Monday, February 22, 2010

செம்ம ஓட்டு செம்ம ஈட்டு! ராகாவுக்குச் செம்ம பாட்டு!!

“செம்ம ஓட்டு செம்ம ஈட்டு” என்ற புதிய முழக்கத்தோடு பவணிவரும் ராகா வானொலிக்குப் பொதுமக்களிடமிருந்து செம்ம பாட்டு கிடைத்திருக்கிறது.

அந்தச் செம்ம வே(பா)ட்டுகளைப் பார்ப்பதற்கு முன்பதாக, “செம்ம ஓட்டு செம்ம ஈட்டு” என்ற போக்கிரித்தனமான அடைமொழியை ராகா செம்ம வானொலி எங்கிருந்து பொறுக்கி எடுத்தது என்பதைத் தெரிந்துகொள்வோமா?

தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற புறம்போக்குச் சினிமா சாக்கடையிலிருந்து “செம்ம ஓட்டு” என்ற கண்ணறாவியை, ராகா வானொலி நக்கிக்குடித்து வாந்தியெடுத்திருக்கிறது.

உங்கள் பார்வைக்கு இதோ அந்தச் சினிமா கண்ணறாவி..!!



இப்படியொரு ஆபாசமான பாட்டிலிருந்து திருடிய கொச்சையைத்தான் செம்ம ராகா வானொலியின் அறிவிப்பாளர்கள் ஆணும் பொண்ணுமாக எல்லாரும் மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்; பொதுமக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் அந்தச் செம்ம வானொலி இன்னமும் அந்தக் கருமாந்திரத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறது.

இதனால், தமிழைக் கொச்சைப்படுத்தி சீரழிக்கும் இப்படியொரு நாசகரமான வேலையைச் செய்திருக்கும் தி.எச்.ஆர்.ராகா வானொலிக்குச் செம்ம கண்டனம் குவிந்துகொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்ப்பற்றுமிக்க இளைஞர்கள் ராகாவின் மொழியழிப்புக் வேலையைப் பற்றி காவல்துறையில் புகார் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகா வானொலிக்கு எதிரான கண்டனங்களையும் புகார் செய்தியையும் கீழே படிக்கவும்.


1.திருத்தமிழில் வந்த கண்டனங்களை இங்கே சொடுக்கிப் படிக்கவும்

2.மலேசியாஇன்றுவில் வந்த கண்டனங்களை இங்கே சொடுக்கிப் படிக்கவும்

3.மக்கள் ஓசை நாளிதழில் வந்த கண்டனங்கள், புகார் செய்தி.




பி.கு:-மேலே உள்ள காணொளியைத் திருத்தமிழில் வெளியிட நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன். சான்று காட்ட வேண்டிய நோக்கத்தில்தான் அக்காணொளி இடம்பெற்றுள்ளதே தவிர, மலிவு விளம்பரம் தேடும் நோக்கம் துளியளவும் கிடையாது என்பதைத் திருத்தமிழ் அன்பர்களுக்குத் தெரிவிக்க விழைகிறேன். -சுப.ந

7 comments:

மதுரை சரவணன் said...

உங்கள் கண்டனம் அனைவரையும் போய் சேரவேண்டும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

தமிழரண் said...

வணக்கம்.

//கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்;//

இந்தச் செம்ம கேடு கெட்ட வானொலி அறிவிப்பாளர்களுக்கு நீங்கள் மேற்கூறியவைகள் எல்லாம் என்ன என்று கேட்பார்கள் ஐயா. இந்தச் செம்ம கேடு கெட்ட வானொலி அறிவிப்பாளர்களைத்தானே நம் இளைஞர்களும் இளைஞிகளும் தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்!!

subra said...

கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்; பொதுமக்களின் உணர்வுகளைக்

நல்ல செருப்பு அடி அய்யா,சீன பெருநாளுக்கு perak ipoh
துணிகள் வாங்க சென்றேன் ,அந்த புடவை கடையில்
இந்த மானங் கேட்ட வானொலி வாந்திஎடுதுக்கொண்டு
இருந்தது ,அதனால் அந்த கடைக்கு ஏறக்குறைய rm500
நட்டம் கடையை மாட்றிவிட்டேன் .

Tamilvanan said...

திருந்துவ‌த‌ற்கு வாய்ப்பு கொடுப்போம். அட‌ம் பிடித்தால் திருத்துவோம். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் த‌‌க‌ரும். அடி உத‌வ‌து போல் அண்ண‌ன் த‌ம்பி உத‌வ‌ மாட்டான்.

ந.தமிழ்வாணன் said...

தாய்த்திரு நாட்டில் தமிழைக் காக்கவும் மீட்டெடுக்கவும் பலர் தங்கள் பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் நலன்களையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பணப் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இத்தனியார் வானொலியிலை மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அடடா, இது குறித்து காவல் துறையில் முறையிடும் அளவு முனைப்பா? பாராட்டுகள். தமிழ்நாட்டில் இப்படி நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால் தனியாக மொழிக் காவல் நிலையங்கள் தொடங்கும் வேலைகள் உள்ளன :(

மலேசியத் தமிழ் நண்பர்களின் சீரிய தமிழ்க் காப்பு முயற்சிகளை வணங்குகிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பல இலட்சம் தமிழர்கள் வாழும் மலேசியா பற்றிய முறையான தகவல்கள் ஏதும் இணையத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. மலேசியத் தமிழ் நண்பர்கள் இதில் முயற்சி எடுத்து தமிழ் விக்கிப்பீடியா போன்ற களங்களில் பங்களிக்கலாமே? இது தொடர்பாக ஏதும் உதவிகள் தேவையெனில் சொல்லுங்கள். நன்றி.

Blog Widget by LinkWithin