Sunday, November 09, 2008

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்

இன்று 9-11-2008 தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது
***********
*********

தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.

தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.

இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.

மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார்.


பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே 'வீர மாமுனிவர்' என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.

2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.

3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.

4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.

5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.

6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.

7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று


''தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது'' என்று தவத்திரு. தனிநாயகம் அடிகளார் கூறுவதை யாரும் மறுக்க இயலாது.

''18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்'' என்று 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப்(G.U.Pope), இவரைத் 'தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்' என்று போற்றியுள்ளார்.

''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே'' என்று செக் நாட்டுத் தமிழறிஞர் 'கமல் சுவலமில்' பாராட்டியுள்ளார். எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ''கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்'' என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர்.

  • நன்றி:- உதயை.மு.வீரையன்

15 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

சிறப்பான கட்டுரை... வீரமாமுனிவர் பற்றிய பல விடயங்களை விளக்கிக் கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி... தமிழுக்கு தொண்டு செய்த இவரை நம் தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரியும்... தமிழை பேசக் கூச்சப்படும் இந்நாளில் இவர் போன்றோறை அறிந்துக் கொள்வது தேவையன்று எனவே கருதுகிறார்கள் போலும்...

Sathis Kumar said...

//1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.//

வணக்கம் ஐயா, அத்தோபர் 20,1578-ல் 'தம்பிரான் வணக்கம்' என்ற கிறித்துவ நூல்தான் முதன்முதலாக அச்சுக்கு வந்த தமிழ் நூல் என அறிகிறேன். இந்நூலின் பிரதியொன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இச்சுட்டியில் அப்பிரதியைக் காணலாம்.
http://4.bp.blogspot.com/_Za3-ZDfiOMs/SRcPf_a7ssI/AAAAAAAADBs/c9tD7MvpnPY/s400/Thambiraan_Vanakkam-R.jpg

ஆனால் 1554-ல் லிசுபன் நகரில் கார்டிலா எனும் தமிழ் உச்சரிப்பு கொண்ட நூல் வெளியிடப்பட்டது மற்றுமொரு சிறப்பான செய்தி. இந்நூல் ரோமன் எழுத்துகளால் அச்சிடக்கப்பட்டிருந்தது.

Sathis Kumar said...

//தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்//

தமிழ் மண்ணில் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது இன்றையத் தமிழகம் சார்ந்த இடத்தையா?

'தம்பிரான் வணக்கம்' கொல்லம் கேரளாவில் அச்சடிக்கப்பட்டது.

கோவி.கண்ணன் said...

வீரமாமுனிவரை பெஸ்கி பாதிரியார் என்று மதக்குறீட்டில் சொல்வதை விட பெஸ்கி அய்யர் என்ற தமிழ் குறியீட்டில் சொல்வதே பொருத்தமானது.

கால்டுவெல், ஐயூபோப் போன்றவர்களுக்கு அய்யர் என்ற சிறப்பு பெயர் கொடுத்து தமிழர்கள் போற்றி இருக்கிறார்கள். அய்யர் என்பது சாதிய அடையாளம் இல்லை. தாரளமாக வீரமாமுனிவரை பெஸ்கி அய்யர் என்றே சொல்லலாம்.

கோவி.கண்ணன் said...

வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள் பார்பனிய திரிபு பகுத்தறிவு ஒவ்வாக்கதைகளை கிழித்தது.

அதுபற்றி எதுவுமே குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்கள். :(

Anonymous said...

உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இன்னும் எவ்வளவோ புதைக்கப்பட்டுவிட்டது. வெளியேவந்தால் சரித்திரம் நாறும்.

மு.வேலன் said...

நன்று.
//4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.//
உயர்ந்த சாதனையான சேவை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் விக்கினேசுவரன்,

//தமிழை பேசக் கூச்சப்படும் இந்நாளில்..//
இவர் போன்றோரின் தமிழ்ப்பற்றை நம் தமிழர்க்கு எடுத்துக் காட்ட வேண்டும்!
மறுமொழிந்தமைக்கு நன்றி!

*****

திருத்தமிழ் அன்பர் சதீசு குமார்,

தங்களின் மேலதிக விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
//தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்//
நாம் படித்த குறிப்பு இதனையே சொல்லுகிறது. இருப்பினும், மற்றவர் யாரேனும் அறிந்திருந்தால் உறுதிபடுத்தவும்.

*****
திருத்தமிழ் அன்பர் ஐயா கோவி.கண்ணனார்,

தங்களின் கூற்றை ஏற்கிறேன்.

//வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள் பார்பனிய திரிபு பகுத்தறிவு ஒவ்வாக்கதைகளை கிழித்தது//

இதனைப் பற்றி அதிக குறிப்புகள் கிடைக்கவில்லை. தாங்கள் அறிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே..

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா!

*****

பெயர் குறிப்பிடா திருத்தமிழ் அன்பரே,

//உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இன்னும் எவ்வளவோ புதைக்கப்பட்டுவிட்டது. வெளியேவந்தால் சரித்திரம் நாறும்//

பகிர்ந்துகொள்ளலாமே..! இங்கே இல்லாவிட்டாலும் மின்னஞ்சல் வழியாக..!

உங்கள் வருகைக்கு நன்றி!

*****

திருத்தமிழ் அன்பர் மு.வேலன்,

திருக்குறளின் அறத்துப்பால் பகுதியை வீரமாமுனிவர் தமிழில் மொழிப்பெயர்த்துத் திருக்குறளுக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்பது தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமைதான்.

தாய்மொழி said...

தமிழின் வரலாற்றை மிக அழகாக சித்தரிக்கும் உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். உங்கள பணிகள் நன்று.

Anonymous said...

வீரமாமுனிவர் க்கு ஒரு பக்கத்தை போட்டிருக்கும் நீங்கள், அவர் எதற்க்காக இத்தனை சிரத்தையுடன் தமிழை கற்றார் என்பதை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டீர்கள். அவர்களின் நோக்கம் மதத்தை பரப்புவது, தமிழனிடம் தமிழில் சொன்னால் மட்டுமே ஏறும், மட்டுமல்ல அவர் பேச்சு நடை உதாரணமாக தமிழ் நாட்டில் பல பாகங்களில்மி பேசப்படும் பேச்சுதமிழை எழுத்தில் கொண்டு வந்தார். அதர்க்காக பூர்வீக தமிழ் எழுத்துக்களை அவர் விருப்பத்திற்கு மாற்றி அமைத்தார். அதையும் ஏற்றுக்கொண்டனர் அடிமையாக மற்றும் அடிவருடிகளாக இருந்த தமிழர்கள். தமிழன் எப்போதும் அடிமைதான். இந்த நிலை எப்போது மாறும். இது போன்ற கட்டுரைகளை படித்து உண்மையான வரலாற்றை மக்கள் மறந்து, தமிழும் தமிழ் பாரம்பரியமும் அழியாமல் தடுக்க உதவுங்கள் நல் உள்ளம் கொண்ட தமிழ் எழுத்தாளர்களே ‍‍‍...பாலாஜி‌

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

தங்களைப் போன்ற வலைப்பதிவு முன்னோடிகள் என்னுடைய திருத்தமிழை வாசித்து மறுமொழியும் வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். மிக்க நன்றி.

மதமாற்றம் பற்றிய தங்களின் கருத்தில் உடன்படுகின்றேன்.

அதேவேளையில், தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள பங்கையும் மறுப்பதற்கில்லை. அன்னாரின் பணிகள் தமிழை மேலும் வளம்பெறச் செய்தன என்பது மறுக்க முடியாதது அல்லவா?

ஆழமான மத நம்பிக்கையில் ஊறி இருந்த போதிலும், தமிழை ஆழமாகக் கற்று தமிழுக்கு அரும்பணி ஆற்றியுள்ள வீரமாமுனிவரைப் போற்றுவதில் தவறில்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

தான் சார்ந்த கிறித்துவ மதத்தை மட்டுமே பரப்ப எண்ணியிருந்தால், ஓரளவு தமிழை பேச, படிக்க, எழுதக் கற்றுக்கொண்டு தமிழரை ஏமாற்றி மதம் மாற்றிவிட்டு அவர் போயிருக்கலாம்.

ஆனால், அப்படியில்லாமல் தமிழையே மூச்சாக நேசித்து அந்தத் தமிழுக்கே பெரும்பணியும் ஆற்றியுள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது.

கிறித்துவ மதம் அவர் உள்ளத்தின் ஆழத்தைத் தொட்ட அளவுக்கு தமிழும் கண்டிப்பாகத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. அப்படியேதான், சி.யு.போப் அய்யர் போன்றவர்களும்.

மதம் பரப்ப வந்தவர்களையும் தம் வசமாக்கிய வல்லமை பெற்றது நம் தமிழ் என்பது பெருமைக்குரியது.

நம் மக்கள் மதம் மாறிப் போனதற்கு அவர்களைக் குற்றம் சொல்வது சரியல்ல.

இங்கே இருந்த சமயங்களும் மதங்களும் சரியாக இருந்தாலும், அதனை வழிநடத்துவோர்கள் சரியாக இல்லாத கரணியத்தாலும், சமய - மதப் பெயரில் நடத்தப்பட்ட நீதியற்ற நடைமுறைகளாலும் பாதிப்புற்ற மக்கள் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறினார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.

ஆங்கிலேயரும் கிறித்துவமும் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் தமிழும் தமிழ் மக்களும் ஒரு வேளை பூண்டோடு அழிந்திருக்கக்கூடும் என்பதை அறிவரும் போது, அந்த மேலையர்களை நன்றியோடு நோக்கத் தோன்றுகிறது.

தங்களின் கருத்தை வலியுறுத்தும் சான்றுச் செய்திகளை விடுத்து உதவினால் படித்துப் பார்த்து மெய்பொருள் காண்பேன்.

Anonymous said...

மிகவும் நன்றி,

\\\அதேவேளையில், தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள பங்கையும் மறுப்பதற்கில்லை. அன்னாரின் பணிகள் தமிழை மேலும் வளம்பெறச் செய்தன என்பது மறுக்க முடியாதது அல்லவா\\\\

வளம்பெறச் செய்தன என்பது மறுக்க முடியாதது,ந‌ல்ல‌து உங்க‌ள் க‌ருத்துக்கு உட‌ன்ப‌டுகிறேன். ஆனால் இத‌ன் தாக்க‌ம் இப்போது என்ன‌? ஆதித‌மிழ‌ர்க‌ளாகிய‌ திருவ‌ள்ளுவ‌ரும், தொல்காப்பிய‌ரும் இஸ்ரேலிய‌ யூதர் ஜேசுவா(ஏசு கிறிஸ்து) வின் சீட‌ர் தோமாவின் மாண‌வ‌ர்க‌ளாகி ஆதிகிறிஸ்த‌வ‌ர்க‌ளாகி நிற்கின்ற‌ன‌ர்.
இதை நிரூபிக்க‌ சென்னையில் மயிலை கத்தோலிக்க பாஸ்டோரல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட மாநாடு,"தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு’ என்கிற பெயரில் 2008 ஆகஸ்ட் 14-15-16 17 ஆகிய நாட்களில், ந‌ட‌த்த‌ப்ப‌ட்டது". கிறிஸ்த‌வ‌ மத பரப்பிகள் முனைவர் தெய்வநாயகம், முனைவர் தேவகலா போன்றோர் இது போன்ற கருத்துக்களை நச்சு விதைகளை தமிழகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். இவர்களும் தமிழுக்காக அல்லவா மாநாடு நடத்துகிறார்கள் என்றிருந்தால் தமிழின் எதிர்காலம் என்ன? காலம் பதில் சொல்லும் என்று சுப.நற்குணன் மற்றும் தமிழ் அறிஞர்களும் காத்திருக்கலாமா?

தமிழன் தூங்குகிறனா? தமிழனுக்கு என்று கலாச்சாரம் கிடையாதா? தமிழன் வரலாறு அற்றவனா?
பழம் பெருமைபேசிப்பேசி இருந்தால், தமிழன் வரலாறு இழந்து அனாதையாக நிற்கும் நிலை வரும்.

\\\இங்கே இருந்த சமயங்களும் மதங்களும் சரியாக இருந்தாலும், அதனை வழிநடத்துவோர்கள் சரியாக இல்லாத கரணியத்தாலும், சமய - மதப் பெயரில் நடத்தப்பட்ட நீதியற்ற நடைமுறைகளாலும் பாதிப்புற்ற மக்கள் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறினார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.

ஆங்கிலேயரும் கிறித்துவமும் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் தமிழும் தமிழ் மக்களும் ஒரு வேளை பூண்டோடு அழிந்திருக்கக்கூடும் என்பதை அறிவரும் போது, அந்த மேலையர்களை நன்றியோடு நோக்கத் தோன்றுகிறது\\\

நனும் தமிழகத்தில் மேல் வகுப்பினரால் வீட்டின் முன் வாசல் வழியாக அனுமதிக்கப்படாதா அவர்களால் மிக அடிமையாக இன்றும் நடத்தப்படும் ஒரு வகுப்பை சார்ந்தவன். ஆனால் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறிவிடவில்லை எனது முன்னோர்கள். போராடினோம் வெற்றி கண்டோம்.

ந‌ன்றி காட்டும் அள‌வுக்கு உண்மையாக முழுமனதோடு த‌மிழுக்கு என்ன‌ செய்தார்க‌ள்?
வ‌ந்தார்க‌ள், வென்றார்க‌ள், வெல்வார்க‌ள்.
வாய் மூடி மைளனியாய் இருப்போம். வாழும் த‌மிழ் ??????!!!!
...பாலாஜி

Anonymous said...

தமிழன் தூங்குகிறனா? தமிழனுக்கு என்று கலாச்சாரம் கிடையாதா? தமிழன் வரலாறு அற்றவனா?

- Balaji

If you go deeper into the above questions, you will find that the Tamilan culture was destroyed long before the advent of Missionaries. Who are these so-called brahmins? They were sanskrit speakers, who came down to Southern India.

The charge that you laid against missionaries can be laid against these sanskrit speaking Brahmins. Why did they learn Tamil and wrote Tamil literature ? To impose their Sanskirtised religion Brahminism on the original religion of Tamils. The original religion of Tamils is today unknown so disfigured it is by the Brahminism.

The Hinduism of which you are proud is nothing but a creation of Sanskirt speaking non-Tamils. Please remember that.

You, as Tamils, have allowed your culture destroyed and disfigued even before the arrival of Christians.

You should hurl your questions on to the heads of Bramins of Tamilnadu who are against your language in Hindu worship.

Christians are not against your language in Christian worship. You can attend any mass in any church to see in which medium they sing their hymns.

Except the words alleluya and amen, there is no foreign words.

Can you understand what the Hindu priests say in archanas? It is not your Tamil of which you speak so proudly. It is a language of people whose are foreigners.

Selective amnesia!

Shame!

Anonymous said...

நனும் தமிழகத்தில் மேல் வகுப்பினரால் வீட்டின் முன் வாசல் வழியாக அனுமதிக்கப்படாதா அவர்களால் மிக அடிமையாக இன்றும் நடத்தப்படும் ஒரு வகுப்பை சார்ந்தவன். ஆனால் நிம்மதி - விடுதலை வேண்டி மதம் மாறிவிடவில்லை எனது முன்னோர்கள். போராடினோம் வெற்றி கண்டோம்.

ந‌ன்றி காட்டும் அள‌வுக்கு உண்மையாக முழுமனதோடு த‌மிழுக்கு என்ன‌ செய்தார்க‌ள்?
வ‌ந்தார்க‌ள், வென்றார்க‌ள், வெல்வார்க‌ள்.
வாய் மூடி மைளனியாய் இருப்போம். வாழும் த‌மிழ் ??????!!!!

- Balaji

Your forefathers were treated like dogs by the Tamil brahmins. They were not allowed to live within towns and cities. The Brahmins call Sanskrit their mother tongue. They now say it is Tamil to escape periyaarists attack.

They have usurped your religion. Treated fellow tamils like you as slaves to them.

What did you struggle and what did you win?

Can you explain?

Till today, dalits are dogs to these Brahmins. They dont come near a dalit for fear of thiittu.

You talk so proudly of winning.

No. you hve not won. The Hindu religion of Tamilnadu is ruled by Brahmins and other upper castes stand behind these brahmins.

The dalits are far away. If they claim any rights in the religion for dignity, they will be thrashed with uruttukkattais.

You are a born losers. You are proud to be slaves to these people. Arent you?

Do christian priests treat you as slaves; debar you to enter the church? Deabr you to share the same dining table with them?

More than religion, more than your mother tongue, more than your culture, it is dignity and self-respect that should be important to you.

To cheat you and make you bond slaves, they will show your the religion, the language, the culture - the three things in which your part as dalits is NIL; and, by making you slaves, they had ensured that you would not attain any intellectual improvment.

First reclaim your dignity and self-respect. Then, talk about anything else, Mr Balaji!

Anonymous said...

***தமிழா விழித்திடு,
**நீயாருக்கும் அடிமை இல்லை, **நீயாரையும் அடிமையாகவோ, யாருக்கும் அடிமையாகவோ நினைப்பதை நிறுத்து, **தலைநிமிர், கல்வியால் உலகை வெல்லலாம்,
**கல்வியால் அடிமைத்தளைகளை தகர்த்தெரியலாம்,
**தமிழ் பேசு கூடியமானவரை,
**தமிழில் ஆங்கிலத்தை கலக்காதே,
**தமிழா நாம் உலகத்திற்க்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்தவர்கள்.
**உலகின் முதலில் தோன்றிய இயற்கை மொழியாகிய தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள்.
**இயற்கையை உலகவாழ்க்கையை பகுத்தறிய முயல்,
**** அடுத்தவன் ஊதும் ஊத்திற்க்கு ஒத்து ஊதாதே***
நீ முன்னேற முடியாது.

தான் என்ற அகம்பாவம் வேண்டும்? ஆம் நான் தமிழன், உலகின் மூத்த, இளமை மாறாத தமிழ் மொழி பேசுபவன் என்ற அகம்பாவம் வேண்டும்.

போலிகளிடமிருந்து தமிழையும், தமிழ் சமயத்தையும் மீட்டெடுப்போம்.

பாலாஜி…

Anonymous க்கு மிகவும் தாமதமாக பதில் எழுதுவதற்க்கு மன்னிக்கவும். ஏய் அன்னிய ஆதிக்க அடிவருடியே கிறிஸ்த்தவத்தை அதன் நிறுவன செயல்பாடுகளை நீயாயப்படுத்த என்ன வேண்டுமானாலும் எழுதலாம? நீ ஒரு இனத்துரோகி
http://www.tamilhindu.com/2009/03/subbu-column-16/
இதை சொடுக்கினால் புரியும் கிறிஸ்த்தவ‌நிறுவன செயல்பாடுகள்

Blog Widget by LinkWithin