Monday, July 20, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பிறந்த ஒவ்வொரு தமிழனும் தமிழ் மரபியலுக்குச் சொந்தமானவன். காலங்காலமாக வாழையடி வாழையென வந்த மரபியலைப் போற்றுவதும், எந்தச் சூழலிலும் அதனைக் கலங்கப்படுத்தாமல் இருப்பதும், அதற்கு நெருக்கடி நேரும்போது ‘தாய்க்கொரு பழிநேர்ந்தால் மகற்கில்லையோ’ என்ற உணர்வின் உந்துதலில் அரணாகி நிற்பதுவும் தமிழ் இனத்தில் பிறந்த ஒவ்வொருவனின் கடமையாகும்.

சொந்த மொழியை - இனத்தை - சமயத்தை - இலக்கியத்தை - பண்பாட்டை - வரலாற்றை - சான்றோரை இழுவுபடுத்தி இன்பம்காணும் பேதையர்கள் நிறைந்ததுதான் தமிழினம் என்பது காலம் கட்டியங்கூறும் வரலாறு.

‘நீசபாசை’ என்றும், ‘ஐந்தெழுத்தால் ஆனதொரு பாடை’ என்றும், ‘தமிழ் இலக்கியங்களுக்கு ஆரியமே மூலம்’ என்றும், ‘தமிழ் அறிவியல் மொழியாகுமா? என்றும், ‘தமிழ் தொழில்நுட்ப உலகில் தழைக்குமா?’ என்றும், ‘தமிழ் அடுத்த 100 ஆண்டுகளில் அழிந்துவிடும்’ என்றும் பறபல பரிகாசிப்புக்கு உள்ளாகிய வரலாறு தமிழுக்கு உண்டு.

இத்தனைக்கும், இத்துணைக் கொடுமைகளையும் செய்தவர்கள் வேற்று இனத்தாரில்லை. தமிழினத்தில் பிறந்த கோடரிக்காம்புகளும் - தப்பிப் பிறந்த தறுதலைத் தமிழர்களும் ஆகியவரோடு எப்போதுமே தமிழுக்குப் பகையாக நிற்கும் ஆரியப் பார்ப்பனக் கூட்டமும்தான்.

இந்நிலையில், காலந்தோறும் தமிழுக்கு எதிராக வீசப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தெரிந்து மொழியறிஞர் பாவாணர் குறிப்பிட்டதுபோல, 50,000 ஆண்டுகள் வரலாறுகொண்டதும், 3,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செவ்வியல் நிலைக்கு முன்னேறிவிட்ட மொழியாகவும் இன்றைய கணினி இணைய உலகிலும் நின்று நிலைக்கும் மொழியாகவும் தமிழ் இருப்புக்கொண்டிருப்பது உலகில் வேரெந்த மொழிக்கும் இல்லாத தனியுயர்ச் சிறப்பாகும்.

அப்படிப்பட்ட தமிழில், மொழிக்கென்று ஒரு மரபு உண்டு! இனமரபு உண்டு! சமய மரபு உண்டு! பண்பாட்டு மரபு உண்டு! கலை மரபு உண்டு! இசை மரபு உண்டு! இலக்கிய மரபு உண்டு! வாழ்வியல் மரபு உண்டு! இப்படி மாந்த வாழ்வியலைத் தழுவிய எல்லாவற்றிலும் மிக உயரிய மரபுகளை வகுத்தவர்கள் தமிழர்கள்.

அப்படியிருக்க, சொந்த இனத்தின் - சொந்த மொழியின் பண்பாட்டை மதிக்கத் தெரியாத இன்றையத் தமிழர்கள் சிலர் ‘தமிழை’ வழக்குமன்றத்தில் ஏற்றி மரபு என்பதற்கு ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கொடுக்கவும் என்றெல்லாம் வாதம் செய்கின்றனர்.

இது எப்படி இருக்கிறது என்றால், தன்னைப் பெற்றெடுத்து - பாலூட்டி - சீராட்டி - தாலாட்டி - மார்பிலும் தோளிலுமிட்டு - அன்பொடு அறிவையும் புகட்டி ஆளாக்கி வளர்த்தெடுத்த சொந்த அம்மாவைப் பற்றி சொல்லச்சொல்லி பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டக் கதையாக இருக்கிறது.

மேலை நாடுகளின் பண்பாட்டுச் சிதவுகளினால் உருவெடுத்த ‘நவினம்’, ‘பின்நவினம்’ முதலான வடிவங்களில் ஈர்க்கப்பட்ட இளையோர்கள் மட்டுமல்ல, முதுமையிலும் "இன்பம் எங்கே இன்பம் எங்கே" என்று தேடும் மூத்தவர் சிலரும் இப்படிப்பட்ட குருட்டுக் கணைகளை ஏவிவருவது வழக்கமாகிவிட்டது. அந்த முனைப்பில், தமிழ் மரபியலைச் சிறுமைபடுத்துவதும் சிதைவுக்குள்ளாக்குவதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே - தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ ஒன்று தமிழகத்தில் கருவாகி இன்று உலகமெங்கிலும் பரவலாகி இருக்கிறது.

இவர்களுக்குத் தமிழின் மூக்குநுனி தெரிகிறதோ இல்லையோ. ஆனால், அன்னியரின் மூளை அணுக்கள்வரையில் துல்லியமாகத் தெள்ளெனத் தெரிகிறது.

அன்னியரின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெறுக்கதக்கவை அல்ல. அன்னியர் கண்டுபிடித்தாலே அவை தமிழுக்கு அன்னியம் என ஒதுக்கத்தக்கவையும் அல்ல. மாறாக, அவர்களின் கண்டுபிடிப்புகளில் இருக்கும் உயர்வுகளை மட்டுமே மதித்து ஏற்கமுடியுமே தவிர, இழிவுகளையும் கழிசடைகளையும் அல்ல.

தங்கத்தை உரசிப்பார்க்கும் தமிழ்க்கல்லில் அன்னியத் தகரங்களைக் கொண்டுவந்து உரசுவது மடமையன்றி வேரென்ன? அப்படியேதான், தமிழ் மரபியலோடு ‘பின்நவினம்’ போன்றவற்றை உரசிப்பார்ப்பதுவும்.

‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற தமிழ் மரபுக்கும் ‘உலகப் பொதுமை என்று என்று எதுவும் கிடையாது’ என்ற மேற்குலகப் பின்நவின மரபுக்கும் எத்துணை வேறுபாடு இருக்கிறது. ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்ற தமிழ் மரபு மாந்த இனத்தை உய்விக்கும் அளவுக்கு ‘மனித இனத்தின் முதன்மையான உந்துவிசை பாலுணர்வு வேட்கைதான்’ என்ற மேலையர் கண்டிபிடிப்பு எந்தளவுக்கு உய்விக்கும்?

இறைமையை ஒன்றாகவும்,

வாழ்வை இரண்டாகவும்,

மொழியை மூன்றாகவும்,

நெறியை - நிலத்தை நான்காகவும்,

திணையை ஐந்தாகவும்,

அறிவை - சுவையை ஆறாகவும்,

இசையை - கிழமையை ஏழாகவும்,

திசையை - மெய்ப்பாட்டை எட்டாகவும்,

மணிகளை - எண்களை ஒன்பதாகவும்,

கண்டு உலகத்திற்குத் தந்தது தமிழ் மரபியல் அல்லவா? இவை இன்றும் உலகத்திலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்ல.. இன்றளவும் மாற்றத்திற்கு உள்ளாகாமல் இருப்பதுவும் உண்மையல்லவா?

'மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது' என்ற கோட்பாட்டைக் கடந்து உலகத்தில் இன்னமும் மாறாமல் இருப்பவை ஏராளம் இருக்கின்றன என்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியுமா?

தமிழ் மரபியல் ஒன்றும் மாற்றத்தை மறுதளிக்கும் ஏற்பாடு கிடையாது. காலத்திற்கு ஏற்ற தேவையான மாறுதல்கள் தமிழிலும் ஏற்பட்டே வந்துள்ளன. ஆயினும், தமிழின் ஆணிவேரிலே கைவைக்கும் மாற்றங்கள் அடையாளம் தெரியாமல் பொசுங்கிப் போயுள்ளன என்பதே வரலாற்று உண்மை.

சான்றாக, வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் தமிழில் வழங்கிய 'மணிப்பிரவாள' நடை தோன்றி கோலோச்சியது. மணிப்பிரவாளத்தில் எழுதுபவரே மகா பண்டிதர் என்ற நிலை அன்று உருவாகியது. இதனால், தமிழ்ப் புலவோர் பலரும் மணிப்பிரவாளத்தில் எழுதத் தொடங்கினர். ஆனால், இன்று 'பின்நவினம்' பேசும் கத்துக்குட்டிகளுக்குத் தெரியுமா இந்த மணிப்பிரவாளம்? தெரியுமா இந்த வரலாறு?

ஓர் இடைக்காலத் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் மரபியலே தலையெடுத்தது. அப்படித்தான் இன்று, நவினமும் பின்நவினமும் பொங்கி எழும்புகிறது. ஆனால், அது விரைவிலேயே மரபியல் சமுத்திரத்தில் பெருங்காயமாகிக் கரைந்துபோகும்.

தமிழ் மரபியலுக்கு விளக்கம் கேட்போருக்கு நாம் ஒரே ஒரு சொல்லில் விளக்கம் சொல்லிவிடலாம். அந்தச் சொல் 'தொல்காப்பியம்'.

ஆம்! 'மரபு என்பதற்கு நிரந்திரமான தேசிய அங்கீகாரம் பெற்ற ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கொடுக்கவும்’ என்று இன்று கையைநீட்டி கேள்வி கேட்பவர்களுக்கு.. அன்றே நமது தமிழ் முப்பாட்டன் தொல்காப்பியன் பாட்டுவடிவில் பாடமே எழுதிவிட்டான்.

இதனைக்கூட அறியாதவர்கள் ‘இலக்கியம்’ என்று எதையோ படைக்கிறார்கள். இவர்களுக்கும், கருவிகள் எதுவும் இல்லாமல் உழவுக்குப் போகிறவர்களுக்கும்.. வாளைத் தீட்டாமல் போர்க்களம் புகுகின்றவர்களுக்கும்.. ஆண்மையே இல்லாதவன் ‘முதலிரவுக்காக’ முந்திக்கொண்டு ஓடுவதற்கும்.. எந்தவொரு வேறுபாடுமே கிடையாது.

தமிழ் மரபியல் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் தொல்காப்பியம் போன்ற நூல்களைப் தேடிப்பிடித்துப் படிப்பது நல்லது. படித்தாலும் புரியவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு தொல்காப்பியத் தமிழல்ல.. அதனைப் புரிந்துகொள்ள முடியாத மொழியறிவும் மொழிமானமும் கெட்டுப்போன தமிழன்தான்!

(மரபியல் மலரும்...)

16 comments:

Anonymous said...

தமிழ் மரபை இனிமைபட தெளிவுபட விளக்கிய தங்களின் கட்டுரை மிகவும் போற்றத்தக்கது. நாங்களும் இலக்கியம் படைக்கிறோம் என்று காம இச்சைகளைத் தங்களின் படைப்புகளில் கொட்டிக்கொண்டிருக்கிக்கும் நவீன 'இலக்கியவாதிகளுக்கு' (இலக்கில்லாதர்களுக்கு) மிகவும் பொருத்தமாகும். அக்கால இலக்கியம் யாருக்குப் புரியும்? என்று கேட்கும் கே.பாலமுருகன் போன்ற மடையன்களுக்குக் கீழ்க்காணும் கூற்றைப் 10 முறை படித்தால் ஓர் இரவிலே தெளிவு பிறக்கும். நன்றி.

"படித்தாலும் புரியவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு தொல்காப்பியத் தமிழல்ல.. அதனைப் புரிந்துகொள்ள முடியாத மொழியறிவும் மொழிமானமும் கெட்டுப்போன தமிழன்தான்"


- கண்ணன்
சுங்கை பெட்டாணி. மலேசியா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>கண்ணன்,

சில சொற்களில் கடுமையான வீச்சைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

நன்றி, மீண்டும் வருக!

Anonymous said...

"தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே - தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ "

மாட்டுக்கு ஒரு அடி;மனிதனுக்கு ஒரு சொல்...
உறைக்கணுமே...!
உறைக்கவில்லை என்றால் அது மாடுமல்ல மனிதனுமல்ல...

தப்பு நடந்துவிட்டது;அதை உணர ஆணவம் தடுக்கிறது...அதற்குத்தான் இத்தனை ஆர்பரிப்பு.

தூங்குபவனை எழுப்பிடலாம்... தூங்குவது போல் நடிப்பவர்கள்...????

வள்ளுவனை விட சுருங்கக்கூறி நிரம்ப விளங்க வைக்க முடியுமா? அத்தனை ஆணவமா? செய்து காட்டு...!

இங்கிலீஷ் விளங்கலைனா , கத்துப்போம்... தமிழ் விளங்கலைனா ஒத்தி வைப்போம்...! அதுதான் இவர்கள் தத்துவம்.

ஓட ஓட அடிப்போம் இவன்களை...

இவன்களின் படைப்புகள் படிக்கிற எவனும் காமுகன் ஆவது நிச்சயம்... கற்பழிப்புகள் கதறக் கதறத் தொடரும்..

ஓட ஓட அடிப்போம் இவன்களை...

சமூக சேவகன்,
தலைநகர்.

Anonymous said...

சான்றுகள் இருந்தும் என் கருத்தை வெளியிட அச்சப்படுகிறார் கே.பாலமுருகன். அதனால் சுப.நற்குணன் ஐயா அவர்கள் என் கருத்துக்கு இடமளிக்க வேண்டும்.

நவீன ஆபாசங்களும் மர்ம வீடியோ கடையும்' கே. பாலமுருகன் எழுதிய அனைத்து மானமுள்ள தமிழர்களும் படிக்க வேண்டிய படைப்பு.

அக்கதையில் இடம்பெற்றுள்ள பல மெய்சிலிர்க்க வைக்கும் பண்பாடான சொற்றாடர்களில் சில

\\ எல்லாப் படங்களிலும் இருந்த சமமான ஒற்றுமை, ஏதாவது ஓர் இடத்தில் திறந்தபடி தெரிந்து கொண்டிருக்கும் நடிகைகளின் உடல் பாகங்கள்தான். நடிகைகளின் தொப்புள், அதில் பம்பரம் விட்டுக் கொண்டிருக்கும் சின்ன கவுண்டர் விஜயகாந்த், நடிகை கௌதமியின் இடுப்பை அளவெடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இடைவெளியே இல்லாத நெருக்கத்தில் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள் என்று அந்தப் படங்களில் எல்லா இடங்களிலும் என்னை முதிர்ச்சிப்படுத்திய ஆபாசம், மலை இடுக்குகளில் சரிந்தபடியே இருக்கும் பனியைப் போலவே இருந்தது.\\

\\ யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.\\

சான்று - வல்லினம் - http://www.vallinam.com.my/jan09/column8.html

எப்படி எழுதும் ஓர் எழுத்தாளனை நாய் என்று சொல்லாமல், மேலும் எழுதுங்கள் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் மானக்கெட்டவன் அல்ல. எனக்குத் தன்மானம் உண்டு. நான் தமிழன். நீங்கள்??

தமிழரண்
பினாங்கு

Anonymous said...

வணக்கம். தங்களின் "தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும்" என்ற செய்தியைப் படித்தேன். காலத்திற்கு ஏற்ற செய்தி. இலக்கியம் படைக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஏதேதோ(குப்பை) எழுதும் ஒரு சில இலக்கியவாதிகளுக்கு இது ஒரு பாடமாக அமையும்....

நவின இலக்கியம் என்ற பெயரில் குப்பைகளைக் தங்களின் சிறுகதை, கவிதை, நாவல்களில் கொட்டி கொண்டிருக்கும் (வாந்தியெடுக்கும்) புத்திலக்கியவாணர்கள் நிச்சயமாக தமிழின் மரபை அறிந்து தங்களின் படைப்புகளைப் படைக்க வேண்டும். தமிழின் தொன்மையை உணராத இவர்களை தமிழர்கள் என்று சொல்வதா? மூடர்கள் என்பதா? படைப்புகளில் தமிழுணர்வை விட காம உணர்வுகளை அதிகம் திணிக்கும் ஒரு சில படைப்பாளர்கள் நம் சமுதாயத்தை அழிக்க வந்த புல்லுருவிகள்... இவர்களை இப்படியே விட்டால் தமிழன்னை நம்மை மன்னிப்பாளா? கிள்ளி எறிவோம் இவர்களை.
நன்றி.

உதயன்,
மலேசியா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>சமூக சேவகன்,

அடுத்த முறை வரும்பொழுது, உங்கள் பெயரோடு வாருங்கள். அது புனைப்பெயராக இருந்தாலும் தாழ்வில்லை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>தமிழரண்,

//சான்று - வல்லினம் - http://www.vallinam.com.my/jan09/column8.html//

//இப்படி எழுதும் ஓர் எழுத்தாளனை நாய் என்று சொல்லாமல், மேலும் எழுதுங்கள் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் மானக்கெட்டவன் அல்ல. எனக்குத் தன்மானம் உண்டு. நான் தமிழன். நீங்கள்??//

உங்கள் சீற்றத்திற்குக் கே.பாலமுருகனே அவருடைய வலைப்பதிவில் பதில் கொடுத்துள்ளார் இப்படி:-

//தேவையில்லாமல், வெறுமனே கலாச்சார அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற செயற்கை கட்டுமானங்களுக்காக தமிழில் கொச்சை வார்த்தையை, பிறரைத் திட்டுவதற்காகவோ அல்லது எழுத்தில் பயன்படுத்துவதோ, தவறுதான். அதை ஒப்புக் கொள்கிறேன்.//
http://bala-balamurugan.blogspot.com/2009/07/blog-post_20.html

பின்நவினம் என்பது மிகப்பரந்த எல்லைகொண்ட ஒரு இலக்கிய வடிவமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழில் எழுதும் சிலர், பின்நவினத்தைப் பாலியல் வட்டத்திலேயே கட்டுப்படுத்தி காயடித்து விடுகிறார்கள்.

ஒருவேளை, மிகக் குறுகிய காலத்தில் புகழ்பெறும் தந்திரமாக இது இருக்கலாம்.. அல்லது மலிவான விளம்பரம் தேடுவதற்காக இருக்கலாம்.

Anonymous said...

இவர்களுக்குத் தமிழுணர்வும் கிடையாது தாய்மை உணர்வும் கிடையாது. தாயிடம் குழந்தைப் பால் குடிப்பதைக் கூட பின்நவீனத்துவன் என்ற கண்னோட்டதில் பார்ப்பவர்கள் இவர்கள். மனநிலை பாதிக்கப்பட்ட இவர்களிடம் நமது மாணவர்கள் கல்வி கற்றால் அதோ கதிதான். காரணம் பிள்ளைகளிடம் தென்படும் சிறு-சிறு விலகல்களில் கூட இவர்களின் பின்நவீனத்துவன் வெளிப்படும். மிகச்சிறந்த உத்தியல்லவா? அதுவும் தமிழாசிரியர்கள் என்ற போர்வையில் எழுதிக்கொண்டிருக்கும் இவர்களை முதலில் களையெடுக்க வேண்டும்.


உண்மையுடன்
நாகராஜன்
பினாங்கு

Anonymous said...

எதே தான் மட்டுமே பெரிய அறிவாளி எனவும் பிறருக்கு ஒன்றுமே தெரியாதது போல பேசியிருக்கிறார் நமது அருமை புத்திலக்கிய வாணர்... ஏதோ நிறைய படைப்புகளைக் கொடுத்துள்ளாராம்... உணர்வு முழுக்க பாலியல் உணர்வுகளும் கழிசடைகளும் தான் இவர்களின் பின் நவீனத்துவப் படைப்பாக வெளிவருகின்றன.
அதைக் கேட்க கூடாதாம். காரணம் இன்றைய இளைஞர்களுக்கு இதுதான் மிகவும் பிடிக்கிறதாம். யோனிக்குத் தரூகிற மரியாதையைக் கூட மரபிலக்கியவாணர்கள் இவர்களின் படைப்புகளுக்குத் தருவதில்லையாம். யோனியை விட கேவலமானதுதான் இவர்களின் படிப்புகள்..... அவர்கள் மொழியில். உங்களிடத்தில் படிக்கும் 10 வயது மாணவன் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.....படம் போட்டு காட்டி விளக்கம் தருவீர்களோ? அல்லது நீங்களே காட்சிப் பொருளாக மாறிவிடுவீர்களோ? நீங்கள் தான் பின் நவீனத்துவவாணரே?

கே.புண்ணியசாமி
பீடோங் கெடா

Anonymous said...

வணக்கம் வாழ்க

இலக்கணமும் இலக்கியமும் எழுதாதான் ஏடெழுதல் கேடு நல்கும் என பாவேந்தர் மொழிகின்றார். ஆனால் இன்றைய சூழலில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் பலர் தாங்கள் என்ன எழுதுகின்றோம் என்ற சிந்தனையில்லாமல் கண்டதையெல்லாம் எழுதித் தொலைக்கின்றனர். சமுதாய தேவை என்ன ? எதை எழுதலாம் எதை எழுதக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருத்தல் வேண்டும். நவீனம் என்பதற்காக மட்டும் வெறுமனே பாலியல் சார்ந்த வட்டத்திற்குள்ளே இருந்துவிடுதல் ஆகா. அதை தாண்டி சிறந்த தரமான படைப்புகளைத் தமிழுக்கும் தான் பிறந்த இனத்திற்கும் தர வேண்டும். மாறாக மனங்களைப் பாதிக்கும் பாலியல் கூறுகளை தவிர்தல் நலம்.

அதையும் மீறி நான் எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் என நினைப்பவர்கள் "தன் தாயின் உடையை களைந்து அவளை அம்மணமாக நடுவீதியில் நிறுத்தி புகைப்படம் எடுப்பதற்குச் சமம்.

இப்படிம் நடக்கிறது இதைக்கூட நவீன படைப்பாக்கலாம் என நினைப்பவர்களை என்ன சொல்லித் திருத்த ? இது தனிமனித சாடல் அல்ல்...

இவனா தமிழன் இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது

என்றும்
கோகுலன் பீடோங் கெடா

Anonymous said...

கட்டுரை அருமை ஐயா.
இதுவும் விளங்கவிலை என்று சொன்னால் அவர்களுக்கு மண்டை கணம் சற்று அதிகம் என நினைத்துக் கொள்வோம். இளவட்டம் அல்லாவா..

ஜெயவர்மா
கூலிம் கெடா

Anonymous said...

//"தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே - தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ "//

யயர் சோற்றுப் பட்டாளம் ஐயா? தொல்காப்பியம், சங்க இலக்கிய வ்குப்பு, பட்டய வகுப்பு என பணம் பண்ணுவது யார்?

//வள்ளுவனை விட சுருங்கக்கூறி நிரம்ப விளங்க வைக்க முடியுமா? அத்தனை ஆணவமா? செய்து காட்டு...!//

எங்கே நீ திருக்குறளை முழுவதுமாக பின்பற்றுகிறாயா? சொல்.

//இவன்களின் படைப்புகள் படிக்கிற எவனும் காமுகன் ஆவது நிச்சயம்... கற்பழிப்புகள் கதறக் கதறத் தொடரும்..//

சிற்றறிவே அற்ற ஒரு புலம்பல். அது மட்டும் நவீனம் அல்ல என்பதைகூட புரிந்துக்கொள்ல முடியாத அப்பாவியே.

மனோஜ்
பீடோங்

Anonymous said...

//ஏதாவது ஓர் இடத்தில் திறந்தபடி தெரிந்து கொண்டிருக்கும் நடிகைகளின் உடல் பாகங்கள்தான். //

எங்கே இல்லை இதுபோல சொல்லுங்கள்? நானே பத்திரிக்கையிலும் இதழ்களிலும் ஆபாச நடிகைகளின் கண்களை உறுத்தும் படங்களைப் பார்த்துள்ளேனே? எது ஆபாசம், அந்தப் படங்கள் ஏற்படுத்தும் மனப்பாதிப்பைச் சொல்வது ஆபாசமா அல்லது இந்த மாதிரி தொப்புள் நடிகைகளின் படங்களைப் பிரசுரிப்பது ஆபாசமா?

மனோஜ்
பீடோங்

Anonymous said...

//இவர்களிடம் நமது மாணவர்கள் கல்வி கற்றால் அதோ கதிதான். காரணம் பிள்ளைகளிடம் தென்படும் சிறு-சிறு விலகல்களில் கூட இவர்களின் பின்நவீனத்துவன் வெளிப்படும். //

சான்றுகள் ஏதும் இல்லாமல் இப்படியொரு ஆபாசமான முறையில் யாரையும் குற்றம் சாட்டுவது சரியல்ல.

தமிழ் எல்லோரையும் சீர்ப்படுத்தும். அவர்களளயும் சேர்த்துதான். ஒரு தாய் மக்கள், இப்படியெல்லாம் பேசுவதைச் சுப.நற்குணன் ஐயா தடை செய்வது நல்லது.

தமிழில் பண்புதான் அவசியம்

சுமதி
கூலிம்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>சுமதி,

//தமிழில் பண்புதான் அவசியம்//

உங்கள் மறுமொழியை இணைத்துள்ளேன். இதையே, புத்திலக்கியவாணர்களுக்கும் சொன்னால் நல்லது.

அங்கு, இதைவிட படுமோசமாப் 'பண்பு' பந்தாடப்படுகிறது.

Anonymous said...

மிக அருமையான விளக்கத்தை தந்துளீர்கள்.இன்னமும் இவர்களுக்கு விளங்கவிள்ளையென்றால்,இவர்கள் மனிதர்களே அல்ல அதையும் தாண்டி......?

அன்புடன்,
ஆதிரையன்.

Blog Widget by LinkWithin