Monday, May 26, 2008

தமிழ்ச் செம்மொழிச் சிறப்புமலர்



உலகத்தின் மூத்தமொழி தமிழ்!


உலகத்தின் முதல் தாய்மொழி தமிழ்!


இலக்கணக் கட்டமைப்பால் அறிவியல்மொழி தமிழ்!


இலக்கியச் செழுமையினால் செவ்வியல்மொழி தமிழ்!


மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே முழுமையடைந்த செம்மொழி தமிழ்!



அனைத்துலக மொழியறிஞர் பெருமக்கள்
ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட அறுபெருஞ் செம்மொழிகளுள்
அத்தனை தகுதிகளும் மொத்தமாய் உடைய ஒரேமொழி தமிழ்!

எனினும், இந்திய நடுவணரசு,
தமிழறிஞர்கள் 100 ஆண்டு போராடிய பின்னர்,
2004ஆம் ஆண்டுதான் தமிழைச் செம்மொழியாக
அதிகாரஞ் சார்ந்து அறிவித்தது!

அந்த வரலாற்றுச் சிறப்பின் பதிவாகவும்,
செந்தமிழின் செம்மைக் கூறுகளைத் தெளிவுற நிறுவியும்,
உலகளாவிய நிலையில் தமிழின் நேற்றைய – இன்றைய – நாளைய
நிலைமைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கியும்
துறைசார்ந்த அறிஞர்கள் தீட்டிய எழுத்தூவியங்களின்
தொகுப்பாக வெளிவந்துள்ளது செம்மொழிச் சிறப்புமலர்..!

செம்மொழியாம் தமிழுக்கென இப்படியொரு சிறப்புமலர்
இப்போதுதான் உலகிலேயே முதலாவதாக வெளிவருகிறது!
அதுவும், மலேசியத் திருநாட்டில் வெளிவருகிறது!


மலேசியாவில் வெளிவரும் 'உங்கள் குரல்' இதழின் ஆசிரியரும்
இறையருட் கவிஞரும் தொல்காப்பிய அறிஞருமாகிய
நல்லார்க்கினியர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின்
அரிய முயற்சியால் தமிழ்க்கூறும் நல்லுலகம் வியக்க வெளிவருகிறது!


1.செம்மொழி : பொதுவிளக்கம்
2.செம்மொழி : நேற்று – இன்று – நாளை
3.செம்மொழி : சிறப்பியல்புகள்
4.செம்மொழி : அக்கரை நாடுகளில்
5.செம்மொழி : தமிழ்க்கல்வி, கலை நிறுவனங்கள்

என்ற ஐந்து பிரிவுகளில்...

தமிழகம், மலேசியா, சிங்கை, இலங்கை சார்ந்த அறிஞர்களும்,
தமிழாய்ந்த மேனாட்டு அறிஞர்களும் வழங்கிய
40 அரிய ஆய்வுக் கட்டுரைகளையும்,
பழந்தமிழ்ப் புலவோர் முதல் பாரதிதாசனார் வரை
நந்தமிழ்ப் புலவர்களின் நறுந்தமிழ்க் கவிதை வரிகளை விளக்கும்
அரிய காட்சிகளாக அழகிய 20 வண்ண ஓவியங்களையும்,
இந்திய நடுவணரசின் செம்மொழி அதிகார ஆவணங்களையும்
இன்ன பிற அருமைசால் செய்திகளையும் தாங்கி,
320 பக்கங்களில் இதழ்விரிக்கும் இந்த மலர்,
உலக நிலையில் செம்மொழி பற்றி வெளிவந்துள்ள
முதல் முழுக் களஞ்சியமாகும்!

இந்த செம்மொழிச் சிறப்புமலரின் வெளியீட்டு விழா
28-05-2008ஆம் நாள், புதன்கிழமை, மாலை மணி 6.00க்கு
கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில்
உயிர்த் தமிழை உயர்த்திப் பிடிக்க வெளியீடு காண்கிறது!!
உலகத் தமிழரை ஊக்கப்படுத்த வெளியீடு காண்கிறது!!
மேல்விளக்கங்கள் பெற தொடர்பு கொள்க:-
UNGALKURAL ENTERPRISE, Room 2, 1st Floor, 22 China Street, 10200 Pulau Pinang, Malaysia.
TEL/FAX : 604-2615290

13 comments:

Anonymous said...

உலகில் முதன் முதலாக மாபெரும் முயற்சியாக செம்மொழி சிறப்பிதழை வெளியீடு செய்திருக்கும் கவிஞரும்,தொல்காப்பிய அறிஞருமாகிய தமிழ்த்திரு செ.சீனி நைனா முகம்மது அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். !தமிழ் மொழி வாழ்தால்தான் தமிழினம் வாழும் !

அன்புடன்,ஆதிரையன்

Anonymous said...

உலகில் முதன் முதலாக மாபெரும் முயற்சியாக செம்மொழி சிறப்பிதழை வெளியீடு செய்திருக்கும் கவிஞரும்,தொல்காப்பிய அறிஞருமாகிய தமிழ்த்திரு செ.சீனி நைனா முகம்மது அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். !தமிழ் மொழி வாழ்தால்தான் தமிழினம் வாழும் !

அன்புடன்,ஆதிரையன்

Anonymous said...

அன்பு வணக்கம் பல. தமிழைச் செம்மொழியாக அறிவித்த இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு கூட செய்யாத ஒரு அரும் பெரும் காரியத்தை மலேசியாவில் ஒரு தமிழர் செய்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும். மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் இதுவொரு பெருமையளிக்கும் சாதனையாகும். இந்த மலரை வாங்க வேண்டுமென்றால் எப்படி? எங்கே யாரைத் தொடர்பு கொள்ளுவது? தயவு செய்து விவவரம் தேவை.

நமது நாட்டில் இப்படிப்பட்ட ஒரு அரிய மலர் வந்திருக்கும் செய்தியை மிக அழகாக தெரிவித்துள்ள திருத்தமிழ் வலப்பதிவின் ஆசிரியர் சுப.நற்குணன் ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
இளையவேல்,
சிரம்பான்.

Anonymous said...

மலேசியாவில் இப்படி ஒரு சிறப்புமலர் வந்திருப்பது நமக்கு பெருமைக்குரிய விசயம். இந்த சிறப்பு மலர் உலகம் முழுவதும் பரவட்டும். தமிழின் புகழ் எட்டு திக்கும் பரவட்டும்.

-பட்டதாரி மங்கை

JeyaKalai said...

Welldone.Proud to have a Tamil blog like this. "Tai Mozhli, Nam Tamil Mozhli"..! Valga Tamil..!

Anbudan,
JeyaKalai

Anonymous said...

Good Luck !

JeyaKalai said...

Valga thangal tamil thondu. Inayatin vali iniya tamilai valarka nangalum thol kodupom unmai tamilargalai.

JeyaKalai said...
This comment has been removed by the author.
JeyaKalai said...

Dear Tamil lovers, log on malaysiaindru.com for news in Tamil..

JeyaKalai said...

SAVILUM TAMIL PADITHU SAAGA VENDUM, EN SAMBALUM TAMIL MANATHU VEGAA VENDUM !

Anonymous said...

இப்படி ஒரு சிறப்பு மலர் ந்மது மலேசியாவில் வருகிறது என்பது பெருமையிலும் பெருமை ஐயா.

-சித்தன் சிவாசி

Anonymous said...

Naam ellam thamizarai pirakka maa thavam purinthirukka veendum. ovvoru indianum innuulai (tamiz cemmozi cirappu malarai) vaangi padittu payan pera veendum enbathu en avaa.

Anonymous said...

வணக்கம் ஐயா. இந்த மலரை தலைநகரில் வாங்கினேன். மிக மிக சிறப்பாக உள்ளது. தமிழ் செம்மொழியின் முழு வரலாறும் இதில் அடங்கி உள்ளது. தமிழ் மொழியின் பெருமைகளை படிக்கும் போது மிக மிக ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு மேன்மையான ஒரு மொழிக்கு நாம் சொந்தமாக இருப்பதற்கு உண்மையிலே மிக மிக பெருமை பட வேண்டும். உலகில் முதல் முதலாக வெளிவந்துள்ள இந்த மலர் தமிழர்கள் எல்லாரும் படிக்க வேண்டிய ஒன்று.

அன்புடன்,
செல்வன் சிவநாதன், கோலாலும்பூர்.

Blog Widget by LinkWithin