மலேசியத் தமிழறிஞர் மு.மணிவெள்ளையனார் காலமானார்
மலேசியாவின்
தமிழறிஞர்.. தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்.. தமிழியல் பட்டயக் கல்வியை
மலேசியாவில் அறிமுகப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழியல் கல்விப்
பட்டதாரிகளை உருவாக்கியவர்.. தமிழ்ப்புனல் ஐயா மு.மணிவெள்ளையனார் (M.Lit)
அவர்கள், 16.11.2011இல் இயற்கை எய்தினார்.
மலேசியாவில் தமிழைத் தமிழாகச் செழிக்கச் செய்த அறிஞர்களுள் ஒருவர்.
விளம்பரமே இல்லாமல் அமைதியாகத் தமிழுக்குப் பெரும் பணி ஆற்றிய பெருந்தகை.
திருக்குறள் நெறியில் வாழ்ந்து, இளையோர் மனங்களில் குறளியச் சிந்தனைகளை விதைத்து அரும்பணி ஆற்றியவர்.
தமிழியத் திருமணங்களை நடத்தி தமிழியக் குடும்பங்களை உருவாக்கிய தமிழ்த் தொண்டர்.
தமிழில் பிறமொழி கலப்பதை எதிர்த்து, தமிழ் தூய்மையாக இருக்க காலமெல்லாம் பாடாற்றிய கொள்கை மறவர்.
தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் புலமை கொண்ட நல்லறிஞர்; நற்றமிழர்!
தமிழ் ஆசிரியர்களையும்,
இல்லத்தரசிகளையும், பணி ஓய்வு பெற்றவர்களையும் தமிழியல் பட்டக் கல்வி
பயிலச் செய்து பட்டதாரிகளாக்கி பெருமைபடச் செய்த பண்பாளர்; நற்றமிழ்ச்
சிந்தனையாளர்.
அன்னாரின் மறைவு நற்றமிழர்க்குப் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆதன் அமைதி பெற இறைமையை இறைஞ்சுவோம்!
@சுப.நற்குணன்
No comments:
Post a Comment
வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்