Thursday, February 11, 2010

செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு!! தமிழுக்கு வேட்டு!!!


மலேசியாவின் செம்ம தனியார் வானொலி ஒன்று, அண்மையில் செம்ம அடைமொழி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு ‘ஆகா சிறந்த இசை’ என்று முழங்கிய அந்தச் செம்ம வானொலி இப்போது புதிதாக ஒரு செம்ம அடைமொழியுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“செம்ம ஓட்டு(Hottu) செம்ம ஈட்டு(Hittu)” என்பதுதான் அந்தத் தமிழ் வானொலியின் புதிய அடைமொழி. தமிழைக் கெடுத்தது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தையும் போட்டு செம்ம சொதப்பல் செய்திருக்கும், அந்தச் செம்ம புகழ்பெற்ற வானொலிக்கு எதிராக பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் செம்ம கண்டனம் ஒன்று தெரிவித்துள்ளார்.

அந்தச் செம்ம வானொலியின் செம்ம அறிவிப்பாளர்களுக்கு இதனைச் செம்ம ‘சமர்ப்பணம்’ செய்கிறேன். இதையெல்லாம் அவர்கள் காதுகொடுத்து கேட்கமாட்டார்கள் என்றாலும், செம்ம நேரத்தில் செம்ம கண்டனத்தை சொல்லவேண்டியது நமது செம்ம கடமை என்பதால் செம்ம மெனக்கெட்டு சொல்லிவைக்கிறேன்.

இதனால், அந்தச் செம்ம வானொலிக்காரர்களுக்குச் செம்ம கோபம் வரலாம் என்று யாரும் தயவுசெய்து செம்ம தப்புக்கணக்குப் போட வேண்டாம். இதுவெல்லாம் அவர்களுக்குச் செம்ம புளித்துப் போன கண்டனம்தாம்.

செம்ம காசு கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் இந்தச் செம்ம அடைமொழியையும் பயன்படுத்துவார்கள் இன்னும் செம்ம கேவலமான வேலைகளையும் துணிந்து செய்வார்கள். -சுப.ந

பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அறிக்கை


நமது நாட்டின் தனியார் வானொலி நிலையமான டி.எச்.ஆர்.ராகாவின் புதிய அடைமொழி மாற்றப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏதோ ஆங்கில வானொலி நிலையத்திற்குச் சூட்ட வேண்டிய அடைமொழியை, தமிழ் வானொலி நிலையத்திற்கு மறந்துபோய் சூட்டிவிடார்களோ என்றுதான் தோன்றுகிறது எனப் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

“செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு” என்ற அடைமொழியை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போது, வெறுப்பும் ஆத்திரமும் சேர்ந்தே வருகிறது என்றார் அவர்.

ஒரு தமிழ் வானொலி நிலையத்திற்கு ஏன் இந்த ஆங்கிலம் கலந்த அடைமொழி என்று அவர் வினா எழுப்பினார். அதுவும் ‘ஹோட்டு’, ‘ஹிட்டு’ என்பது பலதரப்பட்ட பொருளைத் தரக்கூடியதாகும்.

இளைஞர்கள் இதனை உச்சரிக்கத் தொடங்கினால் மோசமான அர்த்தத்தைத் தந்துவிடும்.

தமிழ் வளர்ச்சி பற்றியும், தாய்மொழியைப் பற்றியும் தமிழ் ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்ட்யுவரும் இவ்வேளையில் டி.எச்.ஆர்.ராகா இப்படி நிமிடத்திற்கு நிமிடம் “செம்ம ஹோட்டு, செம்ம ஹிட்டு” என்று தமிழை வளர்க்கும் பணிக்குப் புறம்பாகச் செயல்படுவது நல்லது அல்ல. டி.எச்.ஆர்.ராகா சமுதாயப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சுப்பாராவ் வலியுறுத்தினார்.

ஆகவே. டி.எச்.ஆர் ராகா உடனடியாக இந்த அடைமொழியை மாற்றியமைக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ்மொழி அமைப்புகள் இந்த அடைமொழிக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

7 comments:

Anonymous said...

முட்டாள்கள்! முழு முட்டாள்கள்!

- அ. நம்பி

மனோவியம் said...

சொல்லித் திருத்தவேண்டிய நிலைமை நம தமிழர்களூக்கு ஐயா.ஏன் தமிழை இப்படி கூறு போடுகின்றார்களோ? எல்லாம் தமிழ் நாட்டு தொலைக்காட்சியில் வரும் தமிழ்லிங்கிலிஸின் தாக்கம் தான் தமிழை கற்பழிக்கும் இவர்கள் எல்லாம்....தரம் கெட்ட மனிதர்கள் தான்.

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் said...

பாவம் வேறு நல்ல முழக்க வரிகளே தெரியவில்லை போலும்.
அதுகளுக்கு அவ்வளவே அறிவு..
கேட்டு இரசிக்கும் மானங்கெட்ட மக்களை என்னவென்று சொல்ல?
கேட்க நல்லாருக்கு, அர்த்தம் யாருக்கும் வேண்டும் என்று நினைக்கும் மா அறிவு நம் மக்களைச் சார்ந்த ஒன்றல்லவா! கேணையன் இருக்கும் வரை கேப்பையில் நெய் வடிந்து கொண்டே இருக்கும்...

Sathis Kumar said...

செம்ம பதிவு...

subra said...

நான் இந்த செம வானொலியை எந்தனையோ வருடங்களுக்கு முன்பே
கேட்பதை நிறுத்திவிட்டேன் ,வீட்டிலும் உத்தரவு போட்டுவிட்டேன்
அதுமட்டுமல்ல அன்று அந்த செம வானொலியில் என்ன பொருட்கள்
விளம்பரம் கேட்டேனோ ,இதுவரைக்கும் அந்த பொருட்களை
வாங்குவதில்லை ,வாங்கவும் மாட்டேன் ,கொதிக்கிறதை நிறுத்த
எரிகிறதை பிடுங்குவோம் .சி நா மணியன்

Thiruu00 said...

நான் இந்த செம வானொலியை எந்தனையோ வருடங்களுக்கு முன்பே
கேட்பதை நிறுத்திவிட்டேன். அன்பர் திரு சுப்ரா'வை போல நானும் அந்த வானொலியை கேட்பதில்லை. என்ன என்னை கொஞ்சம் "kuno" என நண்பர்கள் கூறுகிறார்கள். பரவாவில்லை. கூறிக்கொள்ளட்டும். ராகா'வை பற்றி கூறிக்கொண்டிருப்பதை விட கேட்காமல் இருந்து விடுவோம். அவர்களே தானாக மாறுவார்கள்.

Tamilvanan said...

த‌மிழை த‌மிழ‌னிட‌மிருந்து மீட்க‌ வேண்டிய‌ சூழ்நிலையில் உள்ளோம். வியாபார‌திற்காக‌ த‌மிழை புற‌ந்த‌ள்ளும் இப்பிற‌விக‌ளை செருப்பால் அடிக்க‌ வேண்டும்.

Blog Widget by LinkWithin