Tuesday, April 28, 2009

ஈப்போவில் முதன்முதலாகத் தொல்காப்பிய வகுப்பு



3000 ஆண்டுகளுக்கு முந்திய நமது முன்னோரின் பேரறிவுக் கருவூளமாய்த் தமிழில் கிடைத்திருக்கும் முதல் நூல் தொல்காப்பியம். அதனை முறையாகவும் எளிதாகவும் பயின்று பயனடைய மிகச் சிறந்த வாய்ப்பாக ஈப்போவில் தொல்காப்பிய வகுப்பு ஏற்பாடு செய்யப்படுள்ளது.

மலேசியத் திருநாட்டில் பல்வேறு நகரங்களில் தமிழ் ஆர்வலர்களுக்கு தொல்காப்பியத்தைச் சுவையாகவும் இனிதாகவும் கறிபித்து வரும், உங்கள் குரல் இதழாசிரியர் கவிஞர் செ.சீனி.நைனா முகம்மது அவர்கள் இந்த வகுப்பை நடத்தவிருக்கிறார்.

தமிழ் எழுத்து அமைப்பு - சொற்புணர்ச்சி - சொல்லாக்கம் - தொடரிலக்கணம் – தமிழரின் வாழ்வியல் கூறுகள் – களவியல் – கற்பியல் – மெய்ப்பாடு – உவமைகூறும் முறை – செய்யுள் இலக்கணம் – மொழிமரபுகள் – வாழ்வியல் மரபுகள் – இலக்கியக் கூறுகள் என பல்வேறு நிலைகளில் தமிழர்கள் அறிந்து தெளிய வேண்டிய அறிவொளி மணிகளைத் தன்னுள் குவித்து வைத்துள்ள பழம்பெரும் தமிழ்க் களஞ்சியம் தொல்காப்பியம் ஆகும்.

இவற்றை முறையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வது தமிழருக்குப் பெருமை மட்டுமல்ல; கடமையும் கூட.

மாதம் இருமுறை பொருத்தமான வாரநாள்களில் நடைபெறவிருக்கும் இவ்வகுப்பில் தமிழ் அன்பர்கள் – ஆர்வலர்கள் – இலக்கியவாணர்கள் – கவிஞர்கள் – எழுத்தாளர்கள் – விரிவுரைஞர்கள் – ஆசிரியர்கள் – உயர்நிலை மாணவர்கள் என அனைவரும் கலந்து பயன்பெறலாம்.

ஈப்போ, வி.கே சரவணபவா எண்டர்பிரைசு ஏற்பாட்டில் இவ்வகுப்பு எண்.126, லகாட் சாலை, ஈப்போவிலுள்ள நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோவில் மண்டபத்தில் நடைபெறும்.

வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தமிழன்பர்கள் 30-4-2009க்குள் ஏற்பாட்டாளரிடம் பதிவு செய்துகொள்ளவும்.

மேல் விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:- தமிழ்த்திரு.பிரபு (016-5478113)

தமிழ்மொழியையும் தமிழர் வாழ்க்கை மரபையும் அறிந்து தெளிய வாய்த்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை ஈப்போ வாழ் தமிழ் மக்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள்.மகிழ்ச்சியாகவுள்ளது...

Blog Widget by LinkWithin