ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள வன்கொடுமை அரசாங்கம் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையையும் மனிதப் பேரழிவையும் கண்டித்து, பிரிட்டனைச் சேர்ந்த ரிம் மாற்றின் என்பவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஈழத்தில் தன் சொந்த இனம் - தொப்புள்கொடி உறவு - இரத்ததின் இரத்தமாகிய தமிழ் மக்கள் மிகவும் கொடூரமாகக் கொன்று ஒழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் - தட்டிக் கேட்காமல் - கண்டனம் தெரிவிக்காமல் - எதுவுமே நடவாததுபோல அலட்டிக்கொள்ளாமல் உணர்வுகெட்ட தமிழர்கள் சிலர் புலன்களைப் பொத்திகொண்டு இருக்கின்றனர்.
ஆனால், எந்தவித தொடர்புமே இல்லாத ரிம் மாற்றின் மனித நேயத்தின் அடிப்படையில் தமிழர்கள் நலனை முன்வைத்து உண்ணாநிலைப் பேராட்டத்தில் இறங்கியுள்ள செய்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈழத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பரிதாபமான மனித அவலங்களைத் தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 13 ஆவது நாளாக இன்று காரிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பிரித்தானிய குடிமகனான ரிம் மாற்றின் தனது போராட்டம் தொடர்பாக தெரிவிக்கையில், “எனது போராட்டத்திற்கு அனைத்துலக சமூகம் குறிப்பாக அமெரிக்கா அரச தலைவர் பராக் ஓபாமா பதில் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை இந்த போராட்டத்தை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்வேன்” என்றார்.
தொண்டு நிறுவனப் பணியாளரான இவர் சிறிலங்காவிற்குச் சென்று அங்கு தொண்டு பணிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் தமிழ் மக்களுடனான தொடர்புகளை நெருக்கமாக ஏற்படுத்திக் கொண்டவர்.
தற்போது அங்கு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவலங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு நிகழ்வில் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த போராட்டம் நடைபெறும் பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் ரிம் மாற்றினின் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
ரிம் மாற்றின் தம்முடைய இணையத்தளத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அந்த முறைபாடு மனுவில் கையொப்பம் இடவேண்டும் என அந்த மனித நேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர்களுக்காகப் போராடும் ரிம் மாற்றின் உணர்வைபோல் ஆயிரம் மடங்கு உலகத் தமிழர்கள் பெறவேண்டும். அப்போதுதான் தமிழருக்கு முழு உரிமையும் விடுதலையும் கிடைக்கும்.
ரிம் மாற்றின் போராட்டத்திற்குத் துணைநின்று அவருடைய மனிதநேய முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புத்தமிழ் உறவுகளை அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.
ரிம் மாற்றின் முறைப்பாட்டு மனுவில் கையொப்பமிட
3 comments:
தங்களின் ஈழத் தமிழர்பால் உள்ள ஈடுபாட்டுக்கும் - மனிதாபிமானத்திற்கும் எமது பூரண பங்களிப்பு என்றைக்கும் உண்டு. நன்றி.
வணக்கம்
என்னால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லையே எனும் மன உருத்தலுடன் கையெப்பம் இட்டுள்ளேன்
இராஜராஜன்
Pl. Check the spelling of the website . There is an extra h .
Thank you and Thanks to Martin
Post a Comment