Monday, May 11, 2009

நிலவே எம்மைக் காப்பாற்று: ஈழக் கவிதை


பெருவானில் புகழோடு உலாவரும் நிலவே
பெருந்துயரில் மாய்கிறோம் காப்பாற்ற வாராயோ

வெள்ளியும் விண்மீனும் உனக்கு வழித்துணை
வெறியரும் கயவரும் எமக்குப் பெருவினை

கதிரவன் வந்ததும் உனக்கு விடுமுறை
கடைசி மூச்சுவரை எமக்குண்டோ விடுதலை

இருண்ட வானுக்கு நீவந்து ஒளிதந்தாய்
இருண்ட எம்வாழ்வுக்கும் சற்றேனும் வழிகாட்டு

பிறநாடுகளைக் கெஞ்சினோம் புறமுதுகு காட்டினர்
பிறைநிலவே நீயேனும் உதவிக்கு வாராயோ

வேண்டினோம் தெய்வங்களை வெறுமனே இருந்தனர்
வெண்ணிலவே நீயேனும் காப்பாற்ற வாராயோ...!

ஆக்கம்:காந்தன்

No comments:

Post a Comment

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்