பேரா, தஞ்சோங் மாலிம் சுல்தான்
இட்ரிசு கல்வியியல் பல்கலைகழக மொழி தொடர்புத்துறை புலம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர்
கழக ஆதரவோடு மலேசிய நாட்டில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ நடத்தவுள்ளது.
இம்மாநாடு எதிர்வரும் 2012,
மே திங்கள் 30 - 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஈப்போ மாநகரில் உள்ள இல் சிட்டி தங்கும்
விடுதியில் (Hillcity Hotel) நடைபெறும்.
மாநாட்டு நோக்கம்:-
தமிழ்க் கல்வியாளர்களும்
ஆய்வாளர்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்கும் ஒரு தளமாக இந்த மாநாடு அமையவுள்ளது.
தமிழ் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தங்கள் புலமைத் திறம், பட்டறிவு, கற்றல் கற்பித்தல்
திறன் முதலானவை தொடர்பில் கலந்துரையாடி தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு,
புதிய இலக்குகளை நோக்கி இணைந்து செயல்பட ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த மாநாடு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் படைக்கப்படும்
ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ‘தமிழ்க் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ எனும் கருப்பொருளில்
அமைந்திருக்கும். மொத்தம் 32 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. வெளிநாட்டு ஆய்வாளர்களோடு
உள்நாட்டுக் கல்வியாளர்களும் அருமைவாய்ந்த கட்டுரைகளைப் படைப்பார்கள்.
தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும்
மேம்பாட்டிற்கும் பங்காற்றும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியத்
தமிழ்க் கவியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும்
அழைக்கப்படுகிறார்கள்.
மாநாட்டுக் கட்டணம் :-
உள்நாட்டுப் பேராளர்கள்:-
RM200.00 (தங்கும் வசதி உண்டு) / RM150.00 (தங்கும் வசதி இல்லை )
வெளிநாட்டுப் பேராளர்கள்:-
USD100.00
மாநாட்டுக் கட்டணத்தை உப்சி
பல்கலைகழகப் பொருளகக் கணக்கில் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் விவரம் பின்வருமாறு:-
Bank Islam - Account
Number:- 08068010003264
பொருளகத்தில் பணத்தைச் சேர்த்தவுடன்
அதன் சான்றுச் சீட்டை (Bank Slip) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
TERC 2012 Secritariat,
Faculty Of Languages and Communication,
Sultan Idris Education
University, 35900 Tanjung Malim, Perak, Malaysia.
(Attn: Dr.S.Samikkanu
Jabamoney) Fax:-6054583603
பேராளர்களுக்கு மாநாட்டுப்
பை, மாநாட்டு மலர், தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தும் செய்து தரப்படும்.
மாநாடு தொடர்பான மேல்விவரங்களுக்கும்
தொடர்புக்கும்:
முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி
(கைபேசி:- 6012-5275943) மின்னஞ்சல்:- samjabarose@yahoo.com.my
தமிழ்க்கல்வியையும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலையும் முன்னிருத்தி மலேசியாவில் முதன்முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசியக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு செய்ய வேண்டும். அறிவு சார்ந்த மாநாடுகளும் கல்வியியல் தொடர்பான மாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கு இந்த மாநாடு ஒரு படிக்கல்லாக அமையட்டும். மலேசியத் தமிழ்க் கல்வியாளர் சமூகத்தில் ஆய்வுப் பண்பாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் உருவாகி வளர்ச்சிபெற இந்த மாநாடு ஒரு தொடக்கமாக - தோற்றுவாயாக இருக்கட்டும்.
வாருங்கள் நண்பர்களே, ஆசிரியர்களே, மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களே.. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பாக அனைவரும் ஒன்றுகூடி அறிவு சார்ந்த நிலையில் பேசுவோம்; ஆய்வு சார்ந்த நிலையில் சிந்திப்போம்; ஆராய்ச்சி நோக்கோடு முன்னேறுவோம். சமூகம் மாற முதலில் நாம் மாறுவோம். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி நம்மிடமிருந்து தொடங்கட்டும்.
வாருங்கள் நண்பர்களே, ஆசிரியர்களே, மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களே.. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பாக அனைவரும் ஒன்றுகூடி அறிவு சார்ந்த நிலையில் பேசுவோம்; ஆய்வு சார்ந்த நிலையில் சிந்திப்போம்; ஆராய்ச்சி நோக்கோடு முன்னேறுவோம். சமூகம் மாற முதலில் நாம் மாறுவோம். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி நம்மிடமிருந்து தொடங்கட்டும்.
@சுப.நற்குணன், திருத்தமிழ்
No comments:
Post a Comment