மலேசியத் திருமண்ணில் வந்துதித்த தமிழ்நெறி ஞாயிறு பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் அவர்களின் தமிழ்ப் பாசறையில் உருவாகி, தமிழே தன்னுடைய உயிராகி, தமிழரே தன்னுடைய உணர்வாகி காலமெல்லாம் தமிழ்மொழி இன சமய விடுதலைக்கும் வாழ்வுக்கும் தன்னை ஈகப்படுத்திக்கொண்ட தமிழ்ப் போராளி ஐயா பழ.வீரனார் அவர்கள்(வயது 54) கடந்த 1-9-2007ஆம் நாள் காரிக்கிழமை இரவு மணி 10.10க்குத் தமிழ்ப்பற்றாளர்களை ஆழந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவன் திருவடி சேர்ந்தார்கள். அன்னாரின் தமிழ்ப்பணிகள் மலேசியத் திருமண்ணில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியன. பின்னாளின் மலேசியத் தமிழரின் வரலாற்றை எவரேனும் எழுதப் புகுந்தால் ஐயா பழ.வீரனாரின் அரும்பணிகளை விட்டுவிடுவாரானால் அது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்முடியும். அந்த அளவுக்குத் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும்பணி செய்துள்ள அன்னாரின் ஆதன் அமைதிபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையை வேண்டிக்கொள்கிறேன். அன்னாரின் அன்புசால் குடும்பத்தினர் எல்லாருக்கும் எனது ஆழந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அறிய கீழ்க்காணும் இணைய இணைப்பைச் சொடுக்கவும்.
இணைய இணைப்பு:- http://www.mozhi.net/palaveerar/Palaveerar.htm
இணைய இணைப்பு:- http://www.mozhi.net/palaveerar/Palaveerar.htm
2 comments:
சித்தர் பழவீரர் அவர்களுக்கு திருத்தமிழ் வீர வணக்கம் செலுத்தி எங்களின் துயரில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதற்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பழவீரர் அவர்களின் பணிகளை இணைய மயமாக்கும் முயற்சியில் பழவீரன்.கொம் எனும் இணையத்தளம் நிறுவப்பட்டுள்ளது. பழவீரரின் அரிய கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுரைகள், சித்த வேத விளக்கம்,சித்த மருத்துவக் குறிப்புகள், முலிகைகளின் அரிய ஒளிப்படங்கள், திருக்குறள் பழவீரரின் வீருரை, சித்தர் திருவள்ளுவர் ஒரு பார்வை, தமிழினம் எழுச்சியும் ஏற்றமும், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் நேற்று இன்று நாளை என அவரின் அனைத்து எழுத்துகளும் இத்தளத்தில் இணைக்கப்படும். பழவீரன் அகப்பக்கங்கள் இன்னும் முழுமைப் பெறவில்லை. மொழி.நெட் இணையத்தின் நிறுவனராக சித்தர் பழவீரர் விளங்கி வந்தார். மொழியின் மேம்பாட்டிலும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். சித்தரின் பணிகளை சிவப்பணியாக நாங்கள் தொடர்வோம்.
www.palaveeran.com
பூந்தளிர் பழவீரன்
9:59 AM
Post a Comment