Thursday, November 27, 2008

மாவீரர் நாளில் வீர வணக்கம்


உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு காணும் உயிர்ப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகளை நினைவுகூரும் வீரத்திருநாள் மாவீரர் நாள். தமிழ் – தமிழினம் – தமிழ்மண் – தமிழியல் ஆகிவற்றுக்காகப் போராடிப் போராடி தங்கள் இன்னுயிரை ஈகப்படுத்திய மாத்தமிழர் - மறத்தமிழர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்த இப்பதிவை இடுகிறேன்.

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு இடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடு இயற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.


மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

"தமிழின மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்"

2 comments:

Anonymous said...

இனிய நண்பர் ஐயா சுப நற்குணன் அவர்களுக்கு வணக்கம். சிறிது இடைவேளக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். இருப்பினும் தங்களின் படித்து மகிழத் தவறியதே இல்லை.

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.....

" அழிக்க அழிக்க
அழிக்கப் பொறுமைக்
காக்கும் காடுகளைப்
பற்றித் தெரியாது உனக்கு...!!

காடுகளை அழிக்கலாம்..நீ..
மேடுகளை ஒழிக்கலாம்..நீ..
காட்டின் வேர்களையும்
மேடுகளின் வேர்களையும்
அழிப்பாயோ நீ...?
முடியுமோ உன்னால்..??

பொறுமையிழந்து
காட்டின் வேர்கள்..
ஒருநாள்... சுழல ஆரம்பிக்கும்..
அடி பொறுக்க மாட்டாமல்
சுடுமணல் புழுவாய்த் துடிப்பாய்
நீ அப்போது...!!

தமிழீழம் காக்க
புறப்பட்டத் தோழர்களே...
நெஞ்சில் துணிவைச் சுமந்து
செல்லுங்கள்...
வெற்றி பாதை
வெகு தொலைவில் இல்லை..
"தமிழீழம் விரைவில் மலரட்டும்.."

அன்புடன்,
திருத்தமிழ்த் தோழன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங், சிலாங்கூர்.

Anonymous said...

இனிய நண்பர் ஐயா சுப நற்குணன் அவர்களுக்கு வணக்கம். சிறிது இடைவேளக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். இருப்பினும் தங்களின் திருத்தமிழ் வலைப்பதிவைப் படித்து மகிழத் தவறியதே இல்லை.

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.....

" அழிக்க அழிக்க
அழிக்கப் பொறுமைக்
காக்கும் காடுகளைப்
பற்றித் தெரியாது உனக்கு...!!

காடுகளை அழிக்கலாம்..நீ..
மேடுகளை ஒழிக்கலாம்..நீ..
காட்டின் வேர்களையும்
மேடுகளின் வேர்களையும்
அழிப்பாயோ நீ...?
முடியுமோ உன்னால்..??

பொறுமையிழந்து
காட்டின் வேர்கள்..
ஒருநாள்... சுழல ஆரம்பிக்கும்..
அடி பொறுக்க மாட்டாமல்
சுடுமணல் புழுவாய்த் துடிப்பாய்
நீ அப்போது...!!

தமிழீழம் காக்க
புறப்பட்டத் தோழர்களே...
நெஞ்சில் துணிவைச் சுமந்து
செல்லுங்கள்...
வெற்றி பாதை
வெகு தொலைவில் இல்லை..
"தமிழீழம் விரைவில் மலரட்டும்.."

அன்புடன்,
திருத்தமிழ்த் தோழன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங், சிலாங்கூர்.

Blog Widget by LinkWithin