ஓர் இனம் அழியாமல் இருக்க அந்த இனத்தின்
மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல
நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு
இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும். காலத்தால் தொன்மையும்
தெய்வத்தன்மையும் பெற்று இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத
நிலையிலும் தமிழும் தமிழினமும் இன்றும் நிலைத்திருக்கின்றன.
தமிழின் தனித்தன்மைக்கும் அதனுடைய தொன்மைக்கும் மட்டுமல்லாது தமிழ்மொழியின் தெய்வத்தன்மைக்கும் இந்தப் படக்காட்சி
ஒரு நற்சான்று.
ஒரு நற்சான்று.
தமிழில் பார்க்க - படிக்க.
ஆங்கிலத்தில் பார்க்க - படிக்க.
கற்காலம் தொடங்கி இன்றைய கணினி, இணைய, கைபேசி, கையடக்கக் கருவிக் காலம் வரையில் உலகில் தமிழ்மொழி அடைந்துள்ள
வெற்றிகளை வைத்துப் பார்க்குமிடத்து, உலகம் ஒருநாள் தமிழை நிச்சயமாகத்
திரும்பிப்பார்க்கும் என நம்பலாம். தமிழ்மொழியில் புதைந்துள்ள
எண்ணிலடங்காச் சிறப்புகளும் உண்மைகளும் மெய்ம்மங்களும் வெளிப்பட்டுத்
தோன்றும் காலம் விரைவிலேயே மலரும் என்ற நம்பிக்கை நம்மிடையே பிறக்கிறது. உலக
வரலாற்றின் ஒரு சிறுமுனையளவு பகுதி ஆனால், முகாமையான பகுதியைத் தம்முள்
கொண்டுள்ள தமிழ்மொழியானது வெல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற
தன்னம்பிக்கை துளிர்க்கிறது.
@சுப.நற்குணன், திருத்தமிழ்
No comments:
Post a Comment