Sunday, August 28, 2011

'மென்தமிழ் சொல்லாளர்' சொல் திருத்தி அறிமுக விழா


உலகமே கணினியின் துணையுடன் இயங்கிவரும் வேளையில், நம் தாய்மொழியாம் தமிழ் எவ்விதத்திலும் பிந்தங்கிவிடாமல் இருக்க கணினி இணையத் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கங்கள் நடந்துவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழில் இதுவரை இல்லாத ‘சொல் திருத்தி’ (Spell Checker) மென்பொருள் வெளிவந்துள்ளது. ‘மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர்’ என்னும் இந்த அரிய மென்பொருளைத் தமிழுக்கு உருவாக்கிக் கொடுத்திருப்பவர் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள்.

மென்தமிழ்தமிழ்ச்சொல்லாளர் (Tamil Wordprocessor) என்ற தமிழ்மென்பொருள் தமிழுக்கு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது. கணினிமொழியியல் (Computational Linguistics) , மொழித்தொழில்நுட்பம் (Language Technology) ஆகிய அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்துருக்கள் (fonts) ஒருங்குறி உள்ளீட்டு முறையில் (Unicode) அமைந்துள்ளன. தமிழ் இணையம்99 உட்பட நான்குவகை விசைப்பலகைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆவணங்களைப் பதிப்பிக்கத் தேவையான அனைத்து பதிப்புவசதிகளும் இடம் பெற்றுள்ளன. இம்மென்பொருளில் சொற்பிழைதிருத்தி, சந்திவிதி விளக்கம், அகராதி பயன்பாடு ஆகிய பல இன்றியமையாத பயன்பாடுகள் நிறைந்துள்ளன.

மேலும், ஏறத்தாழ 45ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட ஒரு தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, இணைச்சொல், எதிர்ச்சொல் அகராதி ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

வேர்ச்சொற்களில் மட்டுமல்லாது விகுதிகள் ஏற்ற சொற்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அதனையும் கண்டறிந்து இச்செயலி திருத்துகிறது. தவிர, தமிழில் ஏற்படும் ல, ள, ழ / ண,ன / ர, ற மயங்கொலிச்சொல் அகராதியும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மென்பொருள் பற்றிய அனைத்துத் தகவல்களும் நிகழ்ச்சி நிரலிகையில் காண்க:-

தமிழ் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தமிழாசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய மென்பொருளாக இது அமையும்.

***************அறிமுக நிகழ்ச்சி **************

இந்த ‘மெந்தமிழ் சொல்லாளர்’ அறிமுக நிகழ்ச்சியும் தமிழ்த் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கமும் ஒருசேர நடைபெற உள்ளது. ‘உத்தமம்’ எனப்படும் உலகத் தமிழர் தகவல் தொழிநுட்ப மன்றத்தின் சார்பில் சி.ம.இளந்தமிழ் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்

நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் வருமாறு:

நாள்:- 04-09-2011 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:- காலை மணி 8.30

இடம்:- சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலும்பூர்.

மென்பொருள் விலை விவரம் - RM300 வெள்ளி (அறிமுக நிகழ்ச்சியின்போது RM200 வெள்ளிக்குக் கிடைக்கும்)

இந்நிகழ்ச்சிக்கு உங்கள் வருகையை உறுதிசெய்யத் தயதுசெய்து, நவராசன் 0173693737 என்ற தொலைப்பேசி எண்ணில் பெயரைப் பதிந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் மென்பொருள் விளக்கக்காட்சி அங்கம் இடம் பெறுகிறது. மென்பொருளின் செயற்பாடுகள். பயன்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.

பி.கு:- இதே நிகழ்ச்சி வடமலேசியா வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது.

*நாள்:- 05-09-2011 (திங்கட்கிழமை) *நேரம்:- மாலை மணி 4:30 *இடம்:- துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம், புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு. (தொடர்புக்கு:- திரு.மணியரசன் 012-4411535)

@சுப.நற்குணன்

4 comments:

அம்பலத்தார் said...

தமிழ் இனி மெல்லச் சாகாது.... வீறுகொண்டு எழுகிறது. தகவலிற்கு நன்றி

Inbachudar.Muthuchandran said...

நம் இன்பத்தமிழ் இனி என்றும் வாழும். இந்த அறிமுக விழாவில் கலந்து கொள்ள அடியேன் ஆவலுடன் இருக்கின்றேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அனைவரும் பயன்பெற அழைக்கும் இனிய நண்பர் இளந்தமிழ் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.

munril said...

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே........_கலைமகள்(பாரதி)

Unknown said...

Congratulations...
i'm as tamil school ICT teacher would like to buy 1 for my school. How?

Blog Widget by LinkWithin