Tuesday, May 19, 2009

நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!

தமீழத் தலைவர் – உலகத் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய பேரதிர்ச்சியான செய்திகளையும் படங்களையும் காணொளிகளையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா சொல்லும் செய்தியையும் காட்டும் படங்களையும் அப்படியே எடுத்து உலக ஊடகங்கள் ஓயாமல் ஒலி – ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

இணைய ஊடகத்திலும் இச்செய்திகள் காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. கொடுந்தீயாகத் தமிழர்கள் உணர்வுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த அவலச் செய்திகளுக்கு இடையில், தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய நம்பிக்கை இன்னமும் முற்றிலும் தளர்ந்துவிடவில்லை – தமிழர் மனங்கள் இன்னமும் சோர்ந்துவிடவில்லை – உணர்வுகள் இன்னமும் உறங்கிவிடவில்லை!

இருந்தாலும்கூட, வல்லாதிக்க இலங்கையின் போக்கினாலும் வல்லரசு ஊடகங்களின் தாக்கத்தாலும் உலகமெங்கும் விரிந்து பரந்திருக்கும் தமிழர்கள் சொல்லொனா அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாகி தவித்துக் கொண்டிருக்கின்றனர் – கண்ணீரில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் – கடுமையான மனப்போராட்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

தமிழ் மக்களின் உள்ளமும் உயிரும் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையில் வெந்துக் கொண்ருக்கின்றன.

எது எப்படியிருப்பினும், தலைவர் கட்டியெழுப்பிய விடுதலை இயக்கத்தின் மீது முழு நம்பிக்கையும் அசைக்க முடியாத பற்றுதலும் ஆழமான பிடிமானமும் மிக மிக உறுதியாக இருப்பதால்... வாருங்கள் தோழர்களே..

நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!

எவன் வந்து எந்தச் செய்தியைச் சொன்னாலும் சொல்லட்டும்.. எந்தப் படத்தைக் காட்டினாலும் காட்டட்டும்.. என்ன ஆதாரத்தை கொடுத்தாலும் கொடுக்கட்டும்..!!


தலைவரின் நிழலில் வளர்ந்த நமது உடன்பிறப்புகள் – நமது உறவுகள் – நமது போராளிகள் – நமது இரத்தத்தின் இரத்தங்கள் மிக விரைவிலே இரண்டில் ஒன்றைச் சொல்லுவார்கள்.. நமது மரண வலிகளுக்கு முடிவொன்று கூறுவார்கள்..!

தமிழ் உறவுகளே.. அன்பு உடன் பிறப்புகளே..
அதுவரை காத்திருப்போம்!
நம்பிக்கையோடு பொறுத்திருப்போம்!

2 comments:

  1. Anonymous19 May, 2009

    aaiyo ennda kadavule ethu poi thane.please andavaa unmaaiyai sollu kethiya

    ReplyDelete
  2. தலைவர் நிச்சயமாக நலமாக இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருப்போம். இனி தன் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் புலியாக மாறுவான். எப்போதெல்லாம் வாய்ப்பு கிட்டு கின்றதோ அப்போதெல்லாம் நம் இனத்திற்கு எதிரானவர்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தி கொள்ள (கொல்ல)வேண்டும். முட்டாள் சிரி லங்கா அரசாங்கம் சுயமாக வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்து கொள்கிறது. (ஒரு வேளை உலக நாடுகளில் இருந்து பணம், உதவி பெற அல்லது கடன் வாங்க ஒரு வழியோ ) . உண்மை போராட்டம் ஒய்ந்ததாக வரலாறு இல்லை. சரியாகச் சொன்னால் இனிமேல்தான் போராட்டம் திட்டமி்ட்டு வெவ்வேறு வழிகளில் அல்லது வெவ்வேறு விதங்களில் தொடரும். சிரி லங்கா அரசு ஈழத் தமி்ழர்களை மட்டுமல்ல உலக தமி்ழர்கள் அனைவரையும் எதிரிகளாக ஆக்கி கொண்டது மாபெரும் அடி.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்