Friday, July 31, 2009

தமிழர் மரபியல் - பாலியல் நோக்கு


தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் என்று 5 பாகங்கள் கொண்ட திருத்தமிழ் இடுகைகளைப் படித்துவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளரும், நற்றமிழ்ப் பற்றாளரும், 'வேர்களைத் தேடி' வலைப்பதிவருமாகிய முனைவர் இரா.குணசீலன் அவர்கள் எழுதிய மறுமொழி கீழே உள்ளது.

//நண்பரே தங்கள் மரபியல் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.. மிகவும் நன்றாகவுள்ளது.. தங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையானவை.. ஏற்கத்தக்கவை..!

தமிழர் மரபுகளைப் புறந்தள்ளும் யாருக்கும் தன்னைத் தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தகுதி இல்லை. தங்கள் இடுகைக்கு மிக நீண்டதொரு கருத்துரையை எனது வலைப்பக்கத்தில் இடுகையாக இட்டுள்ளேன். அதன் முகவரி.. http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_30.html//

'தமிழ் மரபியலில் பாலியல் நோக்கு' என்ற தலைப்பில் முனைவர் அவர்கள் எழுதிய அக்கட்டுரையை இங்கே படிக்கத் தருகின்றேன். சங்கப் பாடல்களில் காணும் பாலியல் விடயங்கள் தொடர்பில் நல்லதொரு விளக்கமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.


**************************
தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு)

கால வெள்ளத்தில் தமிழர் மரபுகள் பல தவறான புரிதல்களுக்குட்பட்டு வருவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.

• பழந்தமிழர் மரபுகளின் உயர்வுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளுதல்.
•பழந்தமிழர் மரபுகளில் சில காலத்துக்கு ஏற்பில்லாத நிலை கண்டு வருந்துதல்.

என்னும் இரு கருத்தாக்கங்கள் நம்மிடையே உள்ளன.சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களை முழுமையாகவும், ஆழமாகவும் கற்ற யாரும் தமிழர் மரபுகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

சங்க கால மக்களின் வாழ்வியல் பதிவுகளாகவே சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவ்விலக்கியங்கள் வாயிலாகத் தமிழர்தம் மரபுகளைக் காண விழைவோர், சரியான கண்ணோட்டத்தில் காண்பது வேண்டும். தவறான புரிதல்களால்தான் தமிழர் மரபுகள் பிழைபட உணர்தலும், குறைத்து மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது.

இன்றைய சூழலில் வலைப்பதிவுகள், தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாயில்களுள் முதன்மையானவையாக விளங்குகின்றன. வலைப்பதிவுகள் வழியே,
தமிழர் மரபு குறித்த தேடல்,
தமிழர் மரபு குறித்த புரிதல்,
தமிழர் மரபு குறித்த மதிப்பீடுகள்,
ஆகியவற்றைக் காணும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.

சில தவறான புரிதல்களைக் காணும்போது மனம் சிறிது வருத்தம் கொள்கிறது. (விரிவாகப் படிக்க)
  • நன்றி: வேர்களைத் தேடி

3 comments:

  1. வணக்கம் நண்பரே....
    தங்களுக்குக் கருத்துரைகயாக நான் இட்ட இடுகையைத் தாங்கள் தங்கள் வலைப்பதிவில் வெளியிட்டமை அறிந்து மகிழ்ந்தேன்...
    தங்கள் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது..
    தமிழ்மரபுக்காவலர்களுள் ஒருவராக நான் தங்களைக் கருதுகிறேன்...
    திருந்தமிழ், திருமுன்றில் ஆகிய வலைப்பதிவுகள் வழியாகத் தாங்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது..

    ReplyDelete
  2. Warning:
    we watch your blogger system.
    please avoid individual criticsm.
    -bloggers watch
    (புகார்கள் கிடைத்தமைக்கு அறிவித்துக் கொள்கிறோம்- தனிமனிதரின் வாழ்வு பணி குறித்து சாடல்களையும் இழிவுகளையும் பின்னூட்டங்களாக வெளியீடுவது சட்டப்படி குற்றம்)

    ReplyDelete
  3. >அறிவிப்பு:-

    மேலே 'வலைப்பதிவாளர்' கூறியதாக பின்னூட்டம் ஒன்று வந்துள்ளது. அதனைச் சொடுக்கிப் பார்த்ததில்,

    //Profile Not Available

    The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.

    If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.//

    என்றுதான் வருகிறது. அந்த அறிவுறுத்தலின் உண்மைநிலையை நான் அறியேன். இது அதிகாரப்படியான அறிவுறுத்தலா அல்லது அச்சுறுத்தலா அதையும் அறியேன்.

    வலைப்பதிவுகளில் இல்லாத தனிமனித சாடல்களா?

    மறுமொழிகளில் இல்லாத சவடால்களா?

    பின்னூட்டங்களில் இல்லாத கடுஞ்சொற்களா? கொச்சைகளா? பச்சைகளா?

    திருத்தமிழை மட்டும் குறிவைத்து இப்படியொரு அறிவுறுத்தலா? ஏன்? எப்படி? எதற்காக? யாரால்?

    எது எப்படி இருந்தாலும்,

    1.சாடல்களுடன் வரும் பின்னூட்டங்களுக்கு அதனை விடுப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும்..
    (இதனை ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறேன்)

    2.தனிமனித சாடல்கள் இன்றி மரபியல் தொடரும்..

    என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.

    (பி.கு:- இந்த இடுகைக்குச் சில பின்னூட்டங்கள் வந்துள்ளன. அனைத்திலும் யாரோ ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அனைத்தையும் தவிர்த்துள்ளேன். தனிமனித சாடலில் எனக்கும் உடன்பாடில்லை. என்னுடைய இடுகையிலும் மறுமொழியிலும் தனிமனித சாடல்களைத் தவிர்த்தே வந்துள்ளேன். மற்றவர்களும் இனி தவிர்ப்பது நலமே.)

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்