Saturday, July 10, 2010

தமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் பேச்சு (காணொளி)



கடந்த சூன் 23 - 27 வரையில், தமிழ்நாடு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு பெருமாண்டமாக நடந்தேறியது. அதனுடன் சேர்ந்து, தமிழ் இணைய மாநாடும் நடைபெற்றது.


அதில், 24-6-2010ஆம் நாள் மாலையில் 'சிங்கை நா.கோவிந்தசாமி' ஆய்வரங்கில் என்னுடைய கட்டுரையினைப் படைத்தளித்தேன். அந்த அரங்கத்திற்கு ஐயா.நா.கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். அவ்வரங்கில் எனக்கு முன்னதாக ஐயா. காசி ஆறுமுகம் அவர்களும், முனைவர் ஐயா.துரை.மணிகண்டன் அவர்களும் கட்டுரை படைத்தனர்.


நான் படைத்தளித்த கட்டுரையின் தலைப்பு, 'வளர்ந்துவரும் மலேசியத் தமிழ் இணைய ஊடகம்' என்பதாகும். திருத்தமிழ் அன்பர்களின் பார்வைக்காக அதன் காணொளியை இங்கு பதிவிடுகிறேன். கண்டு மகிழ்க!


பகுதி 1:-


பகுதி 2:-


பகுதி 3:-


பகுதி 4:-

பி.கு:-இதே காணொளிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இணையத் தளத்திலும் காணலாம். அதற்குக் கீழே உள்ள தொடுப்புகளைச் சொடுக்கவும்.

1.http://www.wctc2010.org/videos.php?page=34&p=0 கோவிந்தசாமி அரங்கம் 8, 9, 10

2.http://www.wctc2010.org/videos.php?page=35&p=0 கோவிந்தசாமி அரங்கம் 11

2 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல உரை .பகிர்வுக்கு நன்றி .

நித்தீஷ்( Nithish) said...

ஐயா அவர்களுக்கு வணக்கம்

எனது பெயர் நித்தீஷ் செந்தூர். நான் சிங்கை சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் பயலும் மாணவன். தமிழ் இணைய மாநாட்டில் நீங்கள் இயம்பிய கருத்துகள் மிக அருமையாக இருந்தது. நீங்கள் மலேசியா தமிழ் இளையர்களிடையே இணையத்தளங்களில் அவர்கள் தமிழைப் பயன்படுத்துவது குறைவதாக உள்ளது என்பதைக் கூறினீர்கள். இதே நிலைமை தான் சிங்கையிலும். இந்த நிலைமை மாற்ற சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாணவர்களுக்கு பாட நேரங்களில் போது தமிழில் எப்படித் தட்டச்சு செய்வது என கற்பிக்கப்படுகின்றது. இது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு வாரத்திற்கு "E-Learning" சிங்கை மாணவர்களுக்கு நடத்தப்படும். தமிழ் பாடத்திற்கும் இது நடத்தப்படும். அப்போது மாணவர்கள் தங்களின் இல்லங்களியிருந்து தமிழ் கற்றுக்கொள்வர். என்ன ஆச்சிரயம் என்றால் நிறைய மாணவர்கள் முனைப்புடன் தமிழை இணையத்தளத்தில் பயன்படுத்தினர். "H1N1" காய்ச்சலின் போது, இது பேருதவியாக இருந்தது. நீங்களும் மலேசியாவில் இதை நடைமுறைப்படுத்தி பார்க்கலாம்

Blog Widget by LinkWithin