தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்கவண்டும் என்ற போராட்டம் வெடித்துள்ளது. பா.ம.க தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்கள் அமைத்து வழிநடத்தும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் பணிகள் வரலாறு காணாத அளவுக்கு வெற்றிபெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இந்தச் சூழலில், நடிகர் கமலகாசன் தமிழ்ப்படத்திற்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது தவறல்ல என்றுகூறி, அதற்கு எடுத்துக்காட்டாக 'போன்', 'பஸ்' போன்றவைத் தமிழ்ச்சொற்கள் போலப் பயன்படுவதாகச் சொல்ல¢யிருக்கிறார். (தினமணிச் செய்தி 29.9.04)
கருவிகள் வேறு கருத்துகள் வேறு. ஒரு திரைப்படமோ, நாடகமோ, கதையோ ஒரு செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும். அதன் பெயரும் அதன் தாய்மொழியிலேயே இருக்கவேண்டும்.
காசுக்காக எல்லா மொழிப் படங்களிலும் வேசம்போடும் நடிகனுக்குத் தாய்மொழிமீது பாசம் இருக்க முடியாதுதான். அதற்காக அவன் அதையே போதனை செய்ய முற்படக்கூடாது. தனது அடுத்த படத்திற்குத் தமிழ்பாதி ஆங்கிலம் பாதி கலந்து பெயரிடுவாராம்! தன் குழந்தைக்குத் தான் பாதி அடுத்தவர் பாதி தந்தை என்பாரோ?
தமிழர்கள் நடிகர்களைப் போற்றத் தொடங்கியதால், ஒவ்வொரு நடிகனும் தன் விளம்பரத்தை வைத்துத் தமிழை எப்படியும் கேவலப்படுத்தலாம் என்று துணிந்துவிட்டார்கள். இவர்களை இனியும் பொறுப்பது கூடாது.
Saturday, May 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment