Saturday, February 07, 2009

தமிழ்த்தொண்டர் படைச் செலவு:- தேவநேயப் பாவாணர்

இன்று 7-2-2009 மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறந்த நாள். தமிழும் தமிழரும் தரணியில் தன்மானத்தோடும் தலைநிமிர்ந்தும் வாழ, மொழியியல் ஆய்வுப்பணிகளின் வழியாக தனியொருவராக நின்று 50 ஆண்டுகள் போராடிய தமிழ் வேங்கை. அன்னாரின் நினைவாக இப்பதிவை இடுகின்றேன்.


***********************************
தமிழ் வேங்கை பாவாணர் இயற்றிய இப்பாடலை, உலகம் முழுவதுமுள்ள தமிழீழத்து ஆதரவு வேங்கைகளுக்காக தலைவணங்கி வழங்குகின்றேன்.

************************************

படையெடுக்கவே கடு நடை தொடுக்கவே
பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத் தமிழ் மறவரே..
பாரெல்லாம் ஊரெல்லாம்
பண்டை முத்தமிழ் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

பரவை தன்னடி தொழப் பணித்த பாண்டியன்
பாங்கிலே வளர்ந்து பண்பில் ஓங்கு பாண்டி மறவரே..
பரண்மனை அரண்மனை
பைந்தமிழையே பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

தூங்கெயில் கொண்ட தொடித்தோள் நற்செம்பியன்
தோன்றி வந்த குடியின் மானம் ஈண்டு சோழ மறவரே..
தொழிலகம் பொழிலகம்
தூய தமிழைப் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

தென் குமரிமேல் வடபனி மலைவரை
சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே..
தெருவிலும் மருவிலும்
தீந்தமிழ் தனைப் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய்
வீறுகொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும்
வெல்லுவோம் செல்லுவோம்
வெண்ணிலவையும் கொள்ளுவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்
*பஞிலம்=படையணி

(பாவாணரின் இசைத்தமிழ் கலம்பகம் தொகுப்பிலிருந்து)

பாவாணர் பற்றிய எனது முந்தையப் இடுகையைப் படிக்கவும்

6 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.
பாவாணர் பிறந்தநாள் நினைவைப் போற்றிய தங்களைப் பணிந்து வணங்குகிறேன்.இதே நாளில் பாவாணரின் தனித்தமிழ் மொழிக்கொள்கை குறித்து ஒரு தமிழ்ப்பேராசிரியர் பேசிய பேச்சை என் பக்கத்தில் இப்பொழுதான் இட்டிருந்தேன்.கண்டு மகிழ்க.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

தமிழ் said...

அகம் மகிழ்ந்தேன்.
நன்றி நண்பரே

குலவுசனப்பிரியன் said...

இந்த காலகட்டத்திற்கு பொருத்தமான, அருமையான பாடல். ஆய்வுபூர்வமாக தமிழைச் சூழ்ந்த மாயை நீக்கி தமிழருக்கு பெருமை உணர்த்திய பாவாணரின் பிறந்த நாளை நினைவூட்டியமைக்கு நன்றி..

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர்கள் முனைவர் ஐயா, திகழ்மிளிர், குலவுசனப்பிரியன்,

உங்கள் உள்ளன்புக்கு என்னுடைய தலைதாழ்த்தி நன்றிகூறி வணங்குகிறேன்.

குமரன் மாரிமுத்து said...

தமிழர்/தமிழ் மொழிக்காக அரும் பாடுபட்ட பாவாணர் போன்ற நல்லுள்ளங்கள் தொடர்பான குறிப்புகளை குறித்த நேரத்தில் வெளியிடும் பாங்கு போற்றத்தக்கது. நன்றி.

கோவி.மதிவரன் said...

வாழ்க பாவாணர் தமிழ்த்தொண்டு.

Blog Widget by LinkWithin