தமிழ் வேர்ச்சொல் ஆய்வு நூல்கள்
நூலாசிரியர் : தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம்
மலேசிய வரலாற்றில் முதன் முறையாக வெளிவரும் வேர்ச்சொல் ஆய்வுநூல்.
மொழிஞாயிறு பாவாணர் நிறுவிய சொல்லாய்வு வழியில் அமைந்த அரியநூல்.
தமிழ் மொழியின் ஆழத்தையும் உச்சத்தையும் ஒருசேர விளக்கும் அருமைநூல்.
தமிழின் தலைமையையும் தகுதியையும் சான்றுகளோடு நிறுவும் அறிவுநூல்.
தமிழுக்கும் உலக மொழிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் உயர்நூல்
தனியொருவராக இருந்து தம் வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளை ஈகம்செய்து சொல்லாய்வுத் துறையில் முழுமையாகவும் முறையாகவும் ஈடுபட்டுச் செழிக்கச் செய்த மொழிஞாயிறு பாவாணரிடமிருந்து புறப்பட்ட இர.திருச்செல்வம்(நூலாசிரியர்) என்னும் கதிரவக்கீற்று மலேசிய நாட்டிலும் தமிழ்கூறு நல்லுலகிலும் பெரிதான ஒரு வீச்சை எற்படுத்தக் கதிர்த்துக் காத்திருக்கிறது என்ற உண்மைக்கு இந்நூல் நல்லதொரு சான்று.
இந்நூலைப் படித்து முடிக்கின்ற உள்ளங்களில் தமிழைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்; தமிழுணர்வு ஏற்படும். தமிழ்மீது இருந்துவந்த தாழ்வுணர்ச்சி மறைந்து நம்பிக்கை ஏற்படும். தமிழ்மீது ஏற்படும் நம்பிக்கை தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
தமிழியல் வாழ்வையும் வளர்ச்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு, எந்தவொரு வணிக நோக்கமும், ஈட்டமும் கருதாமல் தூய்மை எண்ணத்தோடு வெளியிடப்பெற்றுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெறுமாறு பிறந்த இனத்தால் அமைந்த உறவால் அன்போடு வேண்டுகிறோம்.
தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்,
No.4, Lorong Bunga Kantan 10,Taman Kerian, 34200 Parit Buntar, Perak, Malaysia.
Tel : 6012-5645171 / 6012-4643401 / 605-7160967
email : engunan@tm.net.my
2 comments:
அண்ணன் திருச் செல்வம் அவர்களின் தமிழியல் ஆய்வு நம் போன்ற மலேசியத் தமிழர்கள் பெருமைக் கொள்ளச் செய்கிறது.
தமிழகம் தமிழ் பணிகளுக்கு முன்னோடியாய் இருந்த காலம் மாறி புலம் பெயர்ந்த தமிழர்களில் தமக்கென தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ள மலேசியத் தமிழர்களாலும் மொழியியல் ஆய்வுகளை தமிழின் மேன்மைக்காய் செய்ய முடியும் என்பதை அண்ணன் திருச் செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்ணனின் முயற்சிகளை அவரின் தம்பிகளாகிய நாம் உலகம் எங்கும் பரப்பும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
மலேசியத் தமிழ்நெறி அறிஞரான அண்ணன் திருச்செல்வத்தின் பணிகளுக்கு உறுதுணையாக இருப் போம்.
தமிழைக் காப்போம்.
மொழி இணைய இயக்கம்.
www.mozhi.net
I need this two books.. I could not send email to the id which has been given in the address.. How can I get those books here in Tamilnadu?. Please help ..
Post a Comment