தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.
தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும் போது, தமிழர்கள் அனைவரும் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். தற்காலத்திலும், குடித்து விட்டு சாலையில் வருகையில் காவலர்கள் மறித்து ஊதிக் காட்டச் சொன்னால் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். இதில் இருந்து F ஒலி தமிழர்களுக்கு அறிமுகமானதே என்று அறியலாம்.
- நன்றி:- ரவி
5 comments:
nalla jokes!! -m.vasu
இந்தக் கட்டுரையை படித்தபோது ஒரே குழப்பமாக இருந்தது. F எப்படி தமிழ் எழுத்தாக இருக்க முடியும் என குழம்பி போனேன். ஆனால் பிறகுதான் இது நகைச்சுவையாக எழுதப்பட்டது என்று. ரவி என்ற அகப்பக்கத்திற்கு போய் படித்த போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. ஒரு பொய்யான தகவலை எப்படி நாசுக்காக உண்மைபோல் மாற்றி எழுதலாம் என்பதற்கு இந்தக் கட்டுறை நல்ல உதாரணம். ரவி அகப்பக்கத்தில் நிறைய பேர் மறுமொழி எழுதி இருப்பதைப் படித்தேன். மிக சுவாரசியமாக இருந்தது.
-இலங்கேஷ்வரன், சுங்கை பட்டாணி, கெடா
இலங்கேஷ்வரன்,
இந்த இடுகையில் 'F' ஐத் தமிழ் எழுத்து என நிறுவுவதற்கு ஆதாரமற்ற செய்திகளை எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளதோ, அதுபோலவே தமிழ்ப் பகைவர் சிலர் தமிழுக்கு ஒவ்வாத கருத்துகளை நிறுவுவதற்கும் பயன்படுத்துகின்றனர். உண்மையில் பார்க்கப்போனால், அவர்கள் கூறும் கருத்துகளும் முன்வைக்கும் வாதங்களும் சிறுபிள்ளைத் தனமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கிரந்த எழுத்துகளைத் தமிழில் பயன்படுத்துவதற்குச் சிலர் கூறும் ஆலோசனைகளைப் பாருங்களேன். சிரிப்புதான் வரும்.
ரவி வலைப்பதிவில் பல நல்ல இடுகைகள் உள்ளன. அதனையும் தொடர்ந்து படிக்கவும்.
வணக்கம் தோழர் நற்குணன்.
தங்களின் "உலகத் தமிழ் இணையம்" என்கிற தலைப்பின் கீழ் வருகிற "தமிழ் சான்றோர்" எனும் தொடுப்பில் பிழையுள்ளது. அதன் முகவரியில் திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.
தங்கள் வருகைக்கும் அன்பான சுட்டலுக்கும் நன்றி திருத்தமிழ் அன்பர் தமிழ்த்தோட்டம் வெ.யுவராஜ் அவர்களே.
Post a Comment