Thursday, May 14, 2009

ஈழத்தமிழருக்காக CNN வாக்கெடுப்பில் ஓட்டுப் போடுங்கள்

ஈழத்தமிழர்கள் விசயத்தில் (இலங்கை போரில்) சர்வதேசம் பங்கெடுக்க வேண்டுமா! வேண்டாமா என்று CNN கருத்துக்கணிப்பு நடத்துகிறது. இதில் பலரும் கலந்து கொண்டு தங்கள் வாக்கை சமர்ப்பித்து வருகிறார்கள். இதில் இது சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கையும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் (due to heavy traffic) தற்போது பின்னூட்ட பெட்டியை மூடி விட்டார்கள்.

ஒரு நாட்டின் பிரச்சனையில் மற்ற நாடுகள் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்றாலும், அங்கே நடப்பது போரில்லை அது இனப்படுகொலை என்பது பெரும்பாலானவர்கள் அறிந்தது. நேற்று முன்தினம் கூட 2000 பொது மக்கள் இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த போது கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள்.

இதற்கு ஐ நா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பத்திரிக்கை சுதந்திரம் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது, எனவே மனிதாபிமான அடிப்படையில் சிந்தியுங்கள்.

இந்த வாக்கெடுப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதில் நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் எந்த வித நஷ்டத்தையும் அடைந்து விடப்போவதில்லை. இன்னும் எவ்வளோ நேரம் அல்லது நாட்கள் இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரியவில்லை, எனவே முடிந்த வரை விரைவாக ஒட்டு போட்டு விடவும்.

உங்கள் வாக்கை CNN தளத்தில் இங்கே சென்று பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு அதிகபட்சம் 1 நிமிடத்திற்கு மேல் ஆகாது. இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள்.

ஈழ தமிழர்களுக்கு உங்களால் ஆன இந்த சிறு உதவியை செய்யுங்கள்.

No comments:

Post a Comment

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்