Friday, October 17, 2008

தமிழ்நெறி – தமிழ்மீட்புத் திங்களிதழ்


தமிழைக் காக்கவும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கவும் மலேசியாவில் வெளிவரும் ஒரே திங்களிதழ் தமிழ்நெறி.

தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப்படிக்க வேண்டிய திங்களிதழ் தமிழ்நெறி!

தமிழ்நெறி அத்தோபர் திங்களிதழ் வந்துவிட்டது! அதன் உள்ளடக்கங்கள்...


1.அறிவியலையும் கணிதத்தையும் மீண்டும் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்.
2.மனித வளர்ச்சியும் விருத்தியும் தொடர்பான கோட்பாடுகள்.
3.வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்.
4.'மக்கள் ஓசை' திருமாவளவனைச் சீண்டியது தமிழ் இனமான உணர்வாளர்களைச் சீண்டியதாகும்.
5.பாலகோபாலன் நம்பியார் இப்படிச் செய்யலாமா?
6.நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்
7.பூச்சார் பூச் பூச் பூக்கா! நாக்கா!
8.தமிழர்களுக்குத் தமிழ்மொழி தாய்ப்பாலுக்கு நிகரானது
9.யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை!
10.புரட்சித் துறவி வள்ளலார்.

இன்னும், சொல்லும் பொருளும், தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு, சிறுகதை, தமிழ்க் கலைச்சொற்கள், இலக்கணம், பண்டார் பாரு செந்தூல் இடநிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்நெறிக் கலந்துரயாடல்

என பல சூடான, சுவையான, இனமான உணர்வூட்டும் கட்டுரைகள்; செய்திகள்; துணுக்குகளைத் தாங்கி மலர்ந்துள்ளது. தவறாமல் உடனே வாங்கவும்..!

மேல்விளக்கம் பெற:- தமிழ்நெறி, Lot 274, Kampong Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. தொ.பேசி:- 03-61874103

3 comments:

Sathis Kumar said...

வணக்கம் ஐயா,

இத்திங்களிதழ் பினாங்கில் கிடைக்குமா?

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) said...

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவொர்த்.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீஸ் முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சதீசு குமார்,

தமிழ்நெறி இதழ் இன்னும் பரவலாகக் கடைகளில் கிடைப்பதில்லை.

தமிழன்பர்கள் பலர் தன்னார்வ அடிப்படையில் இவ்விதழைப் பரப்புகின்றனர் அல்லது விற்பனை செய்கின்றனர்.

இன்னும் பல அன்பர்கள் ஆண்டுக் கட்டணம் செலுத்தி அஞ்சலில் பெற்றுக் கொள்கின்றனர்.

தாங்கள் இவ்விதழை வாங்க விரும்பினால் தயவுகூர்ந்து தமிழ்நெறி முகவரி அல்லது தொ.பேசி எண்ணுடன் தொடர்பு கொள்க!

Blog Widget by LinkWithin