Tuesday, August 24, 2010

ஐ-போன் 4 வருகிறது; தமிழை ஒருபடி உயர்த்த போகிறது


எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய ஏந்து(வசதி)களுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.

(மலேசியாஇன்று தளத்திலிருந்து ஒரு செய்தி)

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.

இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.

ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.

(விக்கிபீடீயாவில் இருக்கும் தமிழ்ப் பக்கம்)

நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது. தமிழின் நிலையை அல்லது இருப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது.

(ஐபோனில் மோபைல்கினி செய்தி)

இவ்விடயம் குறித்து திரு.முத்து நெடுமாறனுடன் உரையாடினேன். அதனை அப்படியே கீழே தருகின்றேன்.

சுப.ந:- ஐபோன் 4 கருவியில் தமிழ் நிலையை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளீர்கள்....
முத்து:-இன்னும் உயர்த்த திட்டம் இருக்கிறது .... அவற்றிற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறேன்
சுப.ந:-மகிழ்ச்சியும்... பெருமையும் ஒரு சேர ஏற்படுகிறது....
முத்து:-தமிழகத்தில் இதன் பயன்பாடு அவ்வளவு இல்லாவிட்டாலும், நமது நாட்டிலும் சிங்கப்பூரிலும் அதிகம் பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்
சுப.ந:-தங்கள் பணிகள் அளப்பரியன...
முத்து:- அடுத்த மாதம் ஐ-போன்4 நமது நாட்டில் வெளிவர வாய்ப்பிருக்கிறது
சுப.ந:-அப்படியா?
முத்து:-கடந்த வாரம் இதை நான் சிங்கப்பூரில் வாங்கினேன்.....தமிழ் எழுத்துகள் மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. அஞ்சல் உள்ளீட்டு முறையையும் அதில் சேர்த்துவிட்டேன்
சுப.ந:-கேட்கவே பெருமிதமாக உள்ளது.
முத்து:-தமிழிலேயே மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, ஃபேஸ்புக் போன்ற செய்திகளை அதில் இருந்து அனுப்பலாம்
சுப.ந:-கணித்தமிழைப் பயன்படுத்தும் ஆர்வம் இப்போது கொஞ்சம் கூடியுள்ளது நம் நாட்டில்... அதைத் தங்கள் கண்டுபிடிப்புகள் மேலும் வளர்த்தெடுக்க கண்டிப்பாக உதவும்.....
முத்து:-நானும் அதையே விரும்புகிறேன்

(ஐ-டியூன்சில் தமிழ் பாடல்களின் பெயர்கள்)

திரு.முத்து நெடுமாறன் சொன்னது போல, இந்தப் புதிய வகை ‘ஐபோன் 4’இல் தமிழிலேயே எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பது தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றால் மிகையன்று. மேலும், ‘ஐ-டியுன்’ எனப்படும் இசை நிரலியில் பாடல்களின் பெயர்களையும் பாடல் விவரங்களையும் தமிழிலேயே பதிவுசெய்து கொள்ள முடியும்.

‘ஐ-போன் 4’ தமிழிலேயே வழங்கும் சேவைகளை இப்பதிவின் இடையிடையே உள்ள படங்கள் வழியாக நீங்களே பார்த்திருப்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் புருவங்கள் இரண்டும் மேலே உயர்ந்தனவே கவனித்தீர்களா?

  • மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-
3. செல்லினம் முகநூல் (http://facebook.com/sellinam)

8 comments:

Jay said...

அருமை அருமை பெருமையாக உள்ளது. தமிழ் ஐபோனில் அடுத்த கட்டத்தை அடைந்து விட்டது. தமிழில் உள்ளிடக் கூடியதாக இருப்பது இரட்டை மகிழ்ச்சி.

இன்னமும் கூகிளின் அன்ட்ரோயிட் இயங்கு தளத்தில் இயல்பிருப்பாக தமிழ் ஆதரவில்லை. இந் நிலையில் ஐபோனை பாராட்டவே தோண்றுகின்றது.

அருமையான நெஞ்சைக் குளிரவைக்கும் தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எங்க ஊர் மைக்ரோமேக்ஸ் 3000ரூ செலவில் தமிழ் வரிகளைக் காட்டுகிறதே..,

Udhayakumar said...

I am using sellinam and the tool is good.

NONO said...

iPhone 4 தமிழ் முதல் முதலாக out-of-box செரியாக தெரிகின்ற smartphone-என நினைக்கிறேன். மற்றது Maemo OS தமிழ் எழுத்துரு நிரவினால் செரியாக வேலை செய்வதாக கேள்வி.iOS4 இதில் என்ன குறை என்னவென்றால் தமிழ் விசைப்பலகை மற்றும் menu இல்லை,மற்றற படி ஆவணத்தின் பெயர் எல்லாம் தமிழில் செரியாக தெரிகின்றது. ஆப்பில் அடுத்த பதிப்பில் இந்த குறைபாட்டை போக்கும் என்று எதிர்பாப்போம்.

ramalingam said...

windows phoneக்கு work out ஆகுமா?

seeprabagaran said...

இனிக்கும் செய்தி.

ILA (a) இளா said...

ஐபோன் வெச்சு நான் போட்ட முதல் தமிழ்ப் பதிவின் இடுகை

Anonymous said...

தமிழுக்கு பெருமை சேர்க்கும் iphone வாழ்த்துக்கள் - எழுத்து

Blog Widget by LinkWithin