வந்தீர்கள்? சொல்லவே இல்லை.

//அவன் ஆண்குறியை மருத்தவரிடம் காட்டினான்.//

தமிழ்வாணன் என்னய்யா நீங்கள் பதிவிடும்போது அதுவும் திருத்தமிழில் இடும்போது ஆண்குறி போன்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாதைய்யா. அவர்களின் காதுகளில் ரத்தம் வடிந்துவிடும்.

"அந்த இடம்" என்று நாகரீகமாக சொல்லுங்கள்.
அதுதானே இவர்களுக்கு வேண்டும்.

சிவகுரு, சுங்கை லாலாங்

Anonymous said...

//தமிழ் இலக்கியப் பாடம் படித்தவர்கள் இலக்கியவாணர்களாக - படைப்பாளியாக ஆக வேண்டும் என்பது கட்டாயமா என்ன?//

கட்டாயம் இல்லைத்தான். ஆனால் காணாமல் போய்விடுவது என்ன மாயம்? படித்த மரபிலக்கியங்களைச் சோற்றுக்காக விற்றுவிடுகிறார்களோ?
பாலமுருகன் சொன்னது போல தேசிய அளவில் மேடை போட்டெல்லாம் இலக்கியம் சிறுகதை பேசும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியானதும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தன்னை அடமானம் வைத்துவிடுகிரார்களள?

அப்படின்னா தமிழ் கல்வி சும்மா படிச்சிட்டு போறதுக்குனா எதுக்கு அது பல்கலைக்கழகத்துல இருக்கனும்?

மரபு படிக்கவில்லையென்றாலும் படைப்பிலக்கியத்தில் இருக்கும் இளஞர்களை வசைப்பாடி விரட்டியடித்துவிட்டு, தமிழ் இலக்கியத்தை எப்படி வளர்க்கப் போகிறீர்கள்?

தெரியவில்லை என்ற்ல் சொல்லிக் கொடுங்கள், அல்லது எடுத்துக்காட்டுங்கள், அநாகரிகமாக பேசுவது விடைப்பது தமிழ்மரபன்று.


.//சுப.நற்குணன், தமிழ் மரபு ஒழுக்கம் என்று பேசும் நீங்கள் சொல்லுங்களேன், இதுதான் தமிழ் மரபின் ஒழுக்கம் கற்பிக்கும் நாகரீகமா? தமிழுக்கு இழிவு என்றால் இழிவு தமிழைப் பாவிக்கலாமோ?//

இதற்கு எனக்கான பதிலை என் புறநானூற்றுப் பாட்டன் இப்படிச் சொல்கிறான்:-

"மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே
எம்மால் வியக்கப் படூஉ மோரே
இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்பல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்ன ராயினும் எவ்வயின்
பாடறிந் தொழுகும் பண்பி னாரே
மிகப்பே ரெவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே" (புறம்:197

இதிலே உங்களின் சோம்பேறித்தனம் தெரிகீறதே

சிவகுரு
சுங்கை லாலாங்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>சிவகுரு,

புதிதாய் வந்துள்ளீர், இனிதாய் வருக!

//தமிழ்வாணன் என்னய்யா நீங்கள் பதிவிடும்போது அதுவும் திருத்தமிழில் இடும்போது ஆண்குறி போன்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாதைய்யா. அவர்களின் காதுகளில் ரத்தம் வடிந்துவிடும்.//

சிவகுரு சொல்வதை தமிழ்வாணன் கேட்பாராக.

'அது' போன்ற சொற்களை அவர்களுடைய வலைப்பதில் பயன்படுத்துங்கள்.. அவர்கள் காதில் தேன்வந்து பாயும்..!

//இதிலே உங்களின் சோம்பேறித்தனம் தெரிகீறதே//

இதிலே உங்களின் போட்டுவாங்கும்தனம் தெரிகிறதே!!

//மரபு படிக்கவில்லையென்றாலும் படைப்பிலக்கியத்தில் இருக்கும் இளஞர்களை வசைப்பாடி விரட்டியடித்துவிட்டு, தமிழ் இலக்கியத்தை எப்படி வளர்க்கப் போகிறீர்கள்?//

இலக்கணமும் இலக்கியமும் அறியாதான்
ஏடெழுதுதல் கேடு நல்கும்!
-பாவேந்தர் பாரதிதாசனார்.

நீங்கள் இல்லாவிட்டால் தமிழ் இலக்கியமே செத்துவிடுமோ? இவ்வளவு மிகைநம்பிக்கை (Over Confident) கூடாது.

//அநாகரிகமாக பேசுவது விடைப்பது தமிழ்மரபன்று.//

""அந்த இடம்" என்று நாகரீகமாக சொல்லுங்கள்.
அதுதானே இவர்களுக்கு வேண்டும்."

ஓ.. நாகரிகமாக பேசுவது இதுதானோ?

Unknown said...

தமிழ்வாணன்

//1) அவன் ஆண்குறியை மருத்தவரிடம் காட்டினான்.
2) அவன் ஆண்குறியை பெண்களிடம் காட்டினான்.//

நானும் அதைத்தான் கூறுகின்றேன். கனவுக்கு உவமையாக்க ஆண்குறி அதுவும் தளர்ந்த ஆண்குறிதானா கிடைத்தது? வேறு சிறந்த உவமைகள் இல்லையா என்பதே என் கேள்வி. உடலுறுப்புகள் பற்றி ஒரு கட்டுரையே வரையட்டுமே..யார் வேண்டாம் என்றது? இதுவரை மருத்துவ கேள்வி-பதில்கள் படித்ததில்லையா? அதை யார் குறை சொன்னது?
பாலியல்- ஒரு கண்ணோட்டம் என்று தொடர் சிந்தனை போடட்டுமே...அதை விடுத்து இப்படி மனவக்கிரங்களை உவமையாக்கும் பாலமுருகன் போன்றோருக்கு நீங்கள் துணை நிற்பது வருத்தம் அளிக்கிறது.

நற்குணரின்,
திரைப்படம் மனங்களைச் சீரழிக்கிறது என்ற தெளிவு இருக்கின்றவர்கள், அதே சீரழிப்பு வேலையை கதையாடல் தளத்தில் செய்யலாமா?

தீப்பந்தத்தில் சுட்டாலும் தீக்குச்சியில் சுட்டாலும் நெருப்பு சுடுமல்லவா?

தீப்பந்தம் ரொம்ப சுடும்! தீக்குச்சி கொஞ்சம் சுடும்! என்ற தருக்கம் அறிவண்மையாகுமா?
என்ற கேள்வி நியாயமானதே..
அவ்வளவு தெஇவு இருக்கும் இவர்கள் அதே வேலையை எழுத்திலும் காட்டுவது ஏன்?

சிவகுரு என்னும் %&#@ அவர்கள்,
//திருத்தமிழில் இடும்போது ஆண்குறி போன்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாதைய்யா. அவர்களின் காதுகளில் ரத்தம் வடிந்துவிடும்.//

சின்னப்பிள்ளைதனமானவர் என்பதை அடிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

ஆண்குறி என்ற சொல்லை பிழையென்று யார் பேசுவது? கையாளும் முறை பற்றி தானே இங்கே பேச்சு.

Blog Widget by LinkWithin