பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலேமங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)
பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)
இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)
இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)
விடுதலைப் புலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)
என்றுமே எங்களின் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)

தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள சுட்டிகளைத் தட்டிப் படிக்கவும்.
* தலைவரின் வாழ்க்கைக் குறிப்பு
- நன்றி: யாழ்.காம்(கவிதை)
- நன்றி: பிரபாகரன்.காம்(செய்திகள்)
2 comments:
வாழ்க நீ பல்லாண்டு
தமிழும், தமிழ் இனமும் உனக்கு தலை வணங்கும்.
நெஞ்சம் உருகி கண்ணீர் சிந்த வைக்கும் பாடல். அருமை. தமிழீழ விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடுவோம்.
Post a Comment