Monday, May 18, 2009

தலைவர் பிரபாகரன் பற்றிய அதிர்ச்சித் தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை

[புதிது] இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றினார்.

தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார்.

இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’ இது தொடர்பாக இராசபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.
பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. (மேலும் படிக்க)

********************************
  • தமிழினத் தலைவர் வே.பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகமே சாட்சியாக இருக்கிறது….

    ஆம்…! படையினர் அடையாளம் கண்டுள்ளதாக 18 பேர் பட்டியல், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • அந்தப் பட்டியலில் மேதகு வே.பிரபாகரன் பெயர் இடம்பெறவில்லை. (மேலும் படிக்க)
******************************
  • இன்று(18.05.2009) மாலை சனல் 4 தொலைக்காட்சிக்கு புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் எஸ்.பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். உலக ஊடகங்கள் தலைவர் பற்றி வேறு விதமாக அறிவித்துவரும் வேளையில் இச்செய்தி உலகையே உலுக்கியுள்ளது. (மேலும் படிக்க)
****************************
  • இதுவரை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சாவோ இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவோ அல்லது இலங்கையின் முப்படைகளின் தளபதியான மகிந்த இராசபக்சாவோ பிரபாகரன் கொல்லப்பட்டதனை அதிகாரப்படியாக அறிவிக்கவில்லை. (மேலும் படிக்க)
*************************
  • விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று காலை போர்ப்பகுதியில் இருந்து தப்பிச்செல்லும் பொழுது இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.(மேலும் படிக்க)
************************
  • தமிழ் மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. (மேலும் படிக்க)

*************************

  • NDTV செய்தி நிறுவனம்! வேலுபிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருகின்றது, இந்த செய்தியை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுருப்பதாகவும், DNA( மரபணு ) சோதனைக்கு பிறகு தான் உறுதியாக சொல்ல முடியும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியிருபதாகவும், NDTV செய்தி நிறுவனம் செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கின்றது! (மேலும் படிக்க)

****************************

  • விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். (மேலும் படிக்க)

6 comments:

சந்தனமுல்லை said...

மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது, உங்கள் பதிவு! நன்றி!

Anonymous said...

ஊடகச் செய்திகளை உண்மையில் நம்ப முடியவில்லை.
பிரபாகரன் - ஒரு சகாப்தம் - முடிக்க முடியாது.
பிரபாகரன் - ஒரு சூரியன்-கொழுத்த முடியாது.
பிரபாகரன் - ஒரு சமுத்திரம் - மூழ்கடிக்க முடியாது.
பிரபாகரன் - ஒரு நட்சத்திரம் - நசுக்க முடியாது.
பிரபாகரன் - ஒரு புயல் - நெருங்க முடியாது.
பிரபாகரன் - ஓர் ஆலமரம் - பிடுங்க முடியாது.
மொத்தத்தில் பிரபாகரன் - ஒரு மலை - நொறுக்க முடியாது....!!!

-சந்திரன் இரத்தினம்,
ரவாங், சிலாங்கூர்.

சிவனேஸ் said...

இந்த நூற்றாண்டின் இணைய‌ற்ற மாவீரனை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியுமா என்ன? எத்தனையோ போராட்டங்களை க‌ளம் கண்டது அவர் வாழ்வு, உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழனத்தையும் தலை நிமிரச்செய்தது அவர் மாண்பு. அவர் வாழிய பல்லாண்டு! கூடிய விரைவில் அவர் நலமாக உள்ளார் எனும் இனிய செய்தியையும் தாங்கள் வெளியிட்டு எங்களை ஆனந்ததில் ஆழ்த்த வேண்டும்.

Anonymous said...

வணக்கம் ஐயா. தங்கள் தகவல் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சந்தனமுல்லை said...

மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது, உங்கள் பதிவு! நன்றி!

வழிமொழிகிறேன்

Anonymous said...

Visit this...

http://www.youtube.com/watch?v=RED0EjlrVAE

Blog Widget by LinkWithin