Thursday, October 09, 2008

களவைக் கற்கலாமா? (தமிழமுது 4)

நாம் அடிக்கடி கேட்கும் அல்லது பயன்படுத்தும் பழமொழிகளில் "களவும் கற்று மற" என்ற ஒரு பழமொழி உண்டு.

களவு என்றால் திருட்டு. அப்படியானால், இந்தப் பழமொழியின் பொருள் திருட்டையும் கற்றுக்கொண்டு பிறகு மறந்துவிட வேண்டும் என்றாகும். களவை எதற்குக் கற்க வேண்டும்; கற்ற பிறகு எதற்காக மறக்க வேண்டும்?

'களவும் கற்று மற' என்பது தவறு.
'களவும் கத்தும் மற' என்பதே சரி.

களவு கத்து(சூது) இரண்டையும் நாடக்கூடாது என்பதே இதன் பொருள். பேச்சு வழக்கில் பிழையாகிப் போய்விட்ட இந்தப் பழமொழியை இனிச் சரியாகப் பயன்படுத்துவோம்.

4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

வணக்கம் ஐயா,

நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி. இப்படிதான் பல பழமொழிகள் காலத்தால் திரிந்து பலப் பொருட்களில் விளங்குகிறது.

வேறு ஒரு உதாரணமும் உண்டு

உதாரணம்:

மண் குதிரையை நம்பி ஆற்றில் இரங்காதே.

--> மண் குதிரையை நம்பி ஏன் ஆற்றில் இரங்க வேண்டும். அவ்வளவு மடையர்களா நம் ஆட்கள்.

சரியாக சொன்னால்:

மற்குதிரை நம்பி ஆற்றில் இரங்காதே.

--> மற்குதிர் நில பரப்பை போல் இருக்கும் ஆனால் கால் வைத்தால் கீழே இரங்கிவிடும்.

மேலும் எழுதுங்கள் ஐயா.

பி.கு: மேல் காணும் பின்னூட்டங்கள் அனைத்தும் 'ஸ்பாம் மேசேஜ்'களாக இருக்கிறது. எரிதம் செய்தல் நல்லது.

Sathis Kumar said...

எனக்கொரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

'ஆயிரம் பொய் சொல்லி, ஒரு கல்யாணம் செய்யலாம்'

பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வது இன்பமான திருமண வாழ்க்கைக்கு ஏற்புடையதாகுமோ..

அப்பழமொழியை 'ஆயிரம் போய் சொல்லி, ஒரு கல்யாணம் செய்யலாம்' என்று கூற வேண்டும்.

ஒரு திருமணம் புரிவதற்கு, பல இடங்களுக்குச் சென்று விசாரித்தல் வேண்டும் என்று அப்பழமொழி நமக்கு வலியுறுத்துகிறது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர்கள்
சதீசுகுமார், விக்கினேசு,

பழமொழி பற்றி ஒரு தொடராக எழுதலாம் என நினைத்துத் தொடங்கினேன்.

மறுமொழிகளே ஒரு தொடராக ஆகிவிடும் போல் தெரிகிறது...!

உங்கள் இருவரின் பகிர்வுகளுக்கும் நன்றி.

இப்படி இன்னும் நிறைய பழமொழிகள் உண்டு. அடுத்தடுத்து எழுதுவேன்.

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) said...

அன்புடைய மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்களே,

எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம்,இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்றை ஜசெக,ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வை பற்றிய அறிவிப்பு செய்தியை தங்களது வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஈழத்தமிழர்களின் கண்ணிரை துடைக்க ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை செய்வோமாக.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்!! நிகழ்வின் விவரம் பின்வருமாறு :-

இடம் : பிறை,ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்
தேதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்

அன்புடன்,

சத்திஸ் முனியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி
ஜாலான் பாரு கிளை,பிறை.

Blog Widget by LinkWithin