Thursday, August 27, 2009

சுதந்திர மலேசியாவில் தமிழர்கள் நன்மை அடைந்துள்ளனரா?


சுதந்திர மலேசியாவில் மற்ற இனங்களைப் போல தமிழர்களும் நல்ல வளத்தோடு வாழ்கின்றனர்; செல்வச் செழிப்போடு இருக்கின்றனர்; எல்லா நன்மைகளையும் அடைகின்றனர் என்று சிலர் சொல்கிறார்கள்.

அதேவேளையில், மற்ற இனங்கள் போல தமிழர்கள் இன்னும் முன்னேறவில்லை; எதற்கெடுத்தாலும் போரட்டம் ஓயவில்லை; தமிழர்கள் இன்னும் முழு நன்மையடையவில்லை என்று பலர் கருதுகிறார்கள்.

இவ்விரண்டு கருத்தையும் சிந்திப்பதற்கான காலத்தையும் களத்தையும் அமைத்துக் கொடுக்கும் வகையில் ‘பட்டிமன்றம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாட்டின் 52ஆம் ஆண்டுச் சுதந்திர நாள் சிறப்புப் பட்டிமன்றமாக இது நடைபெறும் என ஏற்பாட்டாளர் பாவலர் செ.குணாளன் அறிவித்துள்ளார்.

சுதந்திர மலேசியாவில் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்துள்ளனர் என்பதுதான் இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு. தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவரும் – சிறந்த மேடைப் பேச்சாளரும் – பல பட்டிமன்றங்களில் நடுவராகப் பணியாற்றி வட மலேசிய மக்களிடையே நன் அறியப்பட்டவருமாகிய தமிழ்த்திரு.க.முருகைனார் இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவராகப் பணியாற்றவுள்ளார்.

*இதில் பேசவுள்ள பேச்சாளர்களில் இருவர் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள்:- 31-8-2009 திங்கள் (பொது விடுமுறை)

நேரம்:- இரவு மணி 7.00

இடம்:- ஸ்ரீ மாரியம்மன் மண்டபம், பட்டர்வொர்த்து.



சிறப்புப் பட்டிமன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொள்ள 013-4853128 / 016-4813317 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

வாதம் – எதிர்வாதம் – கருத்துமோதல் – நகைச்சுவை நிறைந்த சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்தச் சிறப்புப் பட்டிமன்றத்திற்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

4 comments:

Jerry Eshananda said...

மலேசிய தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துகள்.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

பட்டிமன்றம் சிறப்பக அமைய வாழ்த்துக்கள்.......

சுப.நற்குணன்,மலேசியா. said...

>jerry eshananda.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்பரே.

உங்கள் பெயரை தமிழில் எப்படி எழுதுவது..? தெரிவித்தால் மகிழ்வேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் முனைவர் சே.கல்பனா அவர்களே,

தங்கள் வாழ்த்துக்கு நன்றி..!

Blog Widget by LinkWithin