//8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.// என ஒரு சான்று இருந்தது. இதனை விரிவாக இந்த இடுகையில் காண்போமா?
‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா?
உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா?
சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம்.
தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // கோண்டி:- ஆப்போ // துளு:- அப்பெ(தாய்) //
மராத்தி:- பாப் // குசராத்தி:- பாப் // இந்தி:- பாப் // வங்கம்:- பாப், பாபா //
மெச்சு:- அப்ப // போர்த்துக்கீசியம்:- அப // சிங்களம்:- அப்பா
எகிப்து:- ஆப் // அரபி:- ஆப் // கலதேயம்(Chaldean):- அப்பா // சீரியம்(Syriac):- ஆபோ // அரமிக்கு(Aramic):- அப்பா // அபிசினியம்:- ஆப்பாத்
இலத்தின்:- பப்பா // பிராகுவீ:- பப்பா // ஆங்கிலம்:- பப்பா
ஓசித்தியம்(Ostiak):- ஊப், ஓப் // பின்னியம்(Finnish):- அப்பி // அங்கேரியம்:- இப், இப்ப, அப்பொஸ்
அப்பாவுக்கு தமப்பன், தகப்பன், அத்தன் என்றும் தமிழில் சொற்கள் உள்ளன. இவை எவ்வாறு பிற மொழிகளில் திரிந்துள்ளன என இனி காண்போம்.
தமிழ்:- தம்+அப்பன்= தமப்பன்= தகப்பன்.
தமிழ்:- அத்தன். // பிராகிருதம்:- அத்தா
துருக்கி:- அத்த // அங்கேரியம்:- அத்ய // பின்னியம்(Finnish):- ஆத்த // செர்மியம்(Chermiss):- ஆத்யா // மார்தூவின்:- அத்தை // ஓசித்தியம்(Ostiak):- அத்த // இலாப்பியம்(Lappish):- அத்ஜெ(பாட்டன்)
கோதியம்(Gothic):- அத்தன் // இலத்தின்:- அத்த // கிரேக்கம்:- அத்த
அத்தன் என்பதைப் போலவே அச்சன் என்பதும் தமிழ் சொல்தான். இந்த ‘அச்சன்’ இன்று மலையாளத்தில் அப்படியே இருக்கிறது. அச்சன் என்ற சொல் மற்ற தென்னிந்திய மொழிகளில் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.
தமிழ்:- அத்தன்= அச்சன் // மலையாளம்:- அச்சன்
கன்னடம்:- அஜ்ஜ(பாட்டன்) // துளு:- அஜ்ஜெ(பாட்டன்) // குடகு- அஜ்ஜெ(பாட்டன்) // குருக்கு:- அஜ்ஜொஸ்(பாட்டன்) // பிராகிருதம்:- அஜ்ஜ // மராத்தி:- ஆஜா(பாட்டன்) // இந்தி:- ஆஜா(பாட்டன்)
இலாப்பியம்(Lappish):- ஐஜ. அத்ஜ(பாட்டன்)
அப்பாவை ஐயன் என அழைக்கும் பழக்கமும் தமிழருடையதே. ஐயன் என்பது அப்பாவை மட்டுமல்லாது தமையன், பெரியோன், ஆசிரியன், குரு, முனிவன் என பல பொருளையும் குறிக்கிறது.
தமிழ்:- ஐயன் // மலையாளம்:- அய்யன் // கன்னடம்:- அய்ய // தெலுங்கு:- அய்ய, அய // துளு:- அய்யெ(ஆசிரியன்) // குடகு:- அய்யெ(தந்தையுடன் பிறந்தான்) // துடவம்:- இன், எயி // கோலாமி:- அய்யா(பாட்டன்), பஅய்ய
போர்த்துக்கீசியம்:- ஐயோ(ஆசிரியன்)
தமிழ்:- தந்தை // கன்னடம்:- தந்தெ // தெலுங்கு:- தண்ட்ரி
இப்படியாக, அப்பாவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றிலும் அப்படியே இருக்கிறது அல்லது ஓரளவு மாற்றமடைந்து காணப்படுகிறது. இதிலிருந்து தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வழங்கி தாய்மைத் தன்மையைப் பெற்று - உலக மொழிகளுக்குத் தாயாக - தாய்மொழியாக இருப்பது தெள்ளென தெரிகிறது.
தமிழே ஞாலத்தின் முதற்றாய்மொழி என்பதை நமது இன்னுயிர் தமிழ்மொழி இன்றும் இனிவரும் காலத்திற்கும் தானே நிறுவிக்கொள்ளும் என்பதை இனி சொல்லவும் வேண்டுமா?
- மூலம்:- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு
7 comments:
சிங்களத்தில் அப்பா என்பதற்கு தாத்தா என்பது தான் சொல்.
அதைத் தவிர உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே....
ஆங்கிலத்தில் தந்தையை 'பொப்' என்று அழைப்பார்கள்....
அதற்கும் இதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ?
>திருத்தமிழ் அன்பர் கனககோபி,
மீண்டும் தங்கள் வருகை வரவேற்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
மீண்டும் வருக நண்பரே.
தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் மூலம் பிராமி லிபி என மொழியியல் நிபுணர்கள் கூறுகிறார்களே?
>திருத்தமிழ் அன்பர் அறிவழகன்,
திருத்தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
//தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் மூலம் பிராமி லிபி என மொழியியல் நிபுணர்கள் கூறுகிறார்களே?//
பிராமி பழைய எழுத்துமுறைதான். அசோகர் கால (3ஆம் நூற்றாண்டு) கல்வெட்டுகளில் பிராமி எழுத்து காணப்படுகிறது.
பிராகிருத மொழி பிராமி எழுத்துகளை பயன்படுத்தியிருக்கிறது. பின்னர், சமற்கிருத்திலும் உண்டு.
தமிழகம், இலங்கை ஆகிய இடங்களில் பிராமி எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சிந்துவெளியில் தோன்றிய எழுத்தாக இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
சிந்துவெளி வரலாறு பண்டைத் தமிழகமாகிய குமரி நாகரிகத்திற்குப் மிகவும் பிற்பட்டது என்பதால், தமிழ் எழுத்துகளின் உருமாற்றங்கள் எனவும் சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்த 'பிராமி' என்பதே தமிழ் மூலத்திலிருந்து வந்த சொல்தான்.
பரமம் என்ற தமிழின் திரிபுதான் வடவர் பயன்படுத்தும் பிரம்மம் என்ற சொல். தலைமையானது, முதன்மையானது, பெரியது என்ற பொருளிள் இச்சொல் ஆளப்படுகிறது.
பிரம்மம் - பிராம்மி ஆகி பின்னர் பிராமி எனச் சுருங்கி இருக்கிறது. இதுவே பிறகு மேற்குலகம் சென்று Prime, Primal, Primary, Primer, Primitive, Principal,Priority, Previous, President, Prifix என பல சொற்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
Presiden என்ற சொல்லின் வேர்மூலம் தமிழின் பரமம் -> பரம் -> பரு -> பர்+உ = பரு -> பர் -> பல் -> புல் என்று வேர்ச்சொல் ஆய்வின்வழி விளக்கிக் காட்ட முடியும்.
உலகமொழிச் சொற்கள் பலவற்றுக்கு இப்படி வேர்மூலம் தமிழில் இருக்கிறது என்பதைச் சொல்லாய்வு உலகம் கண்டு வியக்கிறது.
பி.கு: இப்படி சொன்னால் மொட்டத் தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சு போடுகிறோம்.. கற்பனையாகக் கதைக்கிறோம்.. என்று நம்ம ஆட்களே வரிந்துக்கட்டிக்கொண்டு வம்புக்கு வருவார்கள்.
தொடர்ந்து வாருங்கள் நண்பரே. நன்றி.
அருமையான பதிவு ஐயா...
நேர்மையான பதிவு என்பதும் மிகை ஆகாது.
எவன் எதை உளறினாலும் ஏற்றுக் கொள்ளும் நம்மவன்.. தமிழ் பற்றி தமிழன் சொன்னால் மட்டும் தலைகால் தெரியாமல் எகிறுவதேன்?
உலகளாவிய பார்வை கொண்டு சிந்தித்தால் உங்கள் பார்வை சரியெனப்படுகிறது.
வாழ்த்துக்கள். உங்கள் தமிழ்ப்பணி சிறக்கட்டும்.
அற்புதம் ஐயா, நம் மொழியின் பெருமையை அறிவியல்பூர்வமாக நிருபிப்பது நம் கடமை என்று அனைவரும் எண்ண்வேண்டும்...
Post a Comment