பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் ஏற்பாட்டில் '6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009' மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.
"உலகோடு நாம் - நம்மோடு உலகு" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறும்.
மாநாட்டின் உட்பொருள்கள்:-
1.செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகளும்.
2.காலந்தோறும், காலம் வெல்லும் தமிழ் இலக்கிய மேம்பாடு.
3.அன்றும் இன்றும் உலகளாவியத் தமிழர்களின் வாழ்வும் தாழ்வும்.
4.ஈழம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்.
5.வையகத் தமிழர்களின் தொழில் வணிகம் - கணினி வளர்ச்சிப் போக்குகள்.
(படத்தைச் சொடுக்கி முழு விவரம் அறியவும்)
நாள்:- 26, 26, 27 செப்தெம்பர் 2009
இடம்:- கோலாலம்பூர் பல்கலைக்கழக வளாகம்
பி.கு:-25.9.2009 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாநாட்டுத் தொடக்க விழாவில் தமிழ் மக்கள் அனைவரும் இலவயமாகக் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு:- டாக்டர் எஸ்.தருமலிங்கம் 012-3082609
உறவு நிலையிலும் - அறிவு நிலையிலும் - ஆய்வு நிலையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் அடித்தளமாக விளங்கப்போகும் இம்மாநாட்டிற்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வரவேற்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment