Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்! தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து!



திருத்தமிழ் வலைப்பதிவு வாசகர்களாகிய திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்



இனிய பொங்கல் திருநாள்;
தமிழ்ப் புத்தாண்டு 2041 நல்வாழ்த்து.


தமிழ் தமிழாக;
தமிழர் தமிழராக;
தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில்
உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.


அன்புடன்:- சுப.நற்குணன்



பொங்கல் சிறப்புக் கட்டுரை படிக்க இங்கு சொடுக்கவும்

18 comments:

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Sathis Kumar said...

பொங்கும் மணமோடு புது மணம் வீசட்டும்........!!! தங்கும் எழில் கொஞ்சி தரணியெல்லாம் சிறக்கட்டும்...!!! உங்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மனோவியம் said...

இனிய பொங்கல்
மணந்த திருநாள்
இனபம் எங்கும்
மலர்ந்த திருநாள்
தமிழர் உள்ளம்
தரணியெங்கும்
தழைக்கும் பெருநாள்
திருத்தமிழ் வளரட்டும்
நற்குணம் ஒங்கட்டும்

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும்
வாழ்க வளமுடன்.

தமிழ் said...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர்கள்..

>துபாய் ராஜா
>ஒற்றன்
>மனோகரன் கிருட்ணன்
>திகழ்
>சந்ரு

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்து உரித்தாகட்டும்.

Anonymous said...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இனிய சித்திரையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லுவோம்

தமிழனாயிருப்போம், தன்மானமுடையவர்களாக, உறுதியுடனும் விவேகத்துடனும் யாருக்கும் அடிபணியாமல் சித்திரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவோம்.

அன்புடன்
பாலாஜி

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//தமிழனாயிருப்போம், தன்மானமுடையவர்களாக, உறுதியுடனும் விவேகத்துடனும் யாருக்கும் அடிபணியாமல் சித்திரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவோம்.//

திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றும் தையில் புத்தாண்டைக் கொண்டாடாமல்..

(வட இந்திய) சாலிவாகன ஆண்டைப் பின்பற்றும் சித்திரையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு..

பிறகு எப்படி

தமிழனாயிருப்பது?

தன்மானமுடையவனாக இருப்பது?

சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது அன்னியனுக்கு அடிபணிவது ஆகிவிடாதா?

சித்திரையில் புத்தாண்டு கொண்டாடிய மிகப் பழைய மரபு தமிழரிடையே இருந்துள்ளது.

ஆவணியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய காலமும் இருந்துள்ளது.

ஆயினும், அறிஞர் குழாம் கூடி 1921இல் எடுத்த தைப் புத்தாண்டு முடிவில் உறுதியாக இருப்பது ஒன்றே..

தமிழனாய் இருப்பதற்கும்
தன்மானம் இருப்பவனாய் வாழ்வதற்கும்
யாருக்கும் அடிபணியாமல் வாழ்வதற்கும்

நல்ல எடுத்துக்காட்டு!!

Anonymous said...

அய்யா தயவு செய்து திராவிடம் எனும் மாயையிலிருந்து வெளியே வாருங்கள். திராவிட ஆரிய மாயையினை தோற்றுவித்தவர்களே அதை இல்லை என்று ஒத்துக்கொண்டபின் நீங்கள் மட்டும் ஏன் இன்னும் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து வரலாற்றை திரிதுக்கொண்டிருக்கிறீர்கள். தமிழ்தான் முதல் மொழி. அதன் பின் வந்ததுதான் சங்கத மொழி. அப்படியிருக்க அது தமிழின் மூலக்கூறுகளை வைத்துதான் வேதத்தையும் வேதமந்திரங்களையும் உருவாக்கியது. எல்லாமே தமிழ்தான். திருவள்ளுவராண்டு 2014 என்றால் திருவள்ளுவர் பிறந்து வெறும் 2014 ஆண்டுகள்தான் ஆகின்றதா? அதற்கு முன்னால் தமிழே உலகில் இல்லையா? தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் எங்கேபோனார். தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் முன்னால் பேசப்பட்ட தமிழ் மொழி எப்போது தோன்றியது. எங்கே போனது ஆண்டு கணக்கிடும் போது. ஏன் ஜனவரியை ஒட்டி அதற்க்கு பின்னால் வரும் ரெண்டும் கெட்டான் மாதமாகிய தை மாதத்தில் வருடம் பிறக்க வேண்டும். தமிழ் பண்பாட்டில் ஆண்டு ஆறுபருவங்களாக பிரிக்கப்பட்டு இளவேனில் ஆண்டின் தொடக்கமாக உள்ளது. அதிக இரவு நேரத்தை கொண்ட மாதங்களாக மார்களி, தை உள்ளது. இது எந்த அறிவியல் படி வருட தொடக்கமாக அமையும். அய்யா சித்திரையில் தொடங்கி மார்களியில் முடித்து ஆயாசமாக கடைசியில் ஆதவனுக்கு நன்றி சொல்லி உழைத்து கிடத்ததின் பலனை பங்கிட்டு மகிழ்ந்திருக்கும் நாள் தை பொங்கல். பொங்கலை பொங்கலாக கொண்டாடுவோம் கோடிக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கையில் அரசியலை புகுத்தவேண்டாம். அன்னியாடிவருடியாகிய லட்சக்கணக்கான தமிழர்களை தன் சுய லாபத்துக்காக பலி கொடுத்த தமிழ் துரோகிகளின் புரட்டு வார்த்தைக்களில் மதிமயங்கிவிட வெண்டாம். மேற்க்கத்தவனுக்கும் மதம் பரப்பிகளுக்கும் வால்பிடிக்க வேண்டாம்........அன்புடன் பாலாஜி

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//அய்யா தயவு செய்து திராவிடம் எனும் மாயையிலிருந்து வெளியே வாருங்கள்.//

திராவிடம் - இந்தியம் - ஆரியம் ஆகிய மூன்று மாயைகளையும் கழித்தால்தான் தமிழ் - தமிழன் - தமிழியம் அனைத்தும் தெளிவுபட விளங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இற்றை அரசியலாளர்கள் அறிவித்ததனால் மட்டுமே நாம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனை அறிவிப்பதற்கான தகுதியும் தராதரமும் அவர்களுக்கு இருப்பதாகவும் நாம் நினைக்கவில்லை.

ஆனால், தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன.

மறைமலை அடிகள் தலைமையில் சைவம், வைணவம், சமணம், புத்தம், முகமதியம், கிறித்துவம் ஆகிய மதங்களைக் கடந்து 500க்கு மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் கூடி அறிவித்ததை நாம் வழிமொழிவதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை.

சித்திரையும் புத்தாண்டு கண்ட மரபு தமிழருடையது என்பதை நாம் மறுக்கவில்லை.

ஆனால், இன்று சித்திரையில் அளவுக்கு அதிகமான ஆரிய கலப்புகளும் திரிபுகளும் நிகழ்ந்துவிட்டன.

சித்திரையைத் தொட்டால் அதனோடு சேர்த்திருக்கும் ஆரிய அழுக்குகளும் நம்மைத் தொற்றிகொள்ளும்.

ஆகவேதான், பண்டைதமிழர் தையில் புத்தாண்டு கொண்டாடியதை நாம் வழிமொழிய விரும்புகிறோம்.

//திருவள்ளுவராண்டு 2041 என்றால் திருவள்ளுவர் பிறந்து வெறும் 2041 ஆண்டுகள்தான் ஆகின்றதா? அதற்கு முன்னால் தமிழே உலகில் இல்லையா? //

தமிழுக்கு வயது 50,000 ஆண்டுகளையும் எட்டி நிற்கும் என்று பாவாணர் குறிப்பிடுகின்றார். அவ்வளவு இல்லாவிட்டாலும் கண்டிப்பாகப் பத்தாயிரம் ஆண்டுகளுக்குக் குறையாமல் தமிழ் உலகில் இருக்கிறது.

அதில் நமக்கு மாறுபாடு கிடையாது.

தமிழருக்குத் தொடராண்டு இல்லாத சூழலில், திருவள்ளுவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவதற்கு அறிஞர் குழாம் கண்ட முடிவில் நமக்கும் முழு உடன்பாடு. அவ்வளவுதான்.

Anonymous said...

///சித்திரையைத் தொட்டால் அதனோடு சேர்த்திருக்கும் ஆரிய அழுக்குகளும் நம்மைத் தொற்றிகொள்ளும்.///

எவை ஆரிய அழுக்குகள் என்பதை சற்று விளக்க முடியுமா?

தயவு செய்து கீழ்க்காணும் தொட‌ர் சுட்டியை தொட‌ர்ந்து ப‌டியுங்க‌ள்.
http://www.sishri.org/puthandu.html

அத‌ன் ஒரு பாக‌ம்....
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த', இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா ""தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், ""நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் ""தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர'மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: ""சித்திரையில்தான் புத்தாண்டு''.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)

நன்றி: தினமணிi 24-1-2008 பக்கம் 8

அன்புடன் பாலாஜி....
மீண்டும் அடிமையாகிவிடாமலிருக்க‌

Anonymous said...

தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள். இவருடைய தனித்தமிழ் இயக்கத்தை நம்பி பொதுவுடைமையாளர் ஜீவா ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால் மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா.

வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா; யோசித்தபடியே உள்ளே சென்றார்; மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

‘என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவுக்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச்சொல்லா?’ என்று கேட்டுவிட்டார். ‘காரணம் என்பது எம்மொழிச்சொல் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார்.

மறைமலை அடிகளின் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜீவா ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறிவிட்டார்.

ஆனால் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஞானோதயம் இன்னும் சிலருக்கு ஏற்படவில்லை. தமிழன் எக்காலத்திலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கிறது. சமஸ்க்ருதத்திற்கு எதிராக இவர்கள் எழுதும் எழுத்திலும் பேச்சிலும் சூடு அதிகமாகவும் சுவை குறைவாகவும் இருக்கிறது. தாயையும் சேயையும் பிரிப்ப‌தில் யாராலும் வெற்றிகாண‌ முடியாது.

திங்க் பண்ணிச் சொல்லுங்க, நான் வெயிட் பண்றேன்’ அயம், அயம், i am sorry.

நவத்துவாரங்கள் வழியாகவும் ஆங்கிலம் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. தமிழைக் காக்க விரும்புவோர் முதலில் காயசுத்தி செய்துகொள்ளுங்கள்.

Tamilvanan said...

//சித்திரையைத் தொட்டால் அதனோடு சேர்த்திருக்கும் ஆரிய அழுக்குகளும் நம்மைத் தொற்றிகொள்ளும்.//

நூற்றுக்கு நூறு உண்மை. சித்திரையை இந்து ம‌த‌ புத்தாண்டு என்று கொண்டாடிக் கொள்ள‌ட்டும். ஆட்சேப‌னையே இல்லை. த‌மிழ‌ர் இன‌ம் ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்த‌து.

விக்கிபீடியாவில் ஒரு ப‌குதி கீழே குறிபிட‌ப் ப‌ட்டுள்ள‌து.

//ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். அது மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.//

தமிழ் மாதங்கள் - தமிழ் விக்கிபீடியா ...
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு ...
ta.wikipedia.org/wiki/தமிழ்_மாதங்கள்

விக்கிபீடியாவில் இன்னும் சித்திரை மாத‌மே த‌மிழ் புத்தாண்டு என்று கூறுவ‌தை ப‌ற்றி..

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

உங்களின் கருத்தாடல்கள் ஆக்கமான விவாதமாக அமைந்துள்ளது கண்டு மகிழ்கிறேன்.

//சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.//

12 ஓரைகளில்(இராசி), கதிரவன் கடந்துவரும் பயணத்தைக் கொண்டு கணக்கிடப்படுவது கதிரவக் காலக் கணக்கு முறை.

கதிரவன், சுறவம் அல்லது மகரத்திலிருந்து வடக்கு நோக்கி பயணமாவதை வடசெலவு(உத்ராயணம்) என்கிறார்கள். இந்தத் தொடக்கமே தமிழாண்டுத் தொடக்கம். அதுதான் சுறவ(தை) முதல் நாள்.

இந்த வடசெலவு குறித்து வடமொழியாளர் 'அக்ராயணா'என்கின்றனர். அக்ரா = முதல், அயணா = அயணம் @ பயணம். இதன் மூலச்சொல் அகர அயணம் எனும் தமிழே.

தை முதலே தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்பதற்கு வானியல் சான்றும் உளது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமி அன்பர் பாலாஜி,

//எவை ஆரிய அழுக்குகள் என்பதை சற்று விளக்க முடியுமா?//

வேண்டாமே! அதை விளக்கப் போய் பிறகு தமிழ்ப் புத்தாண்டு விவாதம் வேறு திசைக்குப் பெயர்ந்துபோய்விடும்.

//தயவு செய்து கீழ்க்காணும் தொட‌ர் சுட்டியை தொட‌ர்ந்து ப‌டியுங்க‌ள்.
http://www.sishri.org/puthandu.html//

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். //

பாதிரிமார்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே சமற்கிருத வேதாந்திகளால் ஆழமான பள்ளம் தோண்டப்பட்டுவிட்டது என்பதே உண்மையாக இருக்க முடியும்.

அந்தப் பள்ளத்தில் குடியிருந்து, தமிழன் குடியைக் கெடுத்தவர்கள் வேண்டுமானால் மேலைய பாதிரிமார்களாக இருக்கலாம்.

//இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள்.//

மன்னிக்கவும். வடவர் தோண்டிய பள்ளத்தைப் பதுங்குழியாக்கிக் கொண்டு குடியும் குடித்தனமும் நடத்திய தமிழையும் - தமிழனையும் தட்டியெழுப்பியவர்தான் மறைமலை அடிகள்.

அடிகளார் மட்டும் தோன்றியிராவிடில் அந்தப் பதுங்கு குழியான பள்ளமே பிறகு சவக்குழியாக ஆகியிருக்கும் தமிழுக்கும் - தமிழனுக்கும்.

மறைமலை அடிகளின் வாய்ச்சொற்களை (பேச்சு வழக்கு)மட்டுமே வைத்து முடிவெடுத்த ஜீவா அவர்கள், கொஞ்சம் பொறுமையோடு சிந்தித்து இருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்க மாட்டார்.

தமிழின் தொன்மை இன்றுவரையில் தொடர்வதற்குப் பாடாற்றிய பெரும் அறிஞராக மறைமலை அடிகளாரைத் தமிழ்க்கூறு நல்லுலகம் பார்க்கிறது.

அவர் வழியில் நின்று சிந்திப்பவர்கள் - செயல்படுபவர்கள் இன்று நிறைய உள்ளனர்.

தமிழின் நீடுநிலவலுக்குப் பெரும் பங்காற்றிய அவரை இப்படியொரு சிறு நிகழ்வைக் கொண்டு சிறுமைபடுத்துவதைக் குறுகிய சிந்தனையாகக் கொள்ள வேண்டும்.

//நவத்துவாரங்கள் வழியாகவும் ஆங்கிலம் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. தமிழைக் காக்க விரும்புவோர் முதலில் காயசுத்தி செய்துகொள்ளுங்கள்.//

நவத்துவாரங்கள் வழியாக ஆங்கிலத்தை உள்ளே விடும் தமிழனின் அறியாமை - நாணாமை - நாரின்மை - இயலாமைத் தனங்களை எண்ணினால் வருத்தமாகத்தான் உள்ளது. அதைவிட,

தமிழைக் காக்க விரும்புவோரைத் தமிழனே ஏளனம் - ஏகடியம் - பகடி செய்வது மகா மகா வருத்தமாக உள்ளது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//விக்கிபீடியாவில் இன்னும் சித்திரை மாத‌மே த‌மிழ் புத்தாண்டு என்று கூறுவ‌தை ப‌ற்றி..//

இதைப்பற்றிதானே அன்பர் பாலாஜி அவர்கள் நிறைய மறுமொழி எழுதி வருகிறார்.

அதற்கு என் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கிறேன்.

முடிவெடுப்பது உங்கள் கையில் நண்பரே.

//சித்திரையை இந்து ம‌த‌ புத்தாண்டு என்று கொண்டாடிக் கொள்ள‌ட்டும். ஆட்சேப‌னையே இல்லை. த‌மிழ‌ர் இன‌ம் ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்த‌து.//

சித்திரையை இந்து மதப் புத்தாண்டாக ஏற்கவோ அறிவிக்கவோ எவராலும் முடியாது.

ஏனெனில், அதற்கு அந்த மதத்தில் எந்த அடிப்படையும் உறுதிப்பாடும் (அங்கீகாரம்) கிடையாது.

இந்துக்களில் தமிழர் மட்டுமே சித்திரையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களாக இருக்கும் தெலுங்கு, மலையாளி, கன்னட, இந்திக்காரன் ஆகிய அன்பர்கள் தனித்தனியே புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.

பாவம்..! தமிழன் மட்டும்தான் சித்திரையைக் கட்டி அழ வேண்டியிருக்கிறது.

நீண்ட நெடிய தமிழர் வரலாற்றில், ஓர் இடைக்காலத்தில் சித்திரை தமிழ்ப் புத்தாண்டாக இருந்திருக்கிறது.

சித்திரையில் பிறப்பதாகச் சொல்லப்படும் 60 ஆண்டுகால கணக்கு பற்றிய செய்திகளும் சான்றுகளும் தமிழில் உண்டு.

ஆனாலும், தமிழர்க்குப் புத்தாண்டு தை முதல் நாளே என்பது அறிஞர்தம் முடிவு. அதற்கு இலக்கியத்திலும், மக்கள் வாழ்க்கையிலும், வானியலிலும் தக்க சான்றுகள் உண்டு.

ஆகவே, தை முதல் நாளையே புத்தாண்டாக ஏற்போம்.

அதற்காக, சித்திரையை யாருக்கும் தாரை வார்க்காமலும் இருப்போம்.

Anonymous said...

///சித்திரையை இந்து மதப் புத்தாண்டாக ஏற்கவோ அறிவிக்கவோ எவராலும் முடியாது////


///இந்துக்களில் தமிழர் மட்டுமே சித்திரையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களாக இருக்கும் தெலுங்கு, மலையாளி, கன்னட, இந்திக்காரன் ஆகிய அன்பர்கள் தனித்தனியே புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.

பாவம்..! தமிழன் மட்டும்தான் சித்திரையைக் கட்டி அழ வேண்டியிருக்கிறது//

புரியவில்லை!!! ??

தமிழ், தெலுங்கு, கன்னடர், மராத்தியர் போன்றோர் சித்திரையில் தான் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். கேரளத்தவரும் குஜராத்தியரும் மற்றும் பலரும் ஆவணியில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். இப்படி இருக்க இதை ஏன் இந்துக்களின் புத்தாண்டாக அறிவிக்க கூடாது? தமிழர்களின் மதம் வழிபாட்டு முறைமைதான் இன்று இந்து என்ற பெயரில் மருவியிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களுடையது. அப்படியிருக்க ஏன் தமிழனை சிந்தியாக, இந்துவாக சொல்லக்கூடாது? தமிழே மறைமொழியாக சங்கதத்தை உருவாக்கி அதனுடன் கலந்து இன்று பல‌ பிள்ளை மொழிகளை தோற்றுவித்தாள். அதனால்தான் தமிழனில் கலாச்சார எச்சம் பல வடிவங்களில் பரிணமித்து ஆலமரம் போல் கிளை விரித்துள்ளது,ஆனாலும் தன்னுடைய மூலவேர்களை அப்படியே விட்டுவைத்துள்ளது இந்து என்ற‌ சொல்லில் எங்கே வ‌ந்த‌து ம‌த அடிப்ப‌டை. சீனத்திலும், அரேபிய, மேற்க்கத்திய மொழிகளில் ஹிந்து என்ற‌ சொல்லின் பொருளே இந்திய‌ன் என்ப‌துதான் இதில் ச‌னாத‌ன்ம், புத்த‌ம், இஸ்லாம், கிறிஸ்த்த‌வ‌ம் எல்லாமே அட‌க்க‌ம். இத‌னால் சித்திரைதான் த‌மிழ‌னின்,(இந்திய‌னின்) புத்தாண்டாக‌ இருக்க‌ முடியும்.
அன்புடன் பாலாஜி

Blog Widget by LinkWithin