Wednesday, November 25, 2009

2012:- மறுமொழிகள் மாயமாக மறைந்த கதை

2005 முதல் திருத்தமிழ் வலைப்பதிவை எழுதி வருகிறேன். கணினி – இணையம் – வலைப்பதிவு உலகம் பற்றியும் இவை தொடர்பிலான தொழில்நுட்பம் பற்றியும் பெரிதாக எதுவும் அறியாதவன்; தெரியாதவன். ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பமும் படித்தறியாதவன்.

ஏதோ, கைமண் அளவுக்கு நானறிந்த சில திறன்களின் துணைகொண்டு வலைப்பதிவு எழுதி வருகிறேன். அதுவும்கூட, இறைமைத் திருவருள் வலத்தால் எனக்கு வாய்க்கப்பெற்ற எனது தாய்மொழியாம் தமிழுக்குப் பணிசெய்து கிடப்போம் என்ற மெல்லிய உணர்வின் அடிப்படையில்தான் இதனைச் செய்துவருகின்றேன்.

என்னைப் பற்றி சொன்னது இத்தோடு நிற்கட்டும். இனி, நான் சொல்லவந்த ‘2012: மறுமொழிகள் மாயமாய் மறைந்த கதையைச்’ சொல்கிறேன். கதையைப் படித்துவிட்டு, வலைப்பதிவர்கள் யாரேனும் எனக்கு உதவினால் நன்றியுடையவனாக இருப்பேன்.



'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம்1'


'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம்2'


என்று மூன்று பதிவுகளை எழுதியிருந்தேன். அவற்றில், பழந்தமிழரின் தாய்மண்ணாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம் பற்றி எழுதியிருந்தேன்.

புதியவர்கள் பலருடைய கவனத்தை அப்பதிவுகள் ஈர்த்திருந்தன. அதற்குப் பலர் மறுமொழிகள் எழுதியிருந்தனர். குறிப்பாக, வலைப்பதிவு எழுதா நீலகண்டன், வலைப்பதிவர் பாலாஜி ஆகிய இருவரும் தொடர்ச்சியாக எதிராடல் செய்தனர்.

நானும், சற்றும் சலிக்காமல் அவர்களுக்குத் தக்க பதில்களை எழுதியிருந்தேன். இருப்பினும், என்னுடைய பதில்கள் அவர்களுக்கு நிறைவளிப்பதாக இல்லை போலும். மீண்டும் மீண்டும் பல கோணங்களில் கருத்தாடல் புரிந்தனர்.

அன்பர்கள் நீலகண்டன், பாலாஜி இருவரையும் தவிர்த்து மற்றொரு வலைப்பதிவர் மனோகரன் கிருஷ்ணன், எனது எழுத்துக்கு ஆதரவாக மறுமொழிகள் எழுதியிருந்தார். மேலும், எனது பதிவுக்குத் தொடர்பான மேலதிக செய்திகளையும் அரிய தகவல்களையும் கொடுத்திருந்தார்.

இது நடந்து ஒரு வாரம் கழித்து இன்று 25-11-2009 காலையில் மீண்டும் எனது வலைப்பதிவைப் பார்வையிட்டபோது பேரதிர்ச்சி அடைந்தேன்.

மேற்கண்ட மூவரும் எழுதிய ஓரிரு மறுமொழிகள் மாயமாக மறைந்து போயிருந்தன. அவர்களுக்கு நான் எழுதிய பதிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.

அன்பர் நீலகண்டன் குமரிக்கண்டத்தை மறுத்து எழுதிய மறுமொழிகளில் எழுப்பிய அனைத்து ஐயப்பாடுகளுக்கும் ஒன்றுவிடாமல் தக்க பதில் எழுதியிருந்தேன்.

குமரிக்கண்டம் பற்றி நான் எழுதிய செய்திகளை மடைமாற்றும் தோரணையில் அவர் எழுதிய அனைத்தையும் நடுநிலையோடு அணுகி நியாயமான பதிலுரைகளை வழங்கி இருந்தேன்.


அதேபோல், ஆதாம், ஏவால், ஏதென்சு நகரம் என பதில்களில் நான் குறிப்பிட்டிருந்த சில செய்திகளை அன்பர் பாலாஜி மறுத்து எழுதியிருந்தார். அவருக்கும் தக்கபடி பதிலுரைகள் எழுதியிருந்தேன்.

இவர்களுடைய அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் நான் எழுதிய கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையிலும் நண்பர் மனோகரன் கிருஷ்ணன் மிக சிறப்பான தரவுகளோடு மறுமொழிகள் இட்டிருந்தார்.

இவையும் சேர்ந்து மாயமாக மறைந்து போய்விட்டன; பின்கதவு வழியாக எவரோ ஒருவரால் நீக்கப்படுள்ளன. இது எப்படி சாத்தியம்? எப்படி முடியும்? யார் இதனைச் செய்திருப்பார்? இதில் எதற்குமே எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால், ஏன் செய்திருப்பார் என்பதை மட்டும் ஓரளவு ஊக்கிக்க முடிகிறது.

அன்பர் நீலகண்டன் மறுத்து எழுதிய மறுமொழி இருக்கிறது. ஆனால், அதற்கு நான் எழுதிய பதிலைக் காணோம். இன்னும் சிலருடைய மறுமொழிக்கு நான் கொடுத்திருந்த பதில்களைக் காணோம். சில மறுமொழிகளுக்கு நான் சான்றுகளோடு எழுதிய பதில்கள் நீக்கப்பட்டுள்ளன.

‘2012 படம்.. தமிழருக்குச் சொல்லுகிறது ஒரு பாடம்’ - இப்பதிவில் 6 மறுமொழிகளைக் காணோம்.

'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம் 1' - இப்பதிவில் 1 மறுமொழி மாயமாகிவிட்டது.

'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம் 2' - இதில் 2 மற்மொழிகள் நீக்கப்பட்டுள்ளன.

இப்போது, புதிதாக என்னுடைய அந்தப் பதிவையும் அதற்கு வந்த மறுமொழிகளையும் படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? நான் ஏதோ பொய்யான செய்திகளை எழுதியிருப்பதாக நினைக்கும் அளவுக்கு மறுமொழி பெட்டகத்தில் தீய நோக்கத்தோடு ஒரு மாபெரும் கீழறுப்பு வேலையை எவரோ செய்திருக்கிறார்?

இவையெல்லாம் எப்படி நடந்தது என எனக்குத் தெரியவில்லை. அப்படியே, எந்த மறுமொழியையாவது நீக்க வேண்டுமானால், வலைப்பதிவு உரிமையாளர் மட்டும்தானே அதைச் செய்ய முடியும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்றால் எப்படி?

என்னுடைய வலைப்பதிவில் எப்படி உட்புகுந்து இதனைச் செய்திருப்பார்கள்? யார் செய்திருப்பார்கள்? என குழம்பிப் போயிருக்கிறேன்.

இதற்கு, வலைப்பதிவர்களோ அல்லது வாசகர்களோ யாரேனும் இதுபற்றி எனக்குச் சொல்ல முடியுமா?

என்னுடைய விளக்கங்களும் எனது கருத்துக்குச் சார்பான மறுமொழிகளும் காணாமல் போனதே அன்றி, எனது கருத்துகளை மறுத்து எழுதப்பட்ட மறுமொழிகள் சில அப்படியே உள்ளன; சில நீக்கப்படுள்ளன. அவற்றை நான்தான் வெளியிடவில்லை என நினைத்து அன்பர் பாலாஜி ஒரு மறுமொழியும் இட்டுள்ளார்.

இதிலிருந்து ஒன்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. தமிழனையும் தமிழன் வரலாற்றையும் சான்றுபட விவரிக்கும் என்னுடைய பதிவையும் மறுமொழிகளுக்கான பதில்களையும் பொறுக்கமாட்டாமல்.. எரிச்சல் அடைந்து இதனைச் செய்திருக்கிறார்கள் என ஐயப்படுகிறேன்.

தமிழுக்காக, தமிழ் இனம் – சமயம் – வரலாறு – வாழ்வியல் ஆகியவற்றுக்காக நான் அறிந்த – படித்த – கண்ட – கேட்ட செய்திகளையும் தகவல்களையும் எழுதுவது தவறா?

தமிழின் மேன்மையை – தமிழன் சிறப்பை – தமிழன் வரலாற்றின் முதன்மையை ஏன் சிலரால் பொறுத்துகொள்ள முடியவில்லை? யார் இவர்கள்? எங்கே இருக்கிறார்கள் இந்தத் தமிழ்ப் பகைவர்கள்?

கருத்துக்கு கருத்து என மோத முடியாத சிலர் இப்படியான கோளாறுகளைச் செய்து என்னையும் எம்போன்ற உணர்வாளர்களையும் வீழ்த்துவதற்கு வெறிகொண்டு அலைவது ஏன்?

வரலாற்றுக் காலத்திருந்து தமிழன் மேன்மையை – அறிவை – ஆற்றலை தாங்கிக்கொள்ள முடியாமல், சூழ்ச்சியும் – கீழறுப்பும் – இருட்டடிப்பும் – மறைமுகத் தாக்குதலும் செய்வது ஏன்? ஏன்? ஏன்?


இந்தச் சோதனைக்குள்ளும் எனக்கு ஆறுதலாக ஒரு விடயமும் இருக்கிறது. தமிழ்மணத்தின் “ம” திரட்டி தான் அந்த ஆறுதலுக்குரிய விடயம். ஆம்! அதுதான், என்னுடைய அனைத்து மறுமொழிகளையும் சேமித்து எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது. அதற்காக, தமிழ்மணத்திற்கு நனிநன்றிகள் சொல்ல கடமைப்பட்டவனாகிறேன்.

15 comments:

Anonymous said...

ஐயா .இரண்டு மூன்று நாட்களாக எனது மறு மொழியை உங்கள் அகப்பக்கத்திற்க்கு பதிவிடுகின்றேன் என்ன காரணமே எற்றுக் கொள்ள மறுக்கிறது...
மனோகரன்

Anonymous said...

எனது கருத்துக்களை உங்கள் அஞ்சல் வழியும் அனுப்பி இருக்கின்றேன் ஐயா.எனது இந்த இரண்டு அஞ்சலைய்யும் எனது வேறு ஒரு தளத்தில் இருந்து அனுப்பியுளேன. நேரடியாக உங்களின் வலைப் பதிவில் அனுப்பமுடியவில்லை ஐயா.
மனோகரன்

அ. நம்பி said...

வருத்தம் தரும் செய்தி.

தொழில்நுட்பத்தில் வல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன்,

நாம் எழுதும் செய்திகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அல்லது இம்மாதியான செய்திகள் தமிழருக்குத் தெரியவே கூடாது என கருத்தும் சிலர் இப்படிப்பட்ட மறைமுகத் தாக்குதலைச் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

இதற்கு என்ன காரணம் என இன்னும் தெரியவில்லை.

சில பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளேன். பொறுத்திருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நமது தளங்களையும் களங்களையும் தாக்கி அழித்தாலும்.. கொஞ்சமும் உணர்வுகுன்றாமல் விழ.. விழ.. எழுவோம்.

உங்களின் அன்பான ஆதரவுக்கு நன்றி நண்பரே.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ஐயா.அ.நம்பி,

//தொழில்நுட்பத்தில் வல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.//

இன்னும் எவ்வகை உதவியும் கிடைக்கவில்லை.

தமிழுக்கு எதிராக எப்படியெல்லாம் சதி செய்கிறார்கள் என பார்க்கும்போது வருத்தம் வரவில்லை.. மேலும் வீறுதான் வருகிறது.

உங்கள் அன்புக்கு நன்றி ஐயா.

மனோவியம் said...

ஐயா .இரண்டு மூன்று நாட்களாக எனது மறு மொழியை உங்கள் அகப்பக்கத்திற்க்கு பதிவிடுகின்றேன் என்ன காரணமே எற்றுக் கொள்ள மறுக்கிறது...
மனோகரன்

மனோவியம் said...

http://www.winmani.com/

balaji said...

வரலாற்றுக் காலத்திருந்து தமிழன் மேன்மையை – அறிவை – ஆற்றலை தாங்கிக்கொள்ள முடியாமல், சூழ்ச்சியும் – கீழறுப்பும் – இருட்டடிப்பும் – மறைமுகத் தாக்குதலும் செய்வது ஏன்? ஏன்? ஏன்? ////

அவர்களால் தாங்க முடியாது நன்பரே, தவறுக்கு மன்னிக்கவும்.

நான் கூறவருவது ஒன்றுதான், இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் இந்திய வரலாற்று, ராணுவ, பொருளாதார இணையதளங்களை உட்புகுந்து அவற்றின் தகவல்களை திருடுவதுடன் அவற்றின் தக‌வல்களை அனுமதியின்றி தவறான கருத்துக்கள் இணைக்கப்படுகிறது. இதற்கெனெ ஒரு கணிப்பொறி (ஜிகாதி) வல்லுனர் அமைப்பினரே உள்ளனர்.

மேலும் கவனிக்க என்னுடைய எதிர்வாதம் அன்னிய கைக்கூலிகளின் உண்மைத்தன்மையை, திரைமறை செயலை காட்டமுடன் சாடியிருந்தேன். சரியாக என்னுடைய பின்னூட்டம் களவாடப்பட்டிருக்கிறது என்றால் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையை உலகறிய நாம் முயற்ச்சித்தால் டாலர்களின் ஆதிகமும், ஏவாஞ்சலிகளின் இணைய உலகிலும் அவர்களின் களவாணித்தனத்தையும் வரலாற்றைதிரித்து தமிழ‌னையும் தமிழை அழிப்பதில் அவர்களுக்கு உள்ள ஆர்வமும் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போதேனும் திரு சுப நற்குணன் அவர்கள் அன்னிய அடிவருடிகளின் குணத்தை புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தவறான குற்றச்சாட்டுக்கு மன்னிக்கவும். மேலும் தொடரட்டும் தமிழ்ப்பணி
அன்புடன் பாலாஜி

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

//இரண்டு மூன்று நாட்களாக எனது மறு மொழியை உங்கள் அகப்பக்கத்திற்கு பதிவிடுகின்றேன் என்ன காரணமே எற்றுக் கொள்ள மறுக்கிறது...//

என்ன சிக்கலோ தெரியவில்லை. அழிவியின் (Virus) அட்டகாசமா? இழிந்தவர்களின் சதிநாசமா?

யாதொன்றும் அறியேன் பராபரமே..!

இந்த விளையாட்டும் நல்லதுதான். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம். பாருங்களேன்..!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

மீண்டும் உங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி.

//இணையதளங்களை உட்புகுந்து அவற்றின் தகவல்களை திருடுவதுடன் அவற்றின் தக‌வல்களை அனுமதியின்றி தவறான கருத்துக்கள் இணைக்கப்படுகிறது. இதற்கெனெ ஒரு கணிப்பொறி (ஜிகாதி) வல்லுனர் அமைப்பினரே உள்ளனர்.//

இந்த அளவுக்கு இருக்குமானால், நமது கருத்தாடல்கள் மிகச் செறிவானவை.. உண்மையானவை.. உலக வரலாற்றைப் புரட்டக்கூடியவை என்றுதானே பொருள்..!

பெருமையாக இருக்கிறதே..!!

//உண்மையை உலகறிய நாம் முயற்ச்சித்தால் டாலர்களின் ஆதிகமும், ஏவாஞ்சலிகளின் இணைய உலகிலும் அவர்களின் களவாணித்தனத்தையும் வரலாற்றைதிரித்து தமிழ‌னையும் தமிழை அழிப்பதில் அவர்களுக்கு உள்ள ஆர்வமும் புரிந்து கொள்ள முடிகிறது. //

உண்மை அன்பரே..!

//திரு சுப நற்குணன் அவர்கள் அன்னிய அடிவருடிகளின் குணத்தை புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.//

எட்டப்பன் தொடங்கி இன்றைய கருணா வரை இதற்காக ஒரு கூட்டம் இருக்கிறது என்பது தெரியாமல் இல்லை. ஆனால், போயும் போயும் எனக்கு 'ஆப்பு' அடிப்பார்கள் என்பதைத்தான் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.


//தவறான குற்றச்சாட்டுக்கு மன்னிக்கவும். மேலும் தொடரட்டும் தமிழ்ப்பணி//

பாம்பறியும் பாம்பின் கால்.. ஒரு தமிழ் உள்ளத்தை உணர்ந்துகொள்ள இன்னொரு தமிழ் உள்ளத்திற்கு நீண்ட காலம் தேவையில்லை அன்பரே.

மன்னிப்புக்கோரும் அளவுக்கு இங்கு எதுவுமே இல்லை. உங்கள் நேரிய உள்ளம்.. வெளிப்படையான எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சி.

தொடர்ந்து வருக ஐயா.

sutha said...

aiya, mikavum varutamaakavum kavalaiyaakavum irukkiratu. eddapparkal ellaa kaalattilum irukkiraarkal. vetaniyaana vidayam itu.

123IndianOnline said...

I have the same problem in Blogger 2 years ago, and opted for own domain and hosting and convert all my blogs to Wordpress. This is normal in Blogspot. Kindly host your own so you will have 100% control. Hope its helps.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் சுதா,

தங்களின் வருகைக்கும் ஆறுதலான மறுமொழிக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>123IndianOnline,

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. அதனைக் கருத்தில் கொள்கிறேன்.

ந.தமிழ்வாணன் said...

போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்.. தொடர்ந்து சொல்லுங்கள்..

Blog Widget by LinkWithin