Saturday, May 30, 2009

தமிழர் நலனுக்காக பிரிட்டன் குடிமகன் போராடுகிறார்; ஆதரவு கையொப்பமாவது இடுங்கள் தமிழர்களே..!

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள வன்கொடுமை அரசாங்கம் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையையும் மனிதப் பேரழிவையும் கண்டித்து, பிரிட்டனைச் சேர்ந்த ரிம் மாற்றின் என்பவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஈழத்தில் தன் சொந்த இனம் - தொப்புள்கொடி உறவு - இரத்ததின் இரத்தமாகிய தமிழ் மக்கள் மிகவும் கொடூரமாகக் கொன்று ஒழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் - தட்டிக் கேட்காமல் - கண்டனம் தெரிவிக்காமல் - எதுவுமே நடவாததுபோல அலட்டிக்கொள்ளாமல் உணர்வுகெட்ட தமிழர்கள் சிலர் புலன்களைப் பொத்திகொண்டு இருக்கின்றனர்.

ஆனால், எந்தவித தொடர்புமே இல்லாத ரிம் மாற்றின் மனித நேயத்தின் அடிப்படையில் தமிழர்கள் நலனை முன்வைத்து உண்ணாநிலைப் பேராட்டத்தில் இறங்கியுள்ள செய்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈழத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பரிதாபமான மனித அவலங்களைத் தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 13 ஆவது நாளாக இன்று காரிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பிரித்தானிய குடிமகனான ரிம் மாற்றின் தனது போராட்டம் தொடர்பாக தெரிவிக்கையில், “எனது போராட்டத்திற்கு அனைத்துலக சமூகம் குறிப்பாக அமெரிக்கா அரச தலைவர் பராக் ஓபாமா பதில் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை இந்த போராட்டத்தை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்வேன்” என்றார்.

தொண்டு நிறுவனப் பணியாளரான இவர் சிறிலங்காவிற்குச் சென்று அங்கு தொண்டு பணிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் தமிழ் மக்களுடனான தொடர்புகளை நெருக்கமாக ஏற்படுத்திக் கொண்டவர்.

தற்போது அங்கு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவலங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு நிகழ்வில் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த போராட்டம் நடைபெறும் பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் ரிம் மாற்றினின் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

ரிம் மாற்றின் தம்முடைய இணையத்தளத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அந்த முறைபாடு மனுவில் கையொப்பம் இடவேண்டும் என அந்த மனித நேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்களுக்காகப் போராடும் ரிம் மாற்றின் உணர்வைபோல் ஆயிரம் மடங்கு உலகத் தமிழர்கள் பெறவேண்டும். அப்போதுதான் தமிழருக்கு முழு உரிமையும் விடுதலையும் கிடைக்கும்.

ரிம் மாற்றின் போராட்டத்திற்குத் துணைநின்று அவருடைய மனிதநேய முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புத்தமிழ் உறவுகளை அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.


ரிம் மாற்றின் முறைப்பாட்டு மனுவில் கையொப்பமிட

Friday, May 29, 2009

தலைவர் பிரபாகரன் இருக்கிறார்:- தொடரும் ஆதாரங்கள்

உலகத் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மரணச் செய்தியின் ஐயப்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அவர் உயிருடன் இருப்பதற்கான உறுதிப்பாடுகளும் தொடர்ந்து வருகின்றன; அதற்கான புதுப்புது ஆதாரன்ங்களும் வந்த வண்ணம் உள்ளன.

அப்படி கிடைக்கப்பெற்ற புதிய ஆதாரம் இது. கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி காணொளியைப் பார்க்கவும்.


இணைப்பைச் சொடுக்கவும்:-

http://araciyal.com/movies.asp?id=prabhakaran%20alive

Tuesday, May 26, 2009

மாவீரர் நாளில்.. மீண்டும் பிரபாகரன்:- விகடன் நம்பிக்கை

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.

ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! (மேலும் படிக்க)


Monday, May 25, 2009

தலைவர் எங்கே?: பொய்ச் செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதா?

மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது ஊடக (மீடியா) பயங்கரவாதம்.

என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.

இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.

இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... (மேலும் படிக்க)

Saturday, May 23, 2009

உங்கள் வலைப்பதிவு முடக்கப்படலாம்! உடனடி நடவடிக்கை எடுக்கவும்!

இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது வலைப்பதிவுகள் (பிளாக்) காணாமல் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் வலைப்பதிவுகளில் malware பெரும்பாலும் NTamil திரட்டியின் Vote Button காரணமாகவே வருகின்றது. அல்லது வேறு சில Gadget காரணாமாக வரக்கூடும். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு Java script நிரல்கள் மூலமும் வரலாம்.
கவனம்..! கவனம்..! கவனம்..!
இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

Friday, May 22, 2009

தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்: புலிகள் தலைவர் அறிவிப்பு

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் இராணுவத்தினாலும் உருவாக்கப்பட்டு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் உலகத் தமிழ்ச் சமூகத்தைக் அறிவழகன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ்ச் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.

சிறிலங்காவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய அறிவழகன், பாதுகாப்புக் காரணங்களுக்கான தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் 'தமிழ்நெட்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆதாரம்: புதினம் செய்தி

Thursday, May 21, 2009

மரணத்தை வென்றவர்; தமிழர் மறையாக வாழ்பவர்; தலைவர் பிரபாகரன்

"இதோ தற்கொலை செய்து கொண்டார்; அதோ சுனாமியில் இறந்தார்; இதோ சுடப்பட்டார்; அதோ உடல் கிடைத்தது; இதோ தப்பிக்க முயன்றார்; அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார்; இதோ என் கனவில் வந்தார்; அதோ என் வீட்டருகே வந்து விட்டார்; ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ...! வந்தால் என்ன செய்வது??????"

அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே,

இது தான் ஒரு மனிதனின் - ஒரு மாவீரனின் - ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம்; எதிரிக்குத் தருகின்ற அச்சம்!

உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விளைவிக்கவில்லை.
அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை. அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது. உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.


பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும்.

அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.

கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது.

அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……!!

உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை. அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.


எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.

சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன். உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.

இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.

உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல.
மாறாக, அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.

மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.

எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.

மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது.
உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம்.


மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.
தமிழரின் தாகம்; தமிழீழத் தாயகம்

நன்றி:கை.அறிவழகன்

Tuesday, May 19, 2009

நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!

தமீழத் தலைவர் – உலகத் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய பேரதிர்ச்சியான செய்திகளையும் படங்களையும் காணொளிகளையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா சொல்லும் செய்தியையும் காட்டும் படங்களையும் அப்படியே எடுத்து உலக ஊடகங்கள் ஓயாமல் ஒலி – ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

இணைய ஊடகத்திலும் இச்செய்திகள் காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. கொடுந்தீயாகத் தமிழர்கள் உணர்வுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த அவலச் செய்திகளுக்கு இடையில், தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய நம்பிக்கை இன்னமும் முற்றிலும் தளர்ந்துவிடவில்லை – தமிழர் மனங்கள் இன்னமும் சோர்ந்துவிடவில்லை – உணர்வுகள் இன்னமும் உறங்கிவிடவில்லை!

இருந்தாலும்கூட, வல்லாதிக்க இலங்கையின் போக்கினாலும் வல்லரசு ஊடகங்களின் தாக்கத்தாலும் உலகமெங்கும் விரிந்து பரந்திருக்கும் தமிழர்கள் சொல்லொனா அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாகி தவித்துக் கொண்டிருக்கின்றனர் – கண்ணீரில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் – கடுமையான மனப்போராட்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

தமிழ் மக்களின் உள்ளமும் உயிரும் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையில் வெந்துக் கொண்ருக்கின்றன.

எது எப்படியிருப்பினும், தலைவர் கட்டியெழுப்பிய விடுதலை இயக்கத்தின் மீது முழு நம்பிக்கையும் அசைக்க முடியாத பற்றுதலும் ஆழமான பிடிமானமும் மிக மிக உறுதியாக இருப்பதால்... வாருங்கள் தோழர்களே..

நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!

எவன் வந்து எந்தச் செய்தியைச் சொன்னாலும் சொல்லட்டும்.. எந்தப் படத்தைக் காட்டினாலும் காட்டட்டும்.. என்ன ஆதாரத்தை கொடுத்தாலும் கொடுக்கட்டும்..!!


தலைவரின் நிழலில் வளர்ந்த நமது உடன்பிறப்புகள் – நமது உறவுகள் – நமது போராளிகள் – நமது இரத்தத்தின் இரத்தங்கள் மிக விரைவிலே இரண்டில் ஒன்றைச் சொல்லுவார்கள்.. நமது மரண வலிகளுக்கு முடிவொன்று கூறுவார்கள்..!

தமிழ் உறவுகளே.. அன்பு உடன் பிறப்புகளே..
அதுவரை காத்திருப்போம்!
நம்பிக்கையோடு பொறுத்திருப்போம்!

தலைவர் பிரபாகரன் மரணம் உறுதிசெய்யப்படவில்லை: மகிந்தா வாய் திறக்கவில்லை

இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றினார்.
 • தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார்.
இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.
 • ஆனால், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’ இது தொடர்பாக இராசபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.

பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. (மேலும் செய்திகள்)

இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட 18 பேர் பட்டியல். "தலைவர் பெயர் இல்லை"

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது இலங்கை பாதுகாப்பு அமைச்சகமே சாட்சியாக இருக்கிறது….
ஆம்… படையினர் அடையாளம் கண்டுள்ளதாக 18 பேர் பட்டியல், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் மேதகு வே.பிரபாகரன் பெயர் இடம்பெறவில்லை. (மேலும் படிக்க)

தலைவர் பிரபாகரன் வேறு இடத்தில் உள்ளார்: சானல் 4 செய்தி

இன்று(18.05.2009) மாலை சானல் 4 தொலைக்காட்சிக்குப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராசா பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி உலகை உலுக்கியுள்ளது. (மேலும் படிக்க)

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது உண்மையா? குளோபல் செய்தி ஆய்வு

இதுவரை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சாவோ இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவோ அல்லது இலங்கையின் முப்படைகளின் தளபதியான மகிந்த இராசபக்சாவோ பிரபாகரன் கொல்லப்பட்டதனை அதிகாரப்படியாக அறிவிக்கவில்லை.

அரசாங்கத்தினுடைய அதிகார இணையத்தளம் விடுதலைப்புலிகளின் அதிஉயர் மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கின்றது. அரச பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக வெளியிட்டுள்ள செய்தியை தற்பொழுது விலக்கிக் கொண்டுள்ளது. ராணுவத்தின் இணையத் தளமும் விடுதலைப்புலிகளின் அதி உயர் மட்டத் தலைவர்கள் மரணித்ததான செய்தியை விலக்கிக் கொண்டுள்ளது. (மேலும் படிக்க)

Monday, May 18, 2009

தலைவர் பிரபாகரன் பற்றிய அதிர்ச்சித் தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை

[புதிது] இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றினார்.

தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார்.

இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’ இது தொடர்பாக இராசபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.
பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. (மேலும் படிக்க)

********************************
 • தமிழினத் தலைவர் வே.பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகமே சாட்சியாக இருக்கிறது….

  ஆம்…! படையினர் அடையாளம் கண்டுள்ளதாக 18 பேர் பட்டியல், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 • அந்தப் பட்டியலில் மேதகு வே.பிரபாகரன் பெயர் இடம்பெறவில்லை. (மேலும் படிக்க)
******************************
 • இன்று(18.05.2009) மாலை சனல் 4 தொலைக்காட்சிக்கு புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் எஸ்.பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். உலக ஊடகங்கள் தலைவர் பற்றி வேறு விதமாக அறிவித்துவரும் வேளையில் இச்செய்தி உலகையே உலுக்கியுள்ளது. (மேலும் படிக்க)
****************************
 • இதுவரை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சாவோ இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவோ அல்லது இலங்கையின் முப்படைகளின் தளபதியான மகிந்த இராசபக்சாவோ பிரபாகரன் கொல்லப்பட்டதனை அதிகாரப்படியாக அறிவிக்கவில்லை. (மேலும் படிக்க)
*************************
 • விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று காலை போர்ப்பகுதியில் இருந்து தப்பிச்செல்லும் பொழுது இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.(மேலும் படிக்க)
************************
 • தமிழ் மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. (மேலும் படிக்க)

*************************

 • NDTV செய்தி நிறுவனம்! வேலுபிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருகின்றது, இந்த செய்தியை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுருப்பதாகவும், DNA( மரபணு ) சோதனைக்கு பிறகு தான் உறுதியாக சொல்ல முடியும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியிருபதாகவும், NDTV செய்தி நிறுவனம் செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கின்றது! (மேலும் படிக்க)

****************************

 • விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். (மேலும் படிக்க)

Thursday, May 14, 2009

ஈழத்தமிழருக்காக CNN வாக்கெடுப்பில் ஓட்டுப் போடுங்கள்

ஈழத்தமிழர்கள் விசயத்தில் (இலங்கை போரில்) சர்வதேசம் பங்கெடுக்க வேண்டுமா! வேண்டாமா என்று CNN கருத்துக்கணிப்பு நடத்துகிறது. இதில் பலரும் கலந்து கொண்டு தங்கள் வாக்கை சமர்ப்பித்து வருகிறார்கள். இதில் இது சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கையும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் (due to heavy traffic) தற்போது பின்னூட்ட பெட்டியை மூடி விட்டார்கள்.

ஒரு நாட்டின் பிரச்சனையில் மற்ற நாடுகள் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்றாலும், அங்கே நடப்பது போரில்லை அது இனப்படுகொலை என்பது பெரும்பாலானவர்கள் அறிந்தது. நேற்று முன்தினம் கூட 2000 பொது மக்கள் இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த போது கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள்.

இதற்கு ஐ நா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பத்திரிக்கை சுதந்திரம் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது, எனவே மனிதாபிமான அடிப்படையில் சிந்தியுங்கள்.

இந்த வாக்கெடுப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதில் நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் எந்த வித நஷ்டத்தையும் அடைந்து விடப்போவதில்லை. இன்னும் எவ்வளோ நேரம் அல்லது நாட்கள் இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரியவில்லை, எனவே முடிந்த வரை விரைவாக ஒட்டு போட்டு விடவும்.

உங்கள் வாக்கை CNN தளத்தில் இங்கே சென்று பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு அதிகபட்சம் 1 நிமிடத்திற்கு மேல் ஆகாது. இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள்.

ஈழ தமிழர்களுக்கு உங்களால் ஆன இந்த சிறு உதவியை செய்யுங்கள்.

Tuesday, May 12, 2009

தமிழ்நாட்டுத் தமிழருக்கு மலேசிய நாட்டிலிருந்து இரா.திருமாவளவன் உருக்கமான கடிதம்

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எழுதியுள்ள இந்தக் கடிதத்தைத் தயவுசெய்து படிக்க, தமிழக உடன்பிறப்புகளை அன்புடன் அழைக்கிறேன்.

பி.கு: ஐயா இரா.திருமாவளவன் அவர்கள், மலேசியத் திருநாட்டில் தமிழ் - தமிழர் - தமிழ்நெறி விழுமியங்களைக் கட்டிக் காத்து, அதன்வழி தமிழ்த்தேசிய குமுகாயத்தைக் கட்டியெழுப்பும் பாரிய முயற்சியில் ஈடுபட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மொழியால் இனத்தால் சமயத்தால் நாம் தமிழர்; நம் மறை திருக்குறள் என்ற செம்மாந்தக் கொள்கையை வலியுறுத்தி பல்லாற்றானும் பாடாற்றி வருகின்ற தமிழினமானத் தலைவர்.

பிறந்த இனத்தின் உரிமையில் தமிழக உடன்பிறப்புகளிடம் ஒரு வேண்டுகோள்


நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன்.


கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.


வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்றனர் நம் ஈழ உறவுகள்.கொடுத்தே பழகிய அந்தக் கரங்கள் இன்று கையேந்தி நிற்கின்றன ஒரு நேர கஞ்சிக்காக...!

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள். கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை . எறிகணைகளுக்குத்தான் தெரியுமா அவை பிஞ்சா தளிரா என்று?

கற்புக்கே கற்பு கற்பிக்கும் ஈழத்தின் பெண்மை அங்கு சீரழிக்கப்படுகிறது. சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார். கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள். என்ன கொடுமையிது!!!


ஈழ உறவுகளின் அழுகுரலில் ஆர்ப்பரிக்கின்றது வங்கக்கடல். அவலந்தந்த கண்ணீரில் மூழ்கின்றது முல்லைக் கடல். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் வன்னிமண், பேரவலம் வந்தேறி பரிதவித்து நிற்கின்றது. வீரம் செறிந்த அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இது சோதனைக் காலம். பெருந்துயர்படிந்த வேதனைக் கோலம்.


பேரன்புமிக்க தமிழக உறவுகளே!

உங்கள் உறவுகளுக்கு இப் பேரவலத்தினைக் கொடுத்த அந்த பாவிகள் யார்?சிங்களம் என்றுதான் பதில் வரும். உண்மைதான்! ஆனால் சிங்களம் மட்டுமல்ல. சிங்கள வல்லாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்த பல சக்திகளுங்கூட. அதில் பிரதானமாய் இந்தியா இருப்பது நமக்கெல்லாம் பேரதிர்ச்சி. நம் துயர்துடைக்கும் என்று நாம் நம்பியிருந்த இந்தியாவே நம் உறவுகளை அழிக்க பேராதரவு கொடுத்து நிற்கின்றது சிங்கள அரசிற்கு.


எங்கள் அவலங்களைப் பார்த்து தாங்கொணாமல் நீங்கள் துடிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது பாசமிகு தமிழக உறவுகளே!தினந்தினம் அநியாயமாய் செத்து மடியும் ஈழத்தமிழ் உறவுகளின் பிணங்களைப் பார்த்து நீங்கள் பதைபதைப்பது நம் கண்களில் தெரிகின்றது. தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தமிழீழத்தின் பிஞ்சுக் குழந்தைகளின் சிதறிய உடல்களைப் பார்த்து கல்நெஞ்சங்கள் கூட கரைந்துதான் போயின. உணர்வுள்ள உங்கள் உள்ளங்கள் உடைந்து வெதும்பின. கண்ணீர் கொப்பளிக்க கதறியழுத ஈரமான உள்ளங்கள் எத்தனையோ.


எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய முத்துக்குமார் வழிநடந்த தியாகவீரர்கள் பலர். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மனிதச்சங்கிலிகள், உண்ணாவிரதங்கள் என சாதாரண மக்களாக உங்கள் ஈழ உறவுகளின் அவலம் நீக்க, போரை நிறுத்தக்கோரி நீங்கள் செய்த அத்தனைக்கும் நாம் தலை வணங்குகின்றோம்.


உங்கள் ஆதரவும் அன்பும் உணர்வும் எங்களுக்கு நன்கே புரியும். அவலத்தின்மேல் அவலப்பட்ட மக்களுக்கு உங்கள் ஆதரவு எரியும் நெருப்பை அணைக்கும் நீராய்த் தோன்றியது. ஆனாலும் சிங்கள வல்லாதிக்கத்தின் பிடிவாதமான போர்வெறியும், தமிழுணர்வுக்கு துளியும் மதிப்புக் கொடுக்காத காங்கிரசு தலைமையிலான இந்திய அரசின் பழிதீர்க்கும் மனப்பாங்கும் சேர்ந்து, உங்கள் போராட்டங்களையெல்லாம் வீணாக்கி விட்டன. உங்களது போராட்டங்களால் விடியல் வரும் என்று காத்திருந்த ஈழத்தமிழருக்கு அவை கானல் நீராகவே போயின.


அனைத்து தமிழருக்கும் முடிவுகட்ட முண்டியடித்து நிற்கின்றது சிங்களதேசத்துடன், இந்திய அரசு. இந்த அதிகாரத்தினை அவர்களுக்கு கொடுத்தவர்கள் நீங்கள்தான் தமிழக உறவுகளே!


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அளித்த நாற்பதுக்கு நாற்பது ஆசனங்கள்தான் அவர்களை மத்தியில் அதிகார ஆசனத்தில் அமரவைத்தது. ஆனால் நீங்கள் விடுத்த கோரிக்கைகளையெல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டார்கள். கேட்டும் கேளாமல் இருந்தார்கள். சில சமயங்களில் செவிசாய்ப்பதுபோல் நாடகமாடினார்கள். இந்த நிமிடம் வரைக்கும் உங்கள் உறவுகளுக்கான உங்கள் கோரிக்கைகளுக்கு எதிராகவே நடந்து வருகின்றார்கள்.


தன்னை "தமிழினத் தலைவர்" என சொல்லிக் கொள்ளும் மான்புமிகு தலைவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. எதிர்பார்ப்புக்களைக் கொடுத்து ஏமாற்றினார்கள் தம் சுயநலங்களுக்காக. பணத்துக்காகவும் பதவிக்காகவும் உங்கள் ஈழ உறவுகளின் உயிர்களை ஏலம்விட்டார்கள். தம் குடும்ப நலன்களுக்காக ஈழத்தமிழர் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை என கைகழுவி விட்டார்கள்.


உலகமெங்கும் ஈழ ஆதரவு பெருகிவருகையில் அவற்றின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரசு அரசுதான். காங்கிரசின் தமிழின எதிர்ப்புக் கொள்கைகளுக்குள் தமிழகமும் அடக்கப்பட்டு அடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.


இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்க நல்லதொரு சந்தர்ப்பம் உங்கள் முன்றலிலேயே வந்து நிற்கின்றது.


தமிழகம் மீண்டுமொருமுறை நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டது. இத்தேர்தல் முடிவில் அவலப்படும் ஈழத்தமிழினத்தின் வாழ்வும் தாழ்வும் அடங்கியிருக்கின்றது என்பது தமிழக உறவுகள் நீங்கள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.


மீண்டுமொருமுறை காங்கிரசு அரசமைக்க நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்களானால் அது ஈழத் தமிழினத்தினை அழித்தொழிக்க நீங்களே அனுமதி கொடுப்பதற்கு சமனாகும்.


தமிழினத்துக்கு எதிராகவே எப்பொழுதும் கொள்கை வகுக்கும் காங்கிரசிற்கு இந்த முறை தகுந்த பாடம் புகட்டுங்கள் தமிழக உறவுகளே!


இவ்வளவு காலமும் கட்சிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! சாதிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! மதத்துக்காக ஓட்டுப்போட்டீர்கள்! சலுகைகளுக்காக ஓட்டுப் போட்டீர்கள்! அப்போதெல்லாம் மாறுதல்களோ நன்மாற்றங்களோ வந்ததாக தெரியவில்லை. இம்முறை உங்கள் இனத்துக்காக ஓட்டுப் போடுங்கள்! உங்கள் உறவுகளின் கண்ணீரைத் துடைத்த புண்ணியமாவது உங்களுக்குக் கிடைக்கும்.


ஓட்டுப் போடுவதற்குமுன், சொல்லொணா துயரத்தில் ஏக்கத்துடன் தவிக்கும் ஈழ மக்களின் கண்ணீர் தோய்ந்த முகத்தினை ஒரு தடவை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து மனிதநேயம் மிக்க மனிதன் என்ற உணர்வில் வாக்களியுங்கள்.


தமிழினம் சாதாரணமான ஒரு இனம் அல்ல. உலக வரலாற்றில் சரித்திரம் படைத்ததும் தொன்றுதொட்டே மேன்மையானதுமான ஒரு இனம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழினத்தினை அழிக்க பலவழிகளில் முயல்கின்றன பல நாசகார சக்திகள்.


முதலில் ஈழ தமிழரை குறிவைத்திருக்கும் அந்த நாசகார சக்திகளின் அடுத்த இலக்கு உங்களை நோக்கியும் திரும்பும் எம் தமிழ் தமிழக உறவுகளே!


தமிழக அன்புள்ளங்களே! நாங்கள் உங்களை முழுமையாக நம்புகின்றோம். உங்கள் சொந்தங்கள் அழிக்கப்படுவதைப் பார்த்து துடிதெழுந்தவர்கள் நீங்கள்! உங்கள் உணர்வுகளுக்குமுன் அரசியல் கபட நாடகங்கள், சதிகள் வெல்லாது. வெல்லவும் விடமாட்டீர்கள் என்பது உறுதி!


ஈழ மக்களின் அவலங்களைப் பார்த்து உருவான உங்களின் மனப்பாரங்களை வாக்குப் பெட்டிகளில் இறக்கிவையுங்கள், காங்கிரசு கூட்டணிக்கு எதிரான வாக்குகளாய்...!


புலம்பெயர் நாட்டிலிருந்து,
ஓர் ஈழத்தமிழன்,
[பருத்தியன்]


Monday, May 11, 2009

நிலவே எம்மைக் காப்பாற்று: ஈழக் கவிதை


பெருவானில் புகழோடு உலாவரும் நிலவே
பெருந்துயரில் மாய்கிறோம் காப்பாற்ற வாராயோ

வெள்ளியும் விண்மீனும் உனக்கு வழித்துணை
வெறியரும் கயவரும் எமக்குப் பெருவினை

கதிரவன் வந்ததும் உனக்கு விடுமுறை
கடைசி மூச்சுவரை எமக்குண்டோ விடுதலை

இருண்ட வானுக்கு நீவந்து ஒளிதந்தாய்
இருண்ட எம்வாழ்வுக்கும் சற்றேனும் வழிகாட்டு

பிறநாடுகளைக் கெஞ்சினோம் புறமுதுகு காட்டினர்
பிறைநிலவே நீயேனும் உதவிக்கு வாராயோ

வேண்டினோம் தெய்வங்களை வெறுமனே இருந்தனர்
வெண்ணிலவே நீயேனும் காப்பாற்ற வாராயோ...!

ஆக்கம்:காந்தன்
Blog Widget by LinkWithin