Tuesday, February 02, 2010

இந்தியர்கள் பிச்சை எடுக்க! சீனர்கள் உடலை விற்க!

“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க வந்தனர்”.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”.

"எசுபிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு மீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும்".

“பகசா மிலாயு (மலாய்மொழி) அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும்".

இன்று (2.2.2010) காலையில் மலாக்காவில் நடந்த ஒரே மலேசியா கருத்தரங்கில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு உதவியாளர் கொட்டிய கொடுஞ்சொற்கள் இவை.


மேலே படத்தில் நடுவில் நிற்கும் நசிர் சாபார் என்பவரின் இந்தப் பேச்சானது மலேசிய இந்தியர்கள், சீனர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தேசநிந்தனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. (விரிவாக)

  • செய்தி:-மலேசியாஇன்று

பி.கு:-இனங்களுக்கு இடயிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையில் பேசிய நசிர் சாபார், பிரதமரின் சிறப்பு உதவியாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவார் என பிரதமர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் பேசிய கருத்துகள் மலேசியப் பிரதமரின் நிலைப்பாடு அல்ல எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

Tamilvanan said...

//"எசுபிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு மீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும்//

குடியுரிமையை கூட‌ எதோ நாம் இவ‌ர்க‌ளுக்கு (இந்திய‌ர்/சீன‌ர்) போட்ட‌ பிச்சை என்ற‌ எண்ண‌த்தில் இருக்கிறார்க‌ள் அம்னோ ஆட்சியாள‌ர்க‌ள்.

//இவர் தேசநிந்தனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.//

இம்மாதிரியான‌ இன‌வாதிக‌ளின் குடியுரிமையை முத‌லில் ப‌றிக்க‌ வேண்டும். நாடு ந‌ல‌ம் பெறும்.

Blog Widget by LinkWithin